.
அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக தமிழ்
எழுத்தாளர் விழாக்களையும் கலை - இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் தமிழ்
இலக்கிய கலைச்சங்கம் முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை
- இலக்கிய சந்திப்பு அரங்கை முழுநாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி
குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Centenary Community
Hub சமூக
மண்டபத்தில் காலை 10 மணி முதல் கலை - இலக்கிய
சந்திப்பு அரங்கு நடைபெறும்.
இலக்கிய
கருத்தரங்கு - கவிதை அரங்கு - மாணவர்
அரங்கு
- நூல் அறிமுகம் - தமிழ்
விக்கிபீடியா பயிலரங்கு - கலந்துரையாடல் முதலான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அங்கிருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தவுள்ளது.
மெல்பனை
தளமாகக்கொண்டியங்கும் இச்சங்கத்தில் அவுஸ்திரேலியா மாநிலங்கள் விக்ரோரியா
- நியூசவுத்வேல்ஸ் - கன்பரா முதலான இடங்களில் வதியும்
கலை - இலக்கியவாதிகள் அங்கம்
வகிக்கின்றனர்.
விக்ரோரியா
மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகவும்
பல்தேசிய கலாசார ஆணையத்தின்
அனுசரணைகள் பெற்ற சமூகச்செயற்பாட்டு
இயக்கமாகவும் பதிவுபெற்றுள்ள இச்சங்கத்தின் வருடாந்த எழுத்தாளர் விழாக்கள் கடந்த
காலங்களில் மெல்பன் - சிட்னி
- கன்பரா முதலான
இடங்களில் நடந்துள்ளன.
மெல்பனில் இரண்டு நிகழ்ச்சிகள்
எதிர்வரும்
மே மாதம் 24 ஆம்
திகதி தமிழ்க்கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியையும் ஜூன்
மாதம் 14 ஆம் திகதி 14 ஆவது தமிழ்
எழுத்தாளர் விழாவையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் விக்ரோரியா
மாநிலத்தில் மெல்பனில் நடத்தவுள்ளது.
---0---
No comments:
Post a Comment