கவிஞர் இந்திரனுடன் ஒரு மாலைநேரச் சந்திப்பு..! - வி. ரி. இளங்கோவன்

.
கலை விமர்சகர் - மொழிபெயர்ப்பாளர் - கவிஞர் இந்திரனுடன்
ஒரு மாலைநேரச் சந்திப்பு..!

கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார்.

நேற்று மாலை (07 - 06 - 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது.

பாரிஸ் மாநகரில் ''ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ''சமரா கோணர் " உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் - கவிஞர் தா. பாலகணேசன் - திருமதி பாலகணேசன் - கவிஞர் க. வாசுதேவன் - ''தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் - எஸ். குமாரதாஸ் நேசன் - இ. குலம் - மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.






புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து வரும் படைப்புகள் - தமிழுக்குக் கொண்டுவரப்படும் பிறமொழி (மொழிபெயர்ப்புப்) படைப்புகள் - அடுத்த சந்ததியினரின் படைப்பாற்றல் - கவிதைகள் ஒப்பீடு - உலகளாவியரீதியில் தமிழ் மக்களின் - தமிழ்மொழியின் எதிர்காலம் ஆகியன உட்படப் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்த இக்கலந்துரையாடல் ''தமிழமுதம்" வானொலியில் நேரலையாக ஒலிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கடந்த வருடம் ஆடி மாதம் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் நடாத்திய ''இலக்கிய மாலை" நிகழ்விலும் கவிஞர் இந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருந்தார்.