அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன்.
கம்பனின் மீது தீராக் காதல் கொண்டு, அவனுடைய பாடல்களிலிருந்து உவமைகளையெல்லாம் நமக்குத் தந்துக்கொண்டிருப்பவர் தான் திருவாளர். அன்பு ஜெயா அவர்கள் தமிழ்ப் பந்தல்
ஆஸ்திரேலிய நாட்டின் ஆளும் கட்சியினை திருவாட்டி. சந்திரிகா சுப்ரமணியம் எவ்வாறு விமர்சிக்கிறார் என்று இங்கு பாருங்கள் -சந்திப்போமா? சிந்திப்போமா?
பணத்தைப் பற்றிய ஒரு விரிவான அலசலை, திரு. பக்கிரிசாமி இங்கே தந்திருக்கிறார் ஊக்கமது கைவிடேல்
கானா பிரபாவான இவர், தான் சந்தித்த வலைப்பதிவாளர்களைப் பற்றி அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். உலா
இவர் தன்னோட இன்னொரு வலைப்பூவில் தான் வலைப்பூ உலகில் பிறந்து 8 ஆண்டுகளை கடந்து விட்டதை நினைவு கூறுகிறார்.மடத்துவாசல் பிள்ளையாரடி
பெண்களை சக மனிதராக பார்க்காமல் நுகர்வுப் பண்டமாய்ப் பார்க்கிறார்களே என்று ஆதஞாப்படுகிறார் ஷ்ரேயா மழை
மகளின் குறும்பை மிக அழகான ஒரு கவிதையின் மூலம் சொல்லியிருக்கிறார் திருவாட்டி. கீதா மஞ்சுரி அவர்கள் - கீதமஞ்சுரி
ஆண்களும் பெண்களும் இரண்டு காதுகளை எவ்வாறு பயன்படுத்துக்றார்கள் என்று திருவாட்டி. யசோதா என்கிற மணிமேகலா அவர்கள் ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது ஆண்கள் விஷயங்களை ஒரு காதால் கேட்டு, மறு காதால் வெளியிடுவார்களாம் (நச்சுன்னு சொல்லனும்னா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுவாங்களாம்) ஆனால் பெண்கள்... நீங்கள் படித்துப் பாருங்கள்.அக்ஷய பாத்ரம்
திரு. ரட்னசீலன் அவர்கள் சிட்னி முருகன் கோவிலைப் பற்றிய விளக்கங்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார் - yarl puththan
சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை அவர்களின் சரித்திரத்தை இங்கே வழங்கியிருக்கிறார்கள் திரு. சிறீதரன் அவர்கள் - தமிழ் வலையின் மினி நூலகம்
சிட்னி முருகன் கோவிலில் வருடாந்திரம் நடக்கும் பங்குனி விழாவைப் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார் கஸ்தூரிபென்நினைவுகள் இலவசம்
நாம எல்லோரும் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் இங்க கோச்சடையான் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து, இறுதியில் தன்னோட ஒரு குட்டி கதை மூலமாக இந்த படத்தை சேர்த்த விதம் மிக அருமை. நீங்களும் படித்துப்பாருங்களேன் -படலை
இறுதியாக, இங்கு ஆஸ்திரேலியாவை இருப்பிடமாகக் கொண்டு மூன்று தளங்கள் இயங்குகின்றன.
1. ஈழத்து முற்றம். அதன் இணைப்பாளர் கானா பிரபா. ஈழத்து முற்றம்
3. உயர்திணை - அதன் இணைப்பாளராக யசோதா. உயர்திணை
உண்மையில் எனக்கு இதில் ஒரு சிலரை மட்டும் தான் தெரியும். அவர்களை மட்டும் எவ்வாறு அறிமுகப்படுத்துவது, கண்டிப்பாக இன்னும் சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணி, திருவாட்டி, யசோதா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபொழுது,அவர்கள் அரைமணி நேரத்திற்குள் மற்றவர்களின் வலைப்பூ முகவரிகளை தந்து உதவினார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
Nantrblogintamil.blogspot
3 comments:
இன்னுமொரு blog - http://www.shuruthy.blogspot.com.au/
இன்னுமொரு தளம் - http://www.akkinikkunchu.com/
அடாடா, இந்த வலைப்பூவை எனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் இந்த வலைப்பூவையும் இந்த பதிவில் http://blogintamil.blogspot.com.au/2014/06/blog-post_3.html இணைத்திருப்பேன்.
அவுஸ்திரேலியாவில் இன்னுமொரு Blog நடேசனின் www.noealnadesan.com இதில் இலக்கிய கட்டுரைகள் விமர்சனங்கள் சிறுகதைகள் இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளும் பதிவாகின்றன. அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் இதன் இணைப்பு இருப்பதைப்பார்க்கலாம்.
முருகபூபதி
மெல்பன்
Post a Comment