அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இரானுவத்தினர் மோதல்
நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்
சிரியாவில் படையினர் தாக்குதல் 62 பேர் உயிரிழப்பு; தொடரும் மோதல்கள்
கலிபோர்னியாவில் காட்டுத் தீ
======================================================================
அல்-கொய்தா தாக்குதல் அச்சுறுத்தலால் 25 அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன
5/8/2013 அமெரிக்காவானது அல் - கொய்தா போராளிகளால் தாக்குதல்கள்
நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் மத்திய கிழக்கு உள்ளடங்கலான
நாடுகளிலுள்ள தனது 25 தூதரகங்கள் மற்றும் பிரதிநிதிகள்
அலுவலகங்களை ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடியுள்ளது.
அதேசமயம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் கடந்த
வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உலக பயண எச்சரிக்கையானது இந்த
மாத இறுதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அல் - கொய்தா
போராளிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுவதாக
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி முடிவுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளதாக கருதப்படுகின்றது.
அல்- கொய்தா தலைவர்களுக்கிடையிலான இரகசிய உரையாடல்கள் சிலவற்றை அமெரிக்க
அதிகாரிகள் ஒட்டுக்கேட்டதாகவும் அதில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்
நடத்தும் திட்டம் தொடர்பாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்குள் பாகிஸ்தான், லிபியா மற்றும் ஈராக்கில்
இடம்பெற்ற சிறையுடைப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக்கான அல்- கொய்தா
போராளிகள் தப்பிச்சென்றுள்ளனர்.
இதுதவிர ரம்சான் மாதம் எதிர்வரும் சில தினங்களில் நிறைவடைகின்றமை போன்ற காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்நிலையில்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்த விவகாரம் தொடர்பில்
கலந்துரையாட சிரேஷ்ட பாதுகாப்பு குழுவினரை சனிக்கிழமை இரவு
சந்தித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸின் தலைமையில் இடம்பெற்ற அந்த
சந்திப்பில், பாதுகாப்பு திணைக்களம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு
பிரிவின் செயலாளர்கள், 'எப்.பி.ஐ.', 'சி.ஐ. ஏ' மற்றும் தேசிய பாதுகாப்பு
முகவர் நிலைய தலைவர்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் மூடப்பட்ட தூதரகங்களில் ஐக்கிய
அரபு எமிரேட்ஸ், அல்ஜீரியா, ஜோர்தான், ஈராக், எகிப்து, சவூதி அரேபியா,
டஜிபோரி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சூடான், குவைத், பாஹ்ரெயின், ஓமான்,
மெளரிடானியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் அமெரிக்க
தூதரகங்கள் உள்ளடங்குகின்றன. நன்றி வீரகேசரி
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இரானுவத்தினர் மோதல்
7/8/2013 ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து
இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ
வீரர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று
காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு
இராணுவத்தினரிடையேயும் கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது. இதில் பாகிஸ்தான்
இராணுவத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி
செய்துள்ளது.
தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..நன்றி வீரகேசரி
நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு: மட்டக்களப்பு உறவினர்கள்
6 ஆகஸ்ட், 2013
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்
சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது
குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும்
துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட
கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின்
பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என
கூறப்படுகின்றது.
ஏற்கனவே
நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன்
தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி
தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு
மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிபிசி தமிழோசைக்கு கூறினார்.
தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று
விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு
சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து
விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை
நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும்
அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும்
சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.
53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற
ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு
கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும்
கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார். நன்றி BBC தமிழ்
சிரியாவில் படையினர் தாக்குதல் 62 பேர் உயிரிழப்பு; தொடரும் மோதல்கள்
No comments:
Post a Comment