வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது. ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.
அன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்று கூடி, எமது ஒருங்கிணைந்த ஆதரவை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.
மார்ச் மாதம் 19ம் திகதி (புதன்கிழமை) காலை 11:30 மணிமுதல் 2 மணி வரை, கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக
சிட்னியிலிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 0469 089 883 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment