எமது சினிமா
.......................
எமது சினிமா என்பது ஈழத்தின் தமிழ் சினிமா.
வளரும் நிலையிலிருந்த எமது சினிமா
1983 இலும் 2009 இலுமாக இரண்டு தடவைகள் அழிக்கப்பட்டது.
எனினும் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தளிர்க்கிறது.
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அது மறுபடி துளிர்க்கிறது.
ஈழத் தமிழர்களாகிய நாம் தனித்துவமானவர்கள்.
எமது சினிமா எமக்கேயான தனித்துவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.எமது வாழ்வை உள்ளது உள்ளபடி சித்திரிக்க வேண்டும்.
எமது சினிமா என்பது தமிழ்நாட்டின் சினிமா அல்ல.
தமிழ்நாட்டின் சினிமாவின்
பொய்மையும் மாயையும் கொண்ட தீங்கான அம்சங்களின்
பாதிப்பிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும்.
ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளின் முன்னர்
ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியம்
எவ்வாறு தனித்துவமாக வளர்த்தெடுக்கப்பட்டதோ,
அதே போன்று எமது சினிமாவையும்
தனித்துவமாக வளர்த்தெடுக்க வேண்டிய காலகட்டம் இது.
உலகின் ஏனைய மொழிகளில் உள்ள தரமான திரைப்படங்கள்
பற்றிய அறிமுகமும் அவை பற்றிய பயிற்சியும் ரசனையும்
இதற்குப் பேருதவி புரியும்.
இதற்குத் தொடர்ச்சியான செயற்திட்டம் ஒன்று தேவை.
உலகு எங்கும் பரந்து வாழும் எம்மவரின் சினிமா முயற்சிகள் பற்றிய
தரவுகளும், ஆக்கபூர்வமான விமர்சனங்களும்
அம்முயற்சியாளர்களின் ஒருங்கிணைவும் தேவை.
அதன் முதற்படியை ஆரம்பிக்க முயற்சிக்கிறோம்.
உலகத் தரமான திரைப்படங்களை இலவசமாகத் திரையிடலும்
அதன் பின்னரான கலந்துரையாடலுமான
எமது நிகழ்வுகளுக்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
YARL FUNCTION CENTRE இன் அனுசரணையுடன்
முதலாவது திரையிடல் நிகழ்வு
221A Wentworth Ave Pendle Hill இலுள்ள
YARL FUNCTION CENTRE மேற்தள வரவேற்பு மண்டபத்தில்
முதலாவது திரையிடல் நிகழ்வு
221A Wentworth Ave Pendle Hill இலுள்ள
YARL FUNCTION CENTRE மேற்தள வரவேற்பு மண்டபத்தில்
16-06-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்
அன்புடன்
சகா“ஸ்
(சார்பாக எஸ். ரஞ்சகுமார்)