விஸ்வரூபம் ரூ.150 கோடி வசூலிக்கும்! கமல் நம்பிக்கை!!

.


kamal-1விஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது. இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கமல் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படம் தமிழகத்தில் சுமார் 500 தியேட்டர்களில் வருகிற ஜன-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்தார். ஆனால் அதேசமயம், டி.டி.எச்.இல் வெளியிடும் முடிவு குறித்து இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் கமல் அளித்துள்ள பேட்டியில், ஒரு தொழில்நுட்ப கலைஞனாக சினிமாவில் நுழைந்தேன். ஆனால் துரதிர்ஷடவசமாக நடிகனாகிவிட்டேன். சினிமாவில் நான் முழுமையாக திருப்தி அடைந்திருந்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பேன். ஆனால் நான் திருப்தி இல்லாமல், மனநிறையற்றவனாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். நான் தேவை உள்ளவனாக வாழ்கிறேன். ஆனால் சிலர் இதை கண்டுபிடிப்பு என்றோ, சாதனை என்றோ கூறுகின்றனர். நான் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று இறங்குவதே பெரும்பாலான சமயங்களில் என்னைக் காயப்படுத்தி இருக்கிறது. ஒரு சாதனை நிகழ்ந்தால் அதனோடு ஒன்றி வாழ்வேன்.

விஸ்வரூபம் படம் பெரும்பொருட்ச் செலவில் எடுக்கப்பட்ட படம். என்னிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் கொட்டி இப்படத்தை எடுத்துள்ளேன். இது என்னுடைய கனவுத்திட்டம். எனது கனவை என்னு‌டன்‌ சேர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சரியாக பணிபுரிந்து உள்ளனர் என நம்புகிறேன். விஸ்வரூபம் படம் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டியாக வேண்டும். அப்படி அது தாண்டவில்லை என்றால் நிச்சயம் அது தோல்விப்படம் தான். விஸ்வரூபம் வெளியான முதல்வாரத்திலேயே அந்த வசூல் இலக்கை எட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். 

நன்றி:thenee

1 comment:

Ramesh said...

வருகுது வருகுது விலகு விலகு எண்டு கமலும் சொல்லுறேர் பின்ன தியேட்டர்காறளும் விலகிறமாரித் தெரியேல்ல. இனி வந்தபிறகு பாப்பம் எண்டு இருக்கிறன்.

ரமேஸ்