இலங்கைச் செய்திகள்

'கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம்"? கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்

 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன

2009ல் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஒஸ்லோ மேற்கொண்ட நகர்வுகளை பிரபாகரன் தடை செய்தார் என்கிறார் எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி (3)

பிரபாகரனின் குடும்பத்தை விமானம் மூலம் காப்பாற்றுவதற்கு நெடியவன் நிதியுதவி செய்யவில்லை. - எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி’ (4)

தொடரும் ஒரு தமிழ்ப் பலவீனம் குறித்து
செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.
- யதீந்திரா
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

கடந்த காலத்தை நோக்கி அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?

யாழ். பல்கலை விவகாரம்; அமெரிக்கா கரிசனை


'கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம்"? கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்

By General
2012-11-27



கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீடொன்றிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தை உட்பட தாயும் தந்தையும் சடலமாக பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று சடலங்களை கிராண்ட்பாஸ், ஆமர்வீதி பொலிஸாரினால் கண்டறியப்பட்ட போதும் சடலங்கள் மீதான நீதிவானின் விசாரணை நேற்று இடம்பெறாமையால் சடலங்கள் இன்று முற்பகலே மீட்கப்பட்டன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இவர்கள் இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தந்தையான சிவலிங்கம் ஸ்ரீகாந்தன், மனைவியான 24 வயதுடைய கோகிலவாணி மற்றும் அவர்களின் மகனான 2 வயதுடைய ஸ்ரீகாந்தன் சர்வேஸ் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து கடிதமொன்று மீட்கப்பட்டதாகவும் அக்கடிதத்தில் கடன் சுமையே தமது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Pics By: Sujeewa Kumar








நன்றி வீரகேசரி
 

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்


By V.Priyatharshan
2012-11-27

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் 'Supreme sat-1"சற்றுமுன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டது.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள், எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

மேற்படி இச் செயற்கைக்கோள் கடந்த 22ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் 5 நாட்கள் தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.


இதேவேளை, இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியில் அமைக்கப்படவுள்ளது. வரலாற்றில் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45ஆவது நாடாக இலங்கை இடம்பிடித்துள்ளதுடன் தெற்காசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
நன்றி வீரகேசரி

 
 
 
 
 
 
 
 
 

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன


By Farhan
2012-11-26

கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.

இங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் 'நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள்" மற்றும் 'முள்ளிவாய்க்கால் படுகொலைகள்" போன்ற வாசகங்கள் இதில் காணப்பட்டன.

இதேவேளை, சுவரொ
நன்றி வீரகேசரிட்டிகள் ஒட்டப்பட்டிருந்த தகவலை அறிந்த படையினரும் பொலிசாரும் அப்பகுதிக்குச் சென்று அவற்றை அகற்றியுள்ளனர்.       
நன்றி வீரகேசரி

 
 


