சிட்னியில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் - செ .பாஸ்கரன்

.

அமரர் கல்கி இரா கிரிஷ்ணமூர்த்தியின் சிவகாமியின் சபதம் நாவலை வாசித்து ரசித்தவன் நான் பலகால ஆண்டு இடைவெளிகளுக்குப் பின்பு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் விஜி ஈழலிங்கத்தின்  இலக்கிய இன்பத்தில் ஒலிவடிவாக வெளிவந்தபோது கேட்டதுடன் அந்த ஒலிப்பேழையை தேடி வாங்கியும் கேட்டு மகிழ்ந்தேன்.

அந்த காவியம் நாட்டிய நாடகமாக சிட்னி இசைவிழாவில் சனிக்கிழமை இடம்பெற்றபோது பார்க்கக் கிடைத்தது. நான் நினைத்தும் பார்த்திராத விதத்தில் சிவகாமியின் சபதம் மிக அற்புதமாக மேடையேற்றப்பட்டது .
முதலில் நான் நன்றிசொல்வது திரு ஜெகேந்திரனுக்குதான், அவர் நினைத்திருக்காவிட்டால் இதை இங்கு பார்த்திருக்கவே முடியாது .

மகேந்திர பல்லவனாக வந்த ஸ்ரீபாலன், மாமல்லன் நரேந்திர பல்லவனாக வந்த விபூஷன், நாகனந்தியாகவும் புலி கேசியாகவும் வந்த மதுரை முரளிதரன், சிவகாமியாக வந்த காவியா  முரளிதரன், நாவுக்கரசராக வந்த மனோகரன் , ஆயனச் சிற்பியாக வந்த சென்னை சுரேஷ்  , பரம்சோதியாக வந்த நடா கருணாகரன்  என்று அனைவருமே போட்டி போட்டுக்கொண்டு  நடித்தார்கள் ஒருவருக்கொருவர் சோடை போகாத நடிப்பு .அற்புதமாக இருந்தது.

உள்ளூர் கலைஞர்களின் நடிப்பும் ஆடலும் அருமையாக இருந்தது .குறிப்பாக நடன ஆசிரியர் சுகந்தி தயாசீலன் அவரின் மாணவிகள் மற்றும் எமது ஈழத்துக் கலைஞர் சர்மாவும் அவரது நண்பர்களும் பல திறமைகளை வெளிக்காட்டினார்கள் 



சிவகாமியாக ஆடிய காவியாவின் ஆடல் மனதில் பதிந்து விட்டது. கல்கி எப்படி சிவகாமியையும் அவளது ஆடலையும் வர்னித்திருந்தாரோ அப்படியே  கண்முன்னால் வந்து நின்றார் காவியா . அதேபோல் நாகநந்தியான புத்த பிட்சுவாகவே மாறி அற்புதமான நடிப்பை தந்திருந்தார் மதுரை முரளிதரன். ஆயனச் சிற்பியை எங்கே தேடிப்பிடித்தீர்கள் என்று கேட்கவேண்டும் போல் இருந்தது. கல்கியின் பாத்திர படை ப்பை  உள்வாங்கி செய்திருந்தார்.

காட்சி அமைப்புக்கள் மூலம் காஞ்சிமா நகரையும்  அதன் கலைப் படைப்புக்களையும்  கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள். பரதக்   கலையோடு மட்டுமல்லாது   கரகாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் குதிரை என்று நம் கலாச்சார விழுமியங்களையும் கொண்டுவந்தது அருமையாக இருந்தது .



காஞ்சியையும் வாதாபியையும் வடிவமைத்த இந்த சிற்பிகளான மதுரை முரளிதரன் , உமா முரளிதரன் , நடன ஆசிரியர் சுகந்தி தயாசீலன் இவர்களோடு சிட்னி கலைஞர்கள் அத்தனை பேருக்கும் தமிழ்முரசு அவுஸ்ரேலியா சார்பாக எனது பாராட்டுக்கள் .

இந்த நாடகம் முழு நிகழ்வாக மீண்டும் சிட்னியில் மேடை ஏற்றப்பட வேண்டும் பார்க்காத பலர் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 















நெறியாளர் மதுரை முரளி,காவியா முரளி 




2 comments:

Anonymous said...

Please write about local artist

Thanks

Anonymous said...

Better to be interdependent from the organizers in your future articles.

Thanks