சிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14

.
படப்பிடிப்பு ஞானி 
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா இன்று 16.03.2014இல் இடம் பெற்றது ஆயிரக்கணக்கான  மக்கள்  இந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். இன்று முருகன் தேரில் ஏறி தெற்கு வீதிக்கு வந்தபோது மழை தூற  ஆரம்பித்து  வடக்கு வீதிக்கு தேர் வந்தபோது  மழை சற்று பலமாக இருந்தது. மழையையும் பொருட்படுத்தாது காவடிகள் ஆடிவர பக்தர்கள் பிரதிஸ்டை செய்ய பெண்கள் அடி அழித்து தேரை பின்தொடர தேவார பாராயணம் பாடிக்கொண்டு அடியார் கூட்டம் பின்செல்ல ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் திரு வீதி உலாவந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

வருகை தந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு  தண்ணீர்ப்பந்தல் தாகசாந்தி செய்துகொண்டிருந்தது. மழையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் சேவையாற்றிக்கொண்டிருந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக அஞ்சல் செய்துகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.






























1 comment:

Unknown said...

சிட்னி முருகன் ஆலயம் தமிழ் மக்களின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முருகன் கோவில் தனது வருடாந்த திருவிழாவை இன்று (16 மார்ச் 2014) இனிதே நிறைவு செய்தது. இவ்விழா குறித்த சிறப்பு வர்ணனை.

முருகன் ஆலய நிர்வாகத் தலைவர் தவபாலச்சந்திரன், செயலர் ஈழலிங்கம், குருக்கள் மதி ஆகியோரின் கருத்துக்களுடன் வர்ணனை

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/323820/t/Sydney-Murugan-Temple-Festival-Commentary/in/language