2009ல் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஒஸ்லோ மேற்கொண்ட நகர்வுகளை பிரபாகரன் தடை செய்தார் என்கிறார் எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி (3)
                                       -      டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஒரு புலிகளின் உயர் மட்ட தலைவரின் உருமாற்றம் - 2
KP-10கேள்வி: 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிக்கட்டப் போரில் ஐநாவின் நடத்தை மற்றும் பங்களிப்பு பற்றி அதனால் தொகுக்கப்பட்ட ஒரு உள்ளக அறிக்கை பற்றி சமீபத்தில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியிருந்தன. 2010ல் டெய்லி மிரர் பத்திரிகைக்காக  உங்களை நான் நேர்காணல் செய்தபோது இது தொடர்பாக நீங்களும் சில அவதானிப்புகளை தெரிவித்திருந்தீர்கள். இந்த விடயம் ஊடக வெளிச்சத்தில் பார்வைக்கு வந்துள்ள நிலையில் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்வதற்காக திரும்பவும் அவைகளை கவனத்தில் கொள்ளலாம் என்று நான் எண்ணுகிறேன். கடந்துபோன அந்த நிகழ்வுகளுக்கு நாம் திரும்பவும் செல்வோமா?
பதில்: ஆம். திரும்பவும் அந்த விடயத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதை நானும் காண்கிறேன். பழைய விடயங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படுகின்றன. வழக்கம்போல சில உண்மைகள் அக்கறையுள்ள சிலரால் மறைக்கப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு கூறப்பட்டுள்ளன. உண்மையின் சில அம்சங்களை வெளிப்படுத்துவதற்காக இதுபற்றி எனக்கு தெரிந்தமட்டிலான விடயங்களை பேசுவதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
கேள்வி: சில வாரங்களுக்கு முன்புதான் முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹைம் இது சம்பந்தமாக பி.பி.சி க்கு கருத்து தெரிவித்திருந்தார். அவர் விசேடமாக குறிப்பிட்டிருந்தது,அந்த கொடிய நாட்களில் ஐநாவின் பின்துணையுடன் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு நோர்வே எவ்வளவு பாடுபட்டது,மற்றும் அவர்கள் அதற்காக உங்களைக்கூட ஒஸ்லோவிற்கு அழைத்து வருவதற்கு எப்படியெல்லாம் திட்டம் தீட்டினார்கள் என்று. எல்.ரீ.ரீ.ஈ தலைவர் உங்களை அப்படிச் செய்யவிடாமல் தடுத்ததால்தான் அந்த முயற்சிகள் பாழாகின என்று எரிக் சொல்ஹைம் கூறியிருந்தார். அப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டதற்காக வெளிநாட்டு தமிழ் ஊடகங்களால் எரிக் சொல்ஹைம் பலவிதமாக விமர்சிக்கப்பட்டிருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம மந்திரி என அழைக்கப்படும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், எரிக் சொல்ஹைமின் அறிக்கையை பகிரங்கமாக மறுத்து வாதிட்டிருந்தார். இதைப்பற்றி; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: எரிக் சொன்னது நூறு சதவீதம் உண்மை. அப்படியான ஒரு முயற்சி நடைபெற்றதுதான் மற்றும் அது எல்.ரீ.ரீ.ஈ தலைமைப்பீடத்தால் தடுக்கப்பட்டுவிட்டது. இந்த முயற்சியை முன்னெடுக்க அனுமதித்திருந்தால் பெருமளவு இரத்தம் வீணாக சிந்தப்பட்டதை தடுத்திருக்கலாம். எல்.ரீ.ரீ.ஈயின் அநேக தலைவர்கள் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள்.
கேள்வி: அப்படியானால் ஏன் உருத்திரகுமாரன் அப்படியான ஒரு முயற்சி அந்த நேரத்தில் நடைபெறவில்லை என்று கூறுகிறார்.
பதில்: பெபரவரி 2009ல் என்ன நடந்தது என்றுதான் உருத்திரகுமாரன் பேசுகிறார். பெப்ரவரிக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை வேண்டுமென்றே அறியாததுபோல நடிக்கிறார்.
யுத்த நிறுத்தம்
கேள்வி: ஜனவரி 2009ல் எல்.ரீ.ரீ.ஈ யில் புதிதாக உருவாக்கப்பட்ட துறையான சர்வதேச உறவுகள் என்கிற துறைக்கு அது உங்களை ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் தூதுவராக பணியாற்றும்படி நியமித்தது நன்கறிந்த ஒரு விடயம். அப்போது என்ன நடந்தது என்பதை மிகவும் விரிவாக உங்களால் சொல்ல முடியுமா?
பதில் : ஆம். நிச்சயமாக. நிலமைகளை உன்னிப்பாக அவதானித்து வந்த பெரும்பான்மையான அவதானிகளுக்கு எல்.ரீ.ரீ.ஈ தனது முடிவிற்கு அருகில் நெருங்கிவிட்டது என்பது 2008லியே தெளிவாகத் தெரிந்தது. இராணுவம் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருந்தது, மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அதன் வாய்வீச்சை தவிர, பின்வாங்கலையே செய்துகொண்டிருந்தது. அப்போது பெரும்பkp nerdoாலான சண்டைகள் யாழ் - கண்டி வீதி எனப்படும் ஏ - 9 நெடுஞ்சாலையின் மேற்கு பக்கமாக உள்ள பிரதேசங்களிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராணுவம் ஏ - 9 நெடுஞ்சாலைக்கு கிழக்கு புறமாக உள்ள பெரும்பாலான பிரதேசங்களுக்குள் நகர்வதற்கு முன்னரே கௌரவமான ஒரு யுத்த நிறுத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் இருந்தன. ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப் பீடமும் அதன் வெளிநாட்டுக் கட்டமைப்புகளும் இதை புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருந்தார்கள்.
நீங்கள் அறிந்ததைப் போல, 2003ன் ஆரம்பத்திலேயே என்னை எனது கடமைகளிலிருந்து விடுவித்து இயக்கத்திலிருந்து ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டார்கள். நடைமுறைப்படி நான் எல்.ரீ.ரீ.ஈயிலிருந்து விலகிய ஒருவன், அனாலும் நான் தூரத்திலிருந்து நடப்பவைகளை தொடர்ந்து அவதானித்து அந்த நிலமைகளையிட்டு கவலையடைந்த வண்ணமேயிருந்தேன். 2008ன் கடைசி மாதங்களில்தான் எல்.ரீ.ரீ.ஈ தலைமை திரும்பவும் என்னுடன் தொடர்புகளை மீளாரம்பித்திருந்தது. மக்களின் உயிர்கள் அதேபோல எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களது உயிர்கள் என்பனவற்றை பாதுகாப்பதற்காக யுத்த நிறுத்தம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியபோது, புலிகளின் உயர்பீடம் அதற்கு இணங்கியது போலத் தோன்றியது ஆனால் பிரபாகரன் இன்னமும் விடயங்களை இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார். இறுதியாக 2008 டிசம்பர் இறுதியில் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரவேண்டிய ஒரு ஆணையுடன் பிரபாகரன் என்னை எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேச விவகாரங்களின் தலைவராக நியமித்தார்.
2008 டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டிருந்தாலும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கு செல்வதற்கான விடயங்களில் எல்.ரீ.ரீ.ஈ இன்னமும் தாமதம் செய்து கொண்டேயிருந்தது. அனால் அப்போதைய புது வருடம் உதயமாகியதும் இராணுவம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெறத் தொடங்கியது பரந்தன்,கிளிநொச்சி,மற்றும் ஆனையிறவு என்று ஒன்றின் பின் ஒன்றாக விழுந்து கொண்டே வந்தது.
இப்போது தலைமை கவலையடைந்து என்னை முறைப்படி நியமித்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் இந்த விடயத்தில் எனது கட்டளைக்கு கீழ்படிந்து எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவற்றுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரான வீரகத்தி மணிவண்ணன் என்கிற கஸ்ட்ரோ, தனது பிரதிநிதியான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் மூலமாக எனது நோக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தார். போதுமான நிதி வளங்கள் எனக்குத் தரப்படவில்லை. இவைகளை பொருட்படுத்தாது,ஒரு யுத்த நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு என்னால் இயன்றவரை பாடுபட்டேன்,மற்றும் சர்வதேச சமூகத்தில் பலதரப்பட்ட செல்வாக்குள்ள நபர்களையும் நான் இந்த நோக்கத்துக்காக தொடர்பு கொண்டேன்.
கேள்வி: இதை எவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டீர்களா?
பதில்: நான் ஏராளமான கடிதங்கள், தொலை நகல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் என்பனவற்றை அனுப்பினேன். சாத்தியமானவரை நேரடியாக சந்திக்க முடிந்தவர்களை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன.; சிலரை நானே நேரடியாக சந்தித்தேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்காக வேறு சிலர் என்னை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். பணிவான வேண்டுகோள்களை மேற்கொள்வதில் முக்கிய நபர்களாக இருப்பவர்களை அதிகளவில் அணுகுவதற்கான வழிமுறைகள் உள்ள ஆட்களினது உதவியை நான் வழக்கமாக நாடினேன்.
ஒருங்கிணைப்பாளர்
கேள்வி: இதில் நோர்வேயின் பங்கு என்னவாக இருந்தது?
பதில்: யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் போன்றவற்றில் ஒஸ்லோ அங்கீகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளராக இருந்தது. யுத்தம் அதிகரித்ததில் நோர்வே எந்த வித அர்த்தமுள்ள பங்களிப்பையும் ஆற்றாவிட்டாலும் கூட,அந்த ஸ்கன்டிநேவிய நாடு இன்னமும் ஸ்ரீலங்காமீது அக்கறை கொண்டதாகவே உள்ளது. மனித உயிர்கள் பலியாவதை இயன்றளவு தடுக்க நோர்வே விரும்பியது. எனவே மனிதாபிமான காரணங்களுக்காக சண்டைக்கு ஒரு முடிவு கட்ட அவர்கள் விரும்பினார்கள்.
கேள்வி: எனவே ஒஸ்லோ என்ன செய்தது?
பதில்: சொல்iஹம் என்னுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார். ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குரிய வழிவகைகளைப்பற்றி கலந்தாலோசிப்பதற்காக அமைதியாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள நாம் முடிவு செய்தோம். 2008 பெப்ரவரி கடைசியில் ஒரு இரகசிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கேள்வி: அந்த கூட்டம் எங்கு நடைபெற்றது?
பதில்: மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள ஹில்ரன் ஹோட்டலில். அது இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கேள்வி: அதில் யார் பங்குபற்றினார்கள்? எரிக் சொல்ஹைம் பங்குபற்றினாரா?
பதில்: இல்லை, ஏனெனில் நோர்வேயின் அமைச்சர் என்றவகையில் அதில் பங்கு கொள்ள முடியாதளவுக்கு அவர் மிகவும் உயர்வான சுய தகுதியை கொண்டிருந்தார்,ஆனால் அவர் தனது பிரதிநிதியாக முக்கிய நோர்வீஜிய அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தார்.ஒஸ்லோவில் இருந்து வேறு இரண்டு அதிகாரிகளும் மற்றும் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரும் அதில் கலந்து கொண்டனர்.
கேள்வி: யார் அந்த தூதுவர்?
பதில்: அப்போது கொழும்பில் தூதராக இருந்தவர் ரோரே ஹட்றெம். அவர் இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ளார் என நினைக்கிறேன்.
கேள்வி: எல்.ரீ.ரீ.ஈயை யார் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்?
பதில்: நான், எனது உதவியாளரும் மற்றும் செயலாளருமாக கடமையாற்றிய அப்பு என்கிற ஜோய் மகேஸ்வரன் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோர். புலம் பெயர் சமூகத்தை சேர்ந்த சில முக்கிய எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களும் கூட அதில் கலந்து கொண்டிருந்தார்கள்,அவாகளின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. உருத்திராவும் மற்றும் மகேஸ்வரனும் ஒஸ்லோவின் அனுசரணையுடன் முன்னர் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களில் எல்.ரீ.ரீ.ஈ யினை  அதிகாரபூர்வமாக பிரதிநிதிப்படுத்தும் முக்கிய நபர்களாக பங்களித்திருந்தனர்.
கேள்வி: இந்த பேச்சுக்களில் என்ன நடந்தது?
பதில்: எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமையிடமிருந்து ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் ஆணை எனக்கு வழங்கப்பட்டிருந்ததினால், இந்த பேச்சுக்களில் அந்த விடயத்தை நான் எடுத்துரைத்தேன். பொதுமக்களின் துயரமான நிலையை கண்ணீர் பெருகும் நிலையில் நான் அங்கு எடுத்துச் சொல்லி,இந்த உயிர்களைக் காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும்படி நோர்வேயிடம் இறைஞ்சினேன்.
ஹட்றெம்
கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?
பதில்: அது மிகவும் எதிர்பாராதது,தூதுவர் ரோறே ஹட்றெம் மிகவும் ஒளிவு மறைவற்று நேரடியாக பேசுபவர். அவர் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்,நாங்கள் வெளிப்படையாக பேசி மற்றும் சில கடுமையான ஆனால் தெளிவான உண்மைகளையும் பேசுவோம் என்று.
கேள்வி: அவர் என்ன சொன்னார்?
பதில்: முதலாவதாக நோர்வே தூதர் அப்போதுள்ள யுத்த களநிலமைகளை பற்றிய ஒரு உண்மையான மதிப்பீட்டை எங்களுக்கு தெரிவித்தார். இராணுவ நிலையைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா இராணுவம்  மேல் நிலையில் இருப்பதாக அவர் எங்களிடம் வெகு தெளிவாக தெரிவித்தார். 55 வது படைப்பிரிவு சாளையில், 57 வது படைப்பிரிவு விஸ்வமடுவில்,58 வது படைப்பிரிவு தேவிபுரத்தில்,59 வது படைப்பிரிவு முல்லைத்தீவு நகரத்தில் உள்ளது. பணிப்படை பிரிவு - 2 உடையார்கட்டிலும், பணிப்படை பிரிவு - 3 அம்பகாமத்திலும், பணிப்படை பிரிவு - 4 ஒட்டுசுட்டானிலும் உள்ளன.
முக்கியமான விடயத்தை பற்றிப் பேசுகையில் நோர்வே தூதர் சொன்னது, எல்.ரீ.ரீ.ஈ ஒரு சிறிய துண்டுப் பகுதிக்குள் அடைபட்டுக் கிடக்கிறது,மற்றும் இராணுவம் மேலும் முன்னேறிச்சென்று புலிகளை நிர்மூலமாக்குவதற்கு ஒரு சிறிதளவு நேரமே தேவை என்று. எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிப்பதில் மிகவும் உறுதியாக உள்ள கொழும்புக்கு, ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு நிச்சயமாக எந்த ஒரு அவசியமும் கிடையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் எங்களிடம் நேரடியாக தெரிவித்தது,பொதுமக்களின் இந்த நிலைக்கு எல்.ரீ.ரீ.ஈயும் கூட பொறுப்பு ஏற்கவேண்டும் என்று. பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பணயக் கைதிகளாகவும் பலவந்தப்படுத்தி வைத்திருப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈயை அவர் குற்றம் சாட்டினார். ஹட்றெம் அப்போது சொன்னது, ஒரு விட்டுக்கொடுப்புக்கு இணங்கிப்போகாமல் எல்.ரீ.ரீ.ஈயினால் ஒரு யுத்த நிறுத்தத்தை எதிர்பார்க்க முடியாது, என்று. “நீங்கள் சிலவற்றை பெறவேண்டுமானால் சிலவற்றை விட்டுக் கொடுக்கவேண்டும்” என்றார் அவர்.
கேள்வி: அவர் எதைக் குறிப்பிட்டார்? ஒரு ஆயுத ஒப்படைப்பு?kp nerdo1
பதில்: சரியாக அதேதான். ஹட்றெம் எங்களிடம் சொன்னது, எல்.ரீ.ரீ.ஈ முதலில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தால் மட்டுமே நோர்வே அல்லது வேறு நாடுகள்  கொழும்பிடம் ஒரு யுத்த நிறுத்தத்தை கேட்கமுடியும். இராணுவம் நிச்சயம் வெல்லப் போகிறது, அதனால் புலிகளுக்கு வேறு தெரிவு கிடையாது, எனவே உயிர்களின் இழப்பை நாங்கள் குறைக்க வேண்டுமென்றால் ஆயுதங்களை களைய நாம் சம்மதிக்க வேண்டும், என்று அவர் சொன்னார். உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ அப்படிச் செய்வதற்கு சம்மதித்திருந்தால்,அப்போது நோர்வே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் துணையுடன் ஸ்ரீலங்காவிடம் ஒரு யுத்த நிறுத்தத்தை கோர முடியும்.” எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்களை கீழே போட சம்மதிக்காவிட்டால்,போர் தொடர்ந்து நடைபெற்று ஒரு குறுகிய நேரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் முடிவாக இருக்கும்” என மிகச் சுருக்கமாக எங்களிடம் தெரிவித்தார்.
நாங்கள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவரது பதிலை பெறுகிறோம் என்று நாங்கள் அவருக்குச் சொன்னோம். ஹட்றெம் உடனான அந்தக் கூட்டம் அந்தக் குறிப்புடன் நிறைவு பெற்றது.
யதார்த்தம்
கேள்வி: அடுத்து என்ன நடந்தது?
பதில்: நாங்கள் அனைவரும் வருத்தமடைந்தோம்,ஆனால் ஹட்றெம் மிகவும் யதார்த்தமாக பேசுகிறார் என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் நாங்கள் அந்தக் கூட்ட விபரங்களை வன்னிக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஆயுதங்களை கீழே வைப்பதை அவர்கள் நிராகரித்ததுடன் எல்.ரீ.ரீ.ஈயின் பக்கமிருந்து எந்த சலுகைகளுக்கும் இடமளிக்காதபடி ஒரு யுத்தநிறுத்தத்துக்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும் என்றுமட்டும் வலியுறுத்தப்பட்டது.
கேள்வி: அப்படியானால் எல்.ரீ.ரீ.ஈ நோர்வேயின் திட்டத்தை நிராகரித்தது என்று உருத்திரகுமாரன் சொல்வது சரியா?
பதில்: ஆம் ஆனால் அது இந்தச்சம்பவம் குறித்து மட்டுமே. பின்னர் வேறு பல முன்னேற்றங்களும் ஏற்பட்டன. மேலும் நாங்கள் ஹட்றெம்முடன் பேசிய பெரும்பாலான நேரத்தில் அவர் அங்கு சமூகமளித்து இருக்கவில்லை. நடந்த முழு விபரமும் அவருக்குத் தெரியாது.
கேள்வி: ருத்ரா அல்லது உருத்திரகுமாரன் அப்போது அல்லது அதன் பின்னர் நடந்தவைகளைப்பற்றி அறியாமலிருந்தார் என்றா நீங்கள் சொல்கிறீர்கள்?
பதில்: முழு விபரங்களும் அவருக்குத் தெரியாது,ஆனால் அதன் பின் நடந்தவைகளின் அடிப்படை விடயங்கள் நிச்சயமாக ருத்ராவுக்குத் தெரியும்.எனவே அத்தகைய விடயங்களை இப்போது அவர் மறுப்பதும் மற்றும் சொல்ஹைம் உண்மையை பேசவில்லை எனக் குறிப்பிடுவதும் தவறு. சொல்ஹைம் உண்மையைத்தான் சொன்னார், ஆனால் உருத்திரகுமாரன்தான் உண்மையாக நடக்கவில்லை.
கேள்வி: கோலாலம்பூர் ஹில்டனில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பெரும்பகுதியை ருத்ரா தவறவிட்டார் என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன் அப்படி நடந்தது?
பதில்: ஏனெனில் அவர் தாமதமாக வந்தார். அது மற்றொரு வேடிக்கையான கதை. ருத்ரா நியுயார்க்கிலிருந்து பயணச்சீட்டை வாங்கி விமானத்தில் ஏறியிருந்தார். விமானச் சீட்டுகளுக்கான செலவுகளை நோர்வே திரும்பக் கொடுத்தது. கோலாலம்பூர் என்பதை மனதில் கொண்டு அவரை தலைநகரத்துக்கு வரும்படி நான் அவரிடம் சொன்னேன். அதை அவர் நான் தாய்லாந்தில் இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டு அதன் தலைநகரான பாங்கொக் சென்றுவிட்டார். பின்னர் நான் ஒருத்தரை பாங்கொக் அனுப்பி ருத்ரா கோலாலம்பூர் வந்து சேருவதற்கு உதவி செய்ய வேண்டியதாகிவிட்டது. இதன் காரணமாக ஹில்டனில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பெரும்பகுதியை அவர் தவற விட்டுவிட்டார்.
(தொடரும்)   நன்றி தேனீ 


பிரபாகரனின் குடும்பத்தை விமானம் மூலம் காப்பாற்றுவதற்கு நெடியவன் நிதியுதவி செய்யவில்லை. - எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவர் ‘கேபி’ (4)
                                                                                            -    டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஒரு புலிகளின் உயர் மட்ட தலைவரின் உருமாற்றம் - 2
திட்டம்
கேள்வி: எனவே நோர்வீஜியன்களுடனான பெப்ரவரி 2009 கூட்டம் சாதகமான விளைவுகளைத் தரவில்லை. ஆனால் 2010 ல் நான் உங்களை  விரிவாக நேர்காணல் நடத்தியபோது பிரபாகரனின் கவன ஈர்ப்புக்காக நீங்கள் அனுப்பிய யுத்த நிறுத்த திட்டத்தை அவர் நிராகரித்து விட்டதாகச் சொன்னீர்கள். உங்களது 16 பக்க திட்டத்தை பிரபாகரன் வெறும் மூன்று வார்த்தைகளிலேயே தள்ளிக் களைந்து விட்டார் என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். ஆகவே பெப்ரவரி 2009 கூட்டத்துக்குப் பின்னர் அங்கு சில புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும.; தயவு செய்து அதை மேலும் விரிவாக விளக்க முடியுமா?
பதில்: அது சரியானது. என்ன நடந்தது என்றால் தலமைப்;பீடம் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான ஒஸ்லோவின் ஆலோசனைகளை நிராகரித்த பின்னரும், அதைக் கொண்டுவருவதற்கான எனது முயற்சிகளை நான் நிறுத்தி விடவில்லை. நிலமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே போனது, அதனால் எதையாவது செய்யவேண்டும் என நான் தீர்மானித்தேன். எனவே நோர்வேயுடனும் ஏனைய சர்வதேச சமூகத்தை சேர்ந்த முக்கிய அங்கத்தவர்களுடனும் நான் மேலும் மேலும் தொடர்புகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அது வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட ஒரு விடயமாக இருந்தது. நான் எப்பாடு பட்டாவது ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்கள், இயக்கம், மற்றும் தலைமைத்துவம் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்றியாக வேண்டும். எனவே என்னிடம் இருந்த அற்ப நிதி வசதி மற்றும் இதே எண்ணத்தைக் கொண்ட நபர்களின் உதவிகள் என்பனவற்றைக் கொண்டு நான் எனது பணியைத் தொடர்ந்தேன். சர்வதேச அரசியல் தலைவர்கள்,உயர்மட்ட அதிகாரிகள், ராஜதந்திரிகள், பல்வேறு நாடுகளின் கருத்துக் கணிப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட ஐநா அதிகாரிகள் போன்றவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியபடி இருந்தேன். அவர்களில் சிலரை நான் நேரடியாக தொடர்பு கொண்டேன், மற்றும் சிலரை எனது சார்பாக  செல்வாக்குள்ள வேறு நபர்கள் தொடர்பு கொண்டார்கள்.
மார்ச் மாத இறுதியளவில் சர்வதேச பின்துணையுடன் என்னிடம் ஒரு தற்காலிக திட்டம் இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ தன்னிடமுள்ள ஆயுதங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் களஞ்சியப் படுத்துவதன் மூலம் ஆயுதங்களை களைவது. அதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை  பூட்டி வைப்பது என்பதாகும். அதாவது விசேடமாக கனரக ஆயுதங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட சில இடங்களில் சேமித்துப் பூட்டி வைப்பது.
அவைகளை ஐநா பிரதிநிதிகளிடம் கையளிப்பது. அதன்பின்னர் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களை தாக்குதலற்ற வலயங்களில் பாதுகாப்பாக இருக்கச் செய்வது. அரசாங்கத்துக்கும் மற்றும் புலிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளை நோர்வேயினரின் அனுசரணையுடன் நடத்துவது.
தேவைப்பட்டால் சுமார் 25 அல்லது 50 உயர்மட்ட தலைவர்களை அவர்களது குடும்பத்துடன் தற்காலிகமாக ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது. மத்தியதர தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களை தடுத்து வைத்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அது தொடர்பாக சிறு தண்டனைகளை வழங்குவது. கீழ்மட்ட கனிட்ட அங்கத்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை அவர்களது குடும்பத்துடன் தங்குவதற்கு இடமளிப்பதற்கு நான் மூன்று நாடுகளின் சம்மதத்தைக்கூட பெற்றிருந்தேன். அவற்றில் ஒன்று ஒரு ஆசிய நாடு மற்ற இரண்டும் ஆபிரிக்காவில் உள்ளன.
இந்த திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்கினால் உறுதிப்படுத்தப்பட இருந்தது. இந்தியாவுக்கும் அதுபற்றி தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் வெளியேற்றத்திற்கு பயன்படுத்த தங்கள் கடற்படையை அனுப்பவும் அமெரிக்கா தயாராக இருந்தது.
இந்த திட்டத்தை பற்றிய ஒரு சுருக்கமான விபரத்தை எழுதி அனுமதிக்காக பிரபாகரனிடம் மார்ச் 2009ல் அனுப்பி வைத்தேன். அதை மேற்கொண்டு தொடரும்படி அவர் சொல்லியிருந்தால் அதை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்து அதை நடைமுறைப்படுத்தியிருப்பேன். ஆனால் அந்த 16 பக்க விபரக்குறிப்பை அவருக்கு தொலை நகலில் அனுப்பிய பொழுது, அந்த 16 பக்க விபரங்களையும் “இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிற வெறும் மூன்று சொற்களில் அவர் நிராகரித்துவிட்டார். எனவே நான் அதை கைவிட வேண்டியதாகிவிட்டது.
இதில் மோசமானது என்னவென்றால் ஏதாவது ஒரு வெளிநாட்டுக் கப்பலை அவர் காணநேர்ந்தால் அவைகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என்கிற ஒரு வாய்வழிச் செய்தியை அவர் அனுப்பியிருந்ததுதான்.
தகவல் தொடர்புகள்.
கேள்வி: இந்தக் கட்டத்துடன் தொடர்புடைய சிலவற்றை நான் அறிய விரும்புகிறேன். எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் எப்படி நீங்கள் தகவல் தொடர்புகளை மேற்கொண்டீர்கள்?
பதில்: ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாங்கள் செய்மதி தொலைபேசிகளுடாக பேசுவது வழக்கமாக இருந்தது, ஆனால் பின்னர் அவரது பாதுகாப்பு நிலமைகள் காரணமாக நாங்கள் இடையாட்கள் வழிச் செல்லவேண்டி ஏற்பட்டது. நான் வழக்கமாக வேலு (குமாரவேலு) என்பவருடன் பேசுவேன். அவர் பின்னர் எனது செய்தியை தலைவருக்கு நேரிட்டு அறிவித்து பின்னர் அவரது பதிலை எனக்கு நேரடியாக அறிவிப்பார். அதேபோல தலைவர் தனது செய்திகளை எனக்கு அறிவிக்குமாறு வேலுவிடம் கட்டளை பிறப்பிப்பார்.
பின்னர் அரசியற் பொறுப்பாளர் நடேசன்(பாலசிங்கம் மகேந்திரன்) மற்றும் கடற்புலி தளபதி சூசை (தில்லையம்பலம் சிவநேசன்) ஆகியோரும் எனக்கும் மற்றும் தலைவருக்கும் இடையில் தகவல் தொடர்புகளை பரிமாறும் ஊடகமாக பணியாற்றினார்கள்.
கேள்வி: மற்றொரு விடயம் ஐநாவின் தலையீடு சம்பந்தமானது. எந்த மட்டத்தில் இது நடைபெற்றது? யாரெல்லாம் இந்த கலந்துரையாடல்களில் தொடர்பு கொண்டிருந்தார்கள்?
பதில்: நோர்வேக்காரர்கள்தான் ஐநா உடனான விடயங்களை கையாண்டார்கள், ஆனால் ஐநா அலுவலர்களான சேர் ஜோண் கோம்ஸ், விஜய் நம்பியார், மற்றும் தமராட் சாமுவேல் போன்றவாகளுடன் நான் தொடர்புகளைக் கொண்டிருந்தேன்.
கேள்வி: தமராட் சாமுவேல் என்பவர்தான் அப்போது தெற்காசிய அரசியல் விவகாரங்களை ஐநாவுக்காக கவனித்து வந்தார் அல்லவா?
பதில்: ஆம். அவர் எரித்திரேனியா நாட்டை சேர்ந்தவர்.
கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ ஒரு இராணுவ இக்கட்டில் சிக்கியிருந்த அந்த நேரத்தில் பிரபாகரன் ஏன் உங்கள் திட்டத்தை நிராகரித்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? களநிலவரங்களின் உண்மையான நிலவரத்தை அவர் அறியவில்லையா? அவரது எண்ணம் என்னவாக இருந்தது?
பதில்: அவர் அதை ஏன் நிறுத்தி வைத்தார் என பின்பு நான் அறிந்து கொண்டேன். இராணுவத்துக்கு எதிராக தீபனின் தலைமையின் கீழ் ஒரு பாரிய எதிர்தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனந்தபுரம் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒரு பாரிய இராணுவ வெற்றி நிலமையை தலைகீழாக மாற்றி அரச இராணுவத்தின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரன் இருந்திருக்க வேண்டும்.
கேள்வி: அது ஒரு தவறான கணிப்பு போலத் தோன்றுகிறது. எல்.ரீ.ரீ.ஈ ஆனந்தபுரத்தில் மிகவும் வெற்றிகரமான ஒரு தாக்குதலை நடத்தினால்கூட இராணுவத்தை பின்திரும்பச் செய்யக்கூடிய ஒட்டுமொத்த கள நிலமை அதிக தூரம் சென்றுவிட்டது. போரின் இந்தக்கட்டத்தில் ஏற்படும் ஒரு தோல்வியினால் இராணுவம் தளர்ந்து போய்விடும் என்பது சந்தேகமே. தவிரவும் எல்.ரீ.ரீ.ஈ யின் ஆயுத விநியோகம் கடற்படையினரால் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எனவே தொடர்ந்து ஒரு இராணுவ அனுகூலத்தை பெறுவது அவரால் எப்படி முடிந்திருக்கும்?
பதில்: நீங்கள் சொல்வது சரி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் பிரபாகரனின் தன்னம்பிக்கைக்கு அதுதான் காரணம் என்று தோன்றுகிறது. ஆனால் இராணுவம் முதலில் ஆனந்தபுரம் பகுதியில்;; தாக்குதலை நடத்தி எல்.ரீ.ரீ.ஈ யை அடைத்துவிட்டது. ஏராளமான அங்கத்தவர்கள் மற்றும் தீபன் உள்ளிட்ட தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். அத்துடன் நிலமை முற்றாக மாறிவிட்டது. நீங்கள் கூட ஆனந்தபுரம் யுத்தத்தை பற்றி விரிவாக எழுதி; இறுதித் தருணங்களை தீர்மானிக்கும் போர் என அதைக் குறிப்பிட்டிருந்தது எனக்கு நினைவுள்ளது.
கேள்வி: ஆம் நான் அப்படிச் செய்திருந்தேன். ஆனந்தபுரம் போர் நடைபெற்றது ஏப்ரல் 3 மற்றும் 4ம் திகதிகளில். அதன் பின்னர் ஏப்ரல் மத்தியில் இராணுவம் சுமார் 100,000 மேற்பட்ட பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டிலிருந்த மாத்தளன் - பொக்கணை பிரதேசங்களிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்மாறச் செய்தது. ஆனந்தபுரம் தோல்விக்குப் பிறகு பிரபாகரன் முற்றாக பயமடைந்திருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டேன் அது உண்மையா?
பதில்: அது உண்மை. அதன் பின்னர் தலைவர், அணுக முடியாதவராகிவிட்டார். பின்னர் நிலமைகள் திசைமாறிச் செல்ல ஆரம்பித்தன.
சொல்ஹைம்
கேள்வி: ஆனால் நீங்கள் உங்கள் முயற்சிகளை தொடர்ந்தீர்கள். அடுத்து என்ன நடந்தது?
பதில்: நிலமை மிகவும் மோசமடைந்து கொண்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நான் தெரிந்து கொண்டேன். நான் எனது முயற்சிகளை புதுப்பிக்க ஆரம்பித்தேன். சர்வதேச சமூகமும் கவலைப்பட தொடங்கியது. பல அவதானிகளும் ஒரு மனிதாபிமான பேரிடர் நெய்யப்பட போகிறது என்பதை உணரத் தொடங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் மற்றொரு தற்காலிகத் திட்டம் உருவாக்கப்பட்டது.
கேள்வி: அது என்ன திட்டம்?
பதில்: இதுதான் சமீபத்தில் எரிக் சொல்ஹைம் பிபிசி யில் சொல்லியிருந்தது. இது ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஒரு கப்பல் அல்லது கப்பல்கள் மூலம் ஐநா அதிகாரிகள், மற்றும் நான்கு கூட்டுத்தலைமை நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்,ஜப்பான், மற்றும் நோர்வே) பிரதிநிதிகள்,மற்றும் இந்தியாவிலிருந்து சில பார்வையாளர்கள் ஆகியோர் வடபகுதிக்கு செல்வது. அவர்கள் யுத்த வலயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைப்பற்றிய கணக்கெடுப்பு நடத்தி அவர்களை புகைப்படம் எடுப்பது. அதன்பின் அவர்களை ஸ்ரீலங்காவின் பாதுகாப்புடன் உள்ளக இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அனுப்புவது
எல்.ரீ.ரீ.ஈ தனது ஆயுதங்களை பூட்டி அவற்றை ஐநாவிடம் கையளிப்பது. சரணடைந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை மார்ச்சில் தீர்மானித்த பிரகாரம், உயர்மட்ட தலைவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக ஒரு வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களை கண்காணிப்பில் வைத்திருப்பது. மத்திய தர அங்கத்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்களுக்கு சிறிய தண்டனைகளை வழங்குதல் எஞ்சிய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குதல் என்பதின் படி நடத்துவது.
கேள்வி: ஆனால் பிரபாகரன் மற்றும் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான்(சண்முகலிங்கம் சிவசங்கர்) ஆகியோர் இதில் உட்படுத்தப்படவில்லையா?
பதில்: திட்டத்தின்படி அவர்களும் ஒரு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருந்தார்கள். அத்தகைய ஒரு நன்மை அவர்களுக்கு வழங்காவிட்டால் அவர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் இல்லையா?
கேள்வி: ஆனால் எரிக் சொல்ஹைம் வேறுவிதமாக அல்லவா சொல்லியிருக்கிறார்……..
பதில்: எரிக் வித்தியாசமாக சொன்னார் என்பது எனக்கும் தெரியும், ஆனால் எனக்கு தெரிந்தவரை அது தவறானது. திட்டத்தின்படி பிரபாகரன் மற்றும் பொட்டு ஆகியோர் அதில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
கேள்வி: அப்படியானால் ஏன் சொல்ஹைம் வித்தியாசமாக சொல்ல வேண்டும்? ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் பின்னர் திருத்தப்பட்டதா. ஒருவேளை இந்தியாவுக்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக  இவர்கள் தேவைப்படுவதால் இருவரையும் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாமா?
பதில்: சிலவேளை அப்படியிருக்கலாம் ஆனால் உண்மையில் எனக்குத் தெரியாது. எனக்கும் அது புதிராகத்தான் உள்ளது.
பிரபாகரன்
கேள்வி: எனவே பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இதனால் நன்மை அடையாததால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால் திட்டம் முடக்கப்பட்டது.
பதில்: இல்லை அந்தக் காரணத்துக்காக திட்டம் முடக்கப்படவில்லை. இதில் உள்ள யதார்த்தம் என்னவென்றால் அது நடைபெறவேயில்லை, இந்த திட்டம் எல்.ரீ.ரீ.ஈயின் உயர்மட்டத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவேயில்லை, ஏனெனில் தலைவர் என்னை மேற்கொண்டு தொடர அனுமதிக்கவில்லை.
கேள்வி: இதைத்தான் சொல்ஹைம் பேசும்போது இது சம்பந்தமாக நீங்கள் ஒஸ்லோவுக்கு வரவேண்டியிருந்தது என்று சொன்னாரா? என்ன நடந்தது? தயவு செய்து விளக்க முடியுமா?
பதில்: நாங்கள் இந்த திட்டத்தை உருவாக்கியதும், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அனுமதியையும் மற்றும் சம்மதத்தையும் பெறவேண்டியது மிகவும் அவசியமாக இருந்தது. அது இல்லாமல் எதுவுமே செய்திருக்க முடியாது. சர்வதேச சமூகம் இதை மேற்கொண்டு தொடருவதற்கு எல்.ரீ.ரீ.ஈ யின் சம்மதம் மிகவும் முக்கியமானது. இவ்வாறான சூழ்நிலையில் நான் நேரடியாகச் சென்று தலைவரை நேரில் சந்திக்கலாம் என்று எண்ணினேன்.
கேள்வி: அப்படியான ஒரு யோசனையை உங்களுக்கு ஏன் தோன்றியது?
பதில்: நல்லது. பாருங்கள் பாலா அண்ணையும் (எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்) நானும் பிரேமதாஸவின் காலத்தில(ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) இதை வெற்றிகரமாக செய்து முடித்திருந்தோம்.
கேள்வி: அப்போது 1989ல் என்ன நடந்தது?
பதில்: இந்திய இராணுவத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் ஒரு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ இந்தியாவின் தலையீட்டை எதிர்த்து வந்தார். இடையாட்கள் வழியாக நாங்கள் எங்கள் உணர்வுகளை அனுப்பியபோது, சாதகமான ஒரு பதில் கிடைத்தது. ஆனால் இந்தியர்களின் அறிவுக்கு எட்டாத வகையில் நாங்கள் காரியங்களை முடிக்க வேண்டியவர்களாக இருந்தோம்.
எனவே பாங்கொக்கில் உள்ள சென்ட்ரல் ஹோட்டலில் ஒரு இரகசிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரேமதாஸவின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான ஏசிஎஸ் ஹமீட்  இரகசியமாக வந்து என்னையும் பாலா அண்ணாவையும் சந்தித்தார். அதன்பின்னர் நாங்கள் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்து விடயங்களை அவருக்கு நேரில் விளக்கி அவரது ஆதரவை பெறவேண்டும் என்று ஹமீட் வழியாக பிரேமதாஸவுக்கு செய்தி அனுப்பியிருந்தோம். கொழும்பு அதற்குச் சம்மதித்து வன்னிக்கு நாங்கள் சென்று தலைவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தது. அப்போது வேலைகள் எப்படி நடைபெற்றது என்பதுதான் அது.
இப்போதுகூட  அந்தமாதிரி நான் நேரடியாகச் சென்று தலைவரைச் சநத்திக்கலாம் என்று ஆலோசித்தேன்.
கேள்வி: நீங்கள் எப்படி வன்னிக்குச் சென்றிருப்பீர்கள்?
பதில்: அது ஒரு பிரச்சினைதான். ஒரு வழி நோர்வே மூலம் அல்லது ஐநாவின் பாதுகாப்போடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் அனுமதி பெற்று உத்தியோக வாசல்வழியாகச் செல்வது. எனக்கிருந்த மற்றைய வழி ஒரு ஆபத்தை எதிர்கொண்டு கடல் விமானம் மூலம் மாலைதீவிலிருந்து வன்னிக்குச் செல்வது.
இரணைமடு
கேள்வி: 2002ல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் எப்படி இரணைமடு குளத்தில் வந்திறங்கினார்களே அப்படியா?
பதில்: அதேபோலத்தான். வழிமுறைகளை நேரடிப் பேச்சுக்கள் மூலமே அறுதி செய்யப்பட வேண்டும் என்று நோர்வே நினைத்தது. வன்னிக்குப் போய் பிரபாகரனை சந்திப்பதற்கு முதலில் என்னை ஒஸ்லோவுக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை சொல்ஹைம் செய்து கொண்டிருந்தார்.
கேள்வி: அதன் பிறகு?
பதில்: அதன்பிறகு.அப்படியான ஒரு திட்டத்துக்கு பிரபாகரன் சாதகமாக இல்லை என்று எனக்கு விளங்கப்படுத்தப்பட்டது. அங்கு வரவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே நான் எரிக்குக்கு அதைப் பற்றி அறிவித்ததுடன் முழுத் திட்டமும் கைவிடப்பட்டது. நான் ஒஸ்லோவுக்குச் செல்லவில்லை. இது 2009 ஏப்ரல் பிற்பகுதியில் நடந்தது.
கேள்வி: பிரபாகரனின் முடிவை உங்களுக்கு யார் தெரிவித்தார்கள்
பதில்: நான் முன்பே உங்களிடம் சொல்லியபடி வழக்கமான வழிகளின்படிதான் தெரிவிக்கப்பட்டது.
கேள்வி: அப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பிரபாகரன் ஏன் மறுத்தார் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?
பதில்: அவர் மாறுபட்ட எண்ணங்களும் மற்றும் விட்டுக்கொடுப்புக்கு இடம் கொடாத ஒரு போராளியாகவும் இருந்ததுக்கான ஒரு நீண்ட சாதனைப் பதிவு உள்ளது. அவர் வழக்கமாக வரலாற்றைப்பற்றி அதிகம் சிந்திப்பவர் மற்றும் வரலாற்றுக்கு மாறுபட்ட விதத்தில் விட்டுக் கொடுக்கவோ அல்லது சரணடையவோ விரும்ப மாட்டார். மேலும் மேற்கினைப்பற்றி அவர் எப்போதும் சந்தேகமே கொண்டிருந்தார், மற்றும் அவர்களின் உறுதிமொழிகளை அவர் நம்பவில்லை. மற்றொரு காரணம், நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டிலுள்ளவர்களான வைகோ மற்றும் நெடுமாறன் போன்றவர்கள்  தோதலுக்குப் பிறகு மே மாத நடுப்பகுதியில்  ஒட்டு மொத்தமாக மத்தியில் பி.ஜே.பியும் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வருவார்கள் நிலமைகள் மாற்றமடையும் என பொய்யான நம்பிக்கைகளை வழங்கியிருப்பார்கள்.
கேள்வி: ஆனால் இதன் பிறகும் உங்கள் முயற்சிகள் முடிவடைந்து விடவில்லை, அப்படித்தானே?
பதில்: இல்லை அவை முடிவடைந்து விடவில்லை. ஒரு கட்டத்தில் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி என்னைத் தொடர்பு கொண்டு என்மூலம் அவரது குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்ற விரும்பினார். நான் ஒரு சிறிய விமானம் மூலம் உள்ளே சென்று பிரபாகரனின் குடும்பத்தை வான்வழியாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அதற்கான செலவு 3.5 மில்லியன் டொலர்கள். அந்தளவு பணம் என்னிடம் இருக்கவில்லை. ஆனால் என்னால் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டு நிதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நெடியவன் அந்தப் பணத்தை எனக்குத் தருவதற்கு மறுத்துவிட்டார்.
அதற்குள் மே மாத நடுப்பகுதியில் நிலமை வெகுவாக மோசமடைந்து விட்டது. இப்போது நடேசன் மற்றும் சூசை போன்றவர்களாலும் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக ஏதாவது செய்யும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆயுதங்களை கீழே போடுவதாக அறிவிக்கும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் ஒரு பைத்தியக்காரனைப் போலவே இருந்தேன். உறக்கமில்லை எனக்கு நீரிழிவு நோய் இருந்தும்கூட நேரகாலத்துக்கு உணவு கொள்ளவில்லை. நான் மேலும் மேலும் முயற்சி செய்தேன். நான் ஆயுதங்களை மௌனிப்பதாகக்கூட அறிவித்தேன், அது நாங்கள் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்பதை சொல்வதற்காக தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் அறிவிக்கும் ஒரு செயற்பாடு.
ஆனால் எல்லாமே மிகவும் தாமதன செயற்பாடுகளாகி விட்டன.
துயரம்
கேள்வி: அது எப்படி முடிவடைந்தது என்று நாங்கள் அனைவரும் அறிவோம். உங்கள் வலியையும் மனவேதனையையும் நான் புரிந்து கொள்ளுகிறேன்,ஆனால்  பிரபாகரன் உங்கள் திட்டத்துக்கு சம்மதித்திருந்தால் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கியிருக்குமா ஏனென்றால் இராணுவம்  உண்மையில் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது?
பதில்: நோர்வேயினர் மிகவும் நம்பிக்கையுடனிருந்தார்கள் ஏனென்றால் பிரபாகரன் சம்மதித்தால் நான்கு இணைத் தலைமை நாடுகள் மற்றும் ஐநா  என்பனவற்றால் கொழும்பினை சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்பினார்கள். ஆனால் இங்கு மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கம் இது சம்பந்தமாக ஒருபோதும் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை. இந்த திட்டம் பற்றி உத்தியோக பற்றற்ற வித்தத்தில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம்,ஆனால் உத்தியோக பூர்வமாக இதைப்பற்றி அவர்களிடம் பிரேரிக்கப் படவில்லை,ஏனெனில் எல்.ரீ.ரீ.ஈ அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை.
கேள்வி: எனவே இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது. எல்.ரீ.ரீ.ஈ, குறிப்பாக அதன் தலைவர் அவரது உறுதியான மற்றும் விட்டுக்கொடுக்காத தன்மையினால் இந்த நிலைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். புலிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், தங்களது சொந்த உயிர்களுக்கு அப்பால் பெருமளவிலான பொதுமக்களின் உயிர்களையும் அவர்களால் காப்பாற்றியிருக்கு முடியும்.
பதில்: இதுதான் எனது ஆறாத் துயரம். இதுதான் தமிழர்களின் சோகம். ஒரு முன்னாள் மூத்த எல்.ரீ.ரீ.ஈ என்ற வகையில் இது எனக்கு ஒரு சுமையாக உள்ளது,அதனுடன்தான் நான் வாழ்கிறேன்.
கேள்வி: ஆனால் நீங்கள் மானிடத்துக்கு சேவையாற்றுவதன் மூலம் அதற்கு பிராயச்சித்தம் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதைப்பற்றி நாங்கள் பேச வேண்டும்.
பதில்: ஆம். நிச்சயமாக அந்த விடயங்களைப்பற்றி பேச விரும்புகிறேன்.
(தொடரும்) நன்றி தேனீ











தொடரும் ஒரு தமிழ்ப் பலவீனம் குறித்து
செல்ஹெய்மின் கூற்றுக்களும் அதனையடியொற்றி மேலெழுந்திருக்கும் வாதங்களும் – சில குறிப்புக்கள்.
- யதீந்திரா
இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணமா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஆம் என்பது போல் பதிலளித்திருக்கும் செல்ஹேய்ம் போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்திருந்த நிலையிலும், போரை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டுமென்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைமை முடிவெடுத்தது ஒரு வரலாற்று தவறாகும் என்றும் eric-5குறிப்பிட்டிருக்கின்றார்.
சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் செல்ஹேய்ம், யுத்தத்தின் தீர்மானகரமான இறுதிக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட முயற்சியொன்று குறித்து பகிரங்கமாக பேசியிருந்தார். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாகப்பட்ட பின்புலத்தில் ஆங்காங்கே கசிந்த சில தகவல்கள் இப்போது சந்தேகத்திற்கிடமற்ற வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. செல்ஹெய்ம் அப்படியென்ன புதிய தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்? – இலங்கையின் சமாதான முயற்சியில் முக்கிய பங்குவகித்த நாடுகளான அமெரிக்கா, ஐப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஐனவரி மாதம் ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தன. ஐக்கிய நாடுகள் சபையும் இதன் பின்னனியில் இருந்தது. அன்றைய சூழலில் போரின் முடிவு இராணுவரீதியாக இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கும், என்பதை பலரும் அறிந்திருந்த நிலையிலேயே மேற்படி நாடுகள் இத்தகையதொரு திட்டத்தை முன்வைத்திருந்தன. இதனடிப்படையில், சர்வதேச அமைப்பு அதாவது அமெரிக்கா இந்தியா அல்லது வேறு ஒருநாடு இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கு ஒரு கப்பலை அனுப்பிவைப்பதென்றும், அதன் மூலம் போரில் எஞ்சியிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அனைவரையும் புகைப்படத்துடன் பதிவு செய்து, கொழும்புக்கு கொண்டு சென்று பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் தவிர்ந்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செல்ஹேய்ம், இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலாராக இருந்த (கே.பி) குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக ஒஸ்லோவிற்கு அழைத்து வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்படி திட்டத்தை நிராகரித்துவிட்டதால் எங்களால் எதனையும் மேற்கொண்டு செய்ய முடியாமல் போய்விட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள், இன்று நம்மத்தியில் உயிருடன் இருந்திருப்பர் – இதுதான் சமீபத்தில் செல்ஹெய்ம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.
அப்படியாயின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணமா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஆம் என்பது போல் பதிலளித்திருக்கும் செல்ஹேய்ம் போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்திருந்த நிலையிலும், போரை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டுமென்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைமை முடிவெடுத்தது ஒரு வரலாற்று தவறாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்திருந்தால், அதிகமான உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும் என்பது ஏலவே சிலரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 2007 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளராகவிருந்த கார்டன் வைஸ் வெளியிட்டிருக்கும் (The Cage) நூலிலும் இத்தகையதொரு கருத்தை காணலாம். ஐ.நா நிபுனர் குழு அறிக்கையிலும் விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர் என்னும் குற்றச்சாட்டு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சர்வதேச அளவில் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில்தான்  செல்ஹெய்மின் மேற்படி கருத்துக்கள் வெளிவந்திருக்கிறன. ஆனால் முன்னர் தமிழ் சூழலில், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் எவ்வாறானதொரு மந்தமான பார்வை இருந்ததோ, அத்தகையதொரு பார்வைதான் இப்போது செல்ஹெய்மின் கருத்துக்களுக்களை அடியொன்றியும் வெளிவருகின்றது.
2
செல்ஹெய்மின் கருத்துக்கள் வெளிவந்ததைத் தொeric-6டர்ந்து, அதுவரை கனவுலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சிலர், செல்ஹேய்மை திட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டனர். செல்ஹெய்ம் எவ்வாறு இப்படிச் சொல்லலாம் என்பதே அவர்களது தடுமாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. சர்வதேசத்தை விளங்கிக் கொள்வதில் முன்னர் எத்தகையெதாரு பலவீனம் காணப்பட்டதோ, அதில் சிறிதும் முன்னேற்றமில்லாத ஒரு பார்வையே மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. உண்மையில் இன்று செல்கெய்ம் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும், ஏலவே விடுதலைப்புலிகளின் சர்வதேச செயலராக இறுதிக்கட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட (கே.பி) குமரன் பத்மநாதனால் வெளியிடப்பட்ட தகவல்களாகும். பத்மநாதன், ஆங்கில பத்திரிகையாளர் டி.பி..எஸ்.ஜெயராஜூக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். கே.பி இத்திட்டத்தை விரிவாக குறிப்பிடாது விட்டிருந்தாலும், இது தொடர்பில் 16பக்க ஆவணமொன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அனுமதி கோரியதாகவும், ஆனால் பிரபாகரனோ தனது 16பக்க ஆவணத்திற்கு வெறும் மூன்று சொற்களில் ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். கே.பி அரசின் கைதியாக இருந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களை இலகுவாக புறம்தள்ளியவர்களுக்கு, அதனