பேராசிரியர் சிவநாதனைப் பற்றி

.
சென்ற வாரம் இந்த செய்தியை தமிழ்முரசு பிரசுரித்திருந்தது இவர் சிட்னியில் வசிக்கும் சிவபாலகன் அவர்களுடைய சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது
ஆசிரியர் குழு 

EPIR Personnel headshots - December, 2009
அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முயற்சியாளர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்கப் படைகளுக்காக பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பம், மேர்க்கியூரி கட்மியம் ரெலுரைட் என்ற குறைகடத்தி மூலப் பொருளை மையமாகக் கொண்டது. அவர் தம்மை வரித்துக் கொண்ட தேசத்தின் ஷகாவலர்களாக அமைந்துள்ளவர்களை பாதுகாக்கும்| தொழில்நுட்பத்தை உருவாக்கியமைக்காக கௌரவிக்கப்படுகிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இலினொய்ஸ் மாநிலத்தில் சிவநாதன் லெபோரட்டரிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் சிவநாதன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரது நிறுவனம் புற ஊதாக் கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் சீல் படையணி, பாகிஸ்தானின் அபோத்தாபாத் நகரில் அல்கொய்தா வலைப்பின்னலின் தலைவர் ஒஸாமா பின் லாடனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில், பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது முக்கியமான விஷயம்.
பேராசிரியர் சிவநாதனைப் பற்றி
EPIR Personnel headshots - December, 2009
  • எட்டு பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை
  • பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
  • தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் (வல்வெட்டித்துறை), தாயார்: சமய, விஞ்ஞான ஆசிரியர்
  • ஆரம்பக்கல்வி: சரஸ்வதி மகாவித்தியாலயம்
  • இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975)
  • உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980)
  • முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
  • ஸ்தாபகத் தலைவர்: சிவநாதன் லெபோரட்டரீஸ், இன்ஸ்பையர்
  • வேறு பதவிகள்: இலினொய்ஸ் பல்கலைக்கழக நுண்பௌதீகவியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளர், புற ஊதாக் கதிர் மற்றும் மில்லிமீற்றர் அலைவரிசைகள் சஞ்சிகையின் ஆசிரியர் பீட அங்கத்தவர்
  • கௌரவ பட்டங்கள்: இரவின் நண்பன் – அமெரிக்க இராணுவத்தின் பட்டம் (2005)