உலகச் செய்திகள்


அமெரிக்கப் படைவீரரை கையளிப்பதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி : தலிபான் போராளிகளால் வெளியீடு

நைஜீரியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி
நைஜீரிய கிராமங்களில் போகோ ஹராம் போராளிகள் தாக்குதல்; 30 பேர் பலி

அமெரிக்கப் படைவீரரை கையளிப்பதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி : தலிபான் போராளிகளால் வெளியீடு

04/06/2014 ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களாக தலிபான் போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் படைவீரரான போவ் பேர்கடாஹ்லை அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கும் வீடியோ காட்சியை போராளிகள் வெளியிட்டுள்ளனர்.

கௌதமாலாபேயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக மேற்படி அமெரிக்க படை வீரரை போராளிகள் சனிக்கிழமை விடுதலை செய்துள்ளது. 
படைவீரரை விடுவிப்பதற்கு பதிலாக கௌதமாலாவிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அந்த கைதிகளின்  விடுதலையானது அமெரிக்கர்களது வாழ்வை அபாய நிலைக்குள் தள்ளக்கூடியது என அமெரிக்கக் குடியரசு கட்சியினர் எச்சரித்துள்ளனர்
நன்றி வீரகேசரி






நைஜீரியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி

02/06/2014 வடகிழக்கு நைஜீரியாவில் உதைபந்தாட்ட விளையாட்டு மைதானமொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 40 பேர்   பலியாகியுள்ளனர். அடமாவா மாநிலத்திலுள்ள முபி நகரிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 மேற்படி மாநிலமானது அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 3 மாநிலங்களில் அடமாவும் ஒன்றாகும். மேற்படி, தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை என்ற போதும் போகோ ஹராம் போராளிகளே காரணம் என நம்பப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வட நைஜீரியாவிலுள்ள  பாடசாலையிலிருந்து 200க்கு மேற்பட்ட சிறுமிகளை போகோ ஹராம் கடத்திச் சென்றதையடுத்து அப்போராளிகளால் குறைந்தது 500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரிய கிராமங்களில் போகோ ஹராம் போராளிகள் தாக்குதல்; 30 பேர் பலி

04/06/2014  வட நைஜீரியாவில் பொர்னோ மாநிலத்திலுள்ள கிராமங்கள் மீது புதிதாக தாக்குதல்களை மேற்கொண்ட போகோ ஹராம் போராளிகள் 30 பேருக்கும் அதிகமானோரை படுகொலை செய்துள்ளனர். 
பொர்னோ மாநிலுத்திலுள்ள குறைந்தது 6 கிராமங்களை செவ்வாய்க்கிழமை ஊடுருவிய போராளிகள் கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
கம்போடிய எல்லைக்கு அண்மையிலுள்ள அத்தகாரா கிராமத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் மக்களை தேவாலய வளாகமொன்றுக்குள் கூட உத்தரவிட்டுள்னர். 
இந்நிலையில் அந்த ஆயுததாரிகளை நைஜீரிய இராணுவத்தினர் எனக் கருதிய மக்கள் அவர்களது கட்டளைக்கு அடிபணிந்து தேவாலயத்தில் கூடிய வேளை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 
போராளிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தகவல்களை பரிமாறியமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் 10 இராணுவ ஜெனரல்களும் ஏனைய 5 சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்களும் நீதிமன்ற விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
போகோ ஹராம் போராளிகள் கடந்த மாதம் தம்மால் கடத்தப்பட்ட 200க்கு மேற்பட்ட சிறுமிகளை தொடர்ந்து பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி






No comments: