உலகச் செய்திகள்

.
அமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம்  மலேசிய விமானம் கடத்தப்பட்டது? 

மாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா

=====================================================================

அமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம்  மலேசிய விமானம் கடத்தப்பட்டது? 


13/03/2014   காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த போயிங் 777 விமானம் பறந்த மொத்தம் சுமார் 5 மணி நேர காலத்திலான தரவுகள் அந்த விமானத்தின் இயந்திரங்களிலிருந்து தன்னியக்க ரீதியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தரையிலுள்ள நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதன் பிரகாரம் அந்த விமானம் மேலதிகமாக 4 மணி நேரம் பறந்துள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
அதனடிப்படையில் மேற்படி விமானம் 2,200 மைல் தூரத்திற்கு பறந்திருக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அந்த விமானம் பாகிஸ்தானையோ அராபிய கடலையோ சென்றடைந்திருக்க கூடும். என புலன்விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மலேசிய எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனமோ தாம் காணாமல் அந்த விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போது அதன் இயந்திரங்கள் தகவல்களை வழங்குவதை நிறுத்தியிருந்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன பிற்பாடு 4 மணி 
நேரமாக மலேசிய விமானம் பறந்தது 
மலேசிய விமானமானது இறுதியாக காணப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதற்கு பின்னர் 4 மணி நேரம்  வானத்தில் பறந்து கொண்டிருப்பதாக அமெரிக்க புலன் 
விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. 
இந்நிலையில் மேற்படி விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதுவதாக அமெரிக்க வோல் ஸ்ரிட் ஜெர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில்  விசாரணையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க  விசாரணையாளர்களுக்கு நெருக்கமான இரு உத்தியோக பூர்வமற்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி  ஊடகம் அந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 
இந்த விமானம் காணாமல் போன தருணத்திலிருந்து 5 மணி நேர தரவுகள் அந்த விமானத்தின்  இயந்திரங்களிலிருந்து தன்னியக்க ரீதியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தரைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.  நன்றி வீரகேசரி 







 மாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா


13/03/2014     தென்சீனகடலில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்து சீனா 3 செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மூன்று சந்தேகத்திற்குரிய விடயங்கள் காட்டப்பட்டுள்ளன.
 22 மற்றும் 24 மீட்டரில் எடுக்கப்பட்ட ஒரு படமும் 13 மற்றும் 18 மீட்டரில் எடுக்கப்பட்ட படமும் 14 முதல் 19 மீட்டர் அளவிலான ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும், இது சந்தேகத்திற்குரியதுதான் என்பதால் 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி 6 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.     நன்றி வீரகேசரி 

)
இந்த விமானத்தில் 154 சீனப்பயணிகளும் 5 இந்தியர்களும் இருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் இருந்து 42 கப்பல்கள் 39 விமானங்கள் , போயிங் 777-200 விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 








No comments: