மெல்பேர்ன் மில்பார்க் தமிழ் பாடசாலையின் கலை விழா - 2013

.
                                                             நவரத்தினம் அல்லமதேவன்.


மில்பார்க் தமிழ் பாடசாலையின் கலை விழா - 2013  Barry Road Community Hall, Thomastown   இல் ஜுன் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிpகவும் சிறப்பாக, மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக நடைபெற்றது. இந்த ஆண்டுக் கலை விழாவின் ஆரம்ப நிகழ்வாக அமைதியாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பாடசாலைக் கீதத்தினை மிகவும் இனிமையான இசையுடன் இசைத்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவணக்கம் நிகழ்ச்சியில் இந்து, கிறீஸ்த்தவ மதங்களுக்குரிய பாடல்கள் அழகாகவும், பக்தி சிரத்தையோடும் பாடினார்கள். பாடசாலையின் அதிபர் திரு.யசோதரலிங்ஙகம் ஜெயந்திகுமார் அவர்கள் சமூகமளித்த அனைவரையும் வரவேற்று தனது உரையை வழங்கியிருந்தார். அடுத்து சின்னஞ் சிறிய பிள்ளைகள் அழகியதொரு தீப நடனம் ஆடினார்கள்.ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா தனதுரையில் தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றியும், தமிழ் மொழி கற்பதில் பிள்ளைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்தார். ஈழத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வருகை தந்திருந்த திரு.பரமநாமன்,  திரு.ரவிஸ்க்கந்தன் ஆகியோர் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியர்களின் பங்களிப்புகள், தமிழ் மாணவர்களின் முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பாராட்டி தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தார்கள்.
மாணவர்களின் முத்தமிழ் நிகழ்ச்சிகளாக சிறுவர் பாடல், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், தமிழ்ப் பேச்சு, அபிநய நடனம், கோலாட்டம், நடனம் என்பனவும், ~~பேசுவோம் தமிழ்"; என்ற பெயரில் பாடசாலையின் பழைய மாணவர்கள் பங்கேற்று, அற்புதமாக நடித்த நாடகம் என்பனவும் இடைவேளைக்கு முன்னர் நடந்தேறியது. இடைவேளையின் போது அனைவருக்கும் வாய்க்கு ருசியான பண்டங்களும், கொத்து ரொட்டிகளும் இரவு உணவாக வழங்கப்பட்டன.


கலை விழா நிகழ்ச்சியில் இடைவேளைக்குப் பின்னர் ~~சித்திரை வருடப்பிறப்பு", ~~முட்டாள் யார்", ~~வாழ்வு தந்த வள்ளல்", ~~மதுரையை எரித்த மணவாட்டி", என்ற நான்கு நாடகங்கள் அரங்கேறின. மாணவர்கள் அனைவரும் அற்புதமாகத் தத்தமது நடிப்புக்களை வெளிக்கட்டியிருந்தமையைப் பாராட்டியாக வேண்டும். இன்தமிழின் அழகியவடிவில் அவர்கள் மனனம் செய்தவற்றை அங்கு பிழையறத் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் பேசியும், நடித்தும் திறமைகளை வெள்க்காட்டினார்கள்.

பழைய மாணவர்களின் பெற்றோர்கள் பங்றே;ற பிரபல்யமான ஆங்கிலப் பாடலான ~~கங்கம் ளுவலடந......." என்ற பாடலை தமிழ், ஆங்கில மொழியில் கலப்புச் செய்து மிகவும் அழகாகவும், அதேவேளை இளமைத் தோற்றங்களில் வேடம் கொண்டு நடனத்தினை வெளிக்காட்டியதன் மூலம் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தமை நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது எனலாம்.

பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதன் நிமித்தம் அனைத்து மாணவர்களுக்கும் பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது. புலம் பெயர் நாட்டில் பிறந்த எமது பிள்ளைகள் தாங்கள் கற்றுக் கொண்ட செந்தமிழ் மொழியை பிழையற உச்சரிப்பதில் இருந்த ஆர்வத்தினை நாம் பாராட்டுவதோடு விட்டுவடாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். ஆண், பெண் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டதைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை பெற்றோர்கள,; ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் சகல நிகழ்ச்சிகளையும் இயன்றவரை திறமையாக ஒழுங்கு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடசாலையின் ஒருங்கமைப்பாளர் திரு.சிவயோகநாதன் அவர்கள் சகலருக்கும் நன்றி தெரிவித்தார். எமது எதிர்காலச் சந்ததிகளை, பிள்ளைகளை வழிநடத்திச் செல்லும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம், மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அவர்களின் அளப்பரிய பங்ளிப்பிற்கும், ஊக்குவிப்புக்கும் எனது நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள். மற்றய தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அவர்களின் செயற்பாடுகள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. புலம் பெயர் தமிழர்களாகிய நாம் அதையிட்டுப் பெருமைப்படவேண்டும்.
தமிழ்ப் புலவன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடலின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றது. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழ் வாழ்க! வளர்க!!