கஜறாகோ – Khajuraho - கார்த்திகா கணேஷர்

.
இளம் Saint உம் Julia வும் U.S - Bosten இல் இருந்து வந்து இந்திய Khajuraho யோகினி ஆலயத்தில் தமது திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினார். அதன் பிரகாரம் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, புரோகிதர் வேதம் ஓத, அக்கினி சாட்சியாக, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, சபையோர் சாட்சியாக Saint Julia வின் கழுத்திலே மூன்று முடிச்சுப்போட்டு  Julia வை மனைவியாக்கினான்.

இந்த Khajuraho கோயிலை தேர்ந்தெடுத்ததற்கு அங்கு காணப்படும் அழகிய சிற்பங்களே காரணம் எனவும் கூறினார். கி.பி 10 நூற்றாண்டில் பாதிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் காமசூத்திரத்தில் காணப்பட்ட ஆண் பெண் புணர்ச்சி நிலைகள் பலவும் அழகிய சிலை வடிவமாக அமைந்துள்ளது. தெய்வத்தை வணங்கும் ஆலயத்தில் இத்தனை இத்தனை ஆபாசமா என பலர் முகத்தை சுளிப்பதும் உண்டு. மகாத்மா காந்தியோ தமது  40தாவது வயதில் மனைவியுடன் வாழ்ந்தபோதும் பிரம்மச்சாரியத்தை அனுட்டித்தார். இந்த கோயிலை பார்வையிட்ட மகாத்மா காந்தி கொதிப்படைந்து இதை தகர்த்தெறிய வேண்டும் என கூறினாராம். மகாத்மா காந்தி இவ்வாறு கூறியபோதும் UNESCO ஸ்தாபனம் இந்த கோயிலை World Heritage Site   ஆக அதாவது வருங்கால சந்ததியினருக்காக காப்பாற்ற படவேண்டிய முக்கிய இடமாக பாதுகாக்கிறது.





அந்த சிற்பங்களில் ஆணையும் பெண்ணையும் அங்கங்களையும் மட்டும் பார்த்து ஆபாசம் என வர்ணிப்பதை விடுத்து, இச்சிற்பங்கள் தோன்றுவதற்கான காரணிகளை  நாம் அறிதல் வேண்டும். இந்த சிற்பங்கள் மூலம் நாம் காலங்கடந்த வரலாற்று உண்மைகளையும் அவை தோன்றுவதற்கான சிந்தனைகளையும் அறிய வேண்டும். அப்போதுதான் அக்கலைகளின் பெருமைகளை மட்டுமன்றி நியாயங்களும் அவற்றின் தர்மங்களும் புரியும்.
இந்துமதம் இயற்கை நெறிகாலத்தில் இருந்து ஆரம்பமானது. ஆண் பெண் உறவால் இனபெருக்கம் செழிப்பும் ஏற்படுவதை நோக்கிய மனிதன், பிரபஞ்சத்தின் உற்பத்திக்கும் செழிப்பிற்கும் பயிர் வழத்திற்கும் ஆண் - பெண் போன்ற எதிரும் புதிருமான அம்சங்கள் உண்டென கருதிறான். பிரபஞ்சத்தின் தோற்றம் வழர்ச்சிக்கு ஆண பெண் உறவு போன்ற ஒன்றே காரணம் என எண்ணுவது சமுதாய சிந்தனை வழர்ச்சியின் ஒரு நிலையே.
இதுவே சிவலிங்க வழிபாடா கவும் உருப்பெற்றது. உலகத்திற்கு மூலகாரணம் சிவசக்தியே. சிவம் என்பது ஆண், சக்தி என்பது பெண். இவ்வுண்மையை உணர்த்தவே சிவலிங்கம் தோன்றியது. இலிங்கத்தின் அடிப்பாகம் வட்டமாகவும் தட்டையும் ஆனது. இது சக்தியை குறிக்கும். மேலே உள்ள குழவி போன்ற பகுதி சிவத்தை குறிக்கும். இப்புராதன சிந்தனையே எம்மிடையே மதவழிபாட்டு சின்னமாக நிலைத்துவிட்டது.
இந்த சிந்தனையின் வழியாக உடல் மெய்யானது என கொண்ட சமுதாயமே உடற்கூற்றியல் (Anatomy) உடற் தொழிலியல் (Pysiology) ஒளடதவியல் என்பவை தோன்றி வழரவும் வழிவகுத்தது. உடலை மெய்யானது என கொண்ட சமுதாயமே அதை திடமாக பராமரிக்கும் வழிவகைகளை கண்டறியவும் முற்பட்டது. லௌகீக இன்பங்களும் மனித உயர்வுக்கு வேண்டியவை என கொள்ளப்பட்ட சமுதாயமே, உடல் இன்பத்தை போற்றி வழர்த்தது. இந்த சிந்தனையின் பேறாகவே வரத்ஸாயனரும். அதீவிரராம பாண்டியனும் காமயத்திரங்களை எமக்கு தந்தனர்.
பிற்பட்டு வந்த ஆன்மீக வாதிகள் பொருட்கள் யாவும் மாயை நிலையற்றது என போதித்தனர். அதற்கு மேலும் போய் உயிர் ஆன்மா என்ற தத்துவவிசாரனையில் இறங்கியதால் உடலுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறிவிட்டனர். “காயமே இது பொய்யடா காத்தடித்த பையடா” என்ற அழவிற்கு உடலை விட்டு நீங்கி இன்னொரு உடலை அடையும் எனவும் கற்பனா உலகில் வாழ தலைப்பட்டனர். அதற்கு மாறாக உடம்பில்லாமல் உயிரில்லை. இரண்டும் தனிதனியாக இயங்கமுடியாது. ஆகவே உடலை பேணுவதே உயிரை பேணுவதாகும் என்ற சிந்தனை வயப்பட்டவரே எமது சித்தர்கள்.
அந்த சிந்தனையே திருமூலரும்
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேர மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தோர்
உடம்பை வளர்த்தே உயிர் வளர்த்தோனே”
என்றார்.
தமிழ் மொழியில் உடலை ‘மெய்’ எனவும் கொண்டனர். அதாவது உடல் மெய்யானது என்பதை வலியுறுத்தவே உடல் “மெய்” எனப்பட்டது.
பிற்பட்ட காலத்தில் தோன்றிய பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் புலன் இன்பத்தை முற்றாக வெறுத்தன. சன்னியாசம் வெறிபோல சமூகத்தை பிடித்தது. இத்தகைய சிந்தனைகளின் மோதல்கள் வலுப்பட்ட காலத்திலே மனித உடல் இன்பம், நிலையான வாழ்வு என்பதை வலியுறுத்த கோயில்களில் உடல் இன்பத்தை மக்களுக்கு உணர்த்த இத்தகைய சிற்பங்கள் வழக்கப்பட்டிருக்கலாம்.
ஆத்மிகவாதிகளும் பௌத்த சமண மதங்களும் துன்பமே வாழ்வு. துன்புறுதலே மனிதவாழ்வு. இப்பிறப்பிலே துன்பத்தை சகித்து மறு உலக இன்பத்திற்கு உழையுங்கள் வழிபடுங்கள் என வலியுறுத்திய சிந்தனைக்கு எதிராக, மானிட வாழ்வு இன்பமானது என வலியுறுத்த இந்த சிற்பங்கள் ஆக்கப்பட்டவையா?
லௌகீக இன்பங்களில் மனிதருக்கு அதிக ஈடுபாடு நேர்ந்ததால் இக்கலைகள் தோன்றியிருக்கலாம். அதன்பின்பு மனிதனை மட்டுப்படுத்த லௌகீக இன்பங்களை மறுக்கின்ற மதங்கள் தோன்றி இருக்கலாம். இத்தகைய சிலைகள் வடித்ததற்கு எது காரணம் என திட்டவட்டமாக நாம் கூறமுடியாது. ஏனெனில் இது காலம் கடந்த கலைவடிவம். அவற்றை பார்க்கலாம்  வியக்கலாம் ரசிக்கலாம்
கடந்த ஆயிரம் வருடங்களாக அவற்றை பலகோடி மக்கள் பார்த்து வருகிறார்கள். விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் இடம் அழிக்கும். இந்த சிற்பங்கள் பார்ப்போரை உசுப்பிவிடும் சக்தி வாய்ந்தவையே.

No comments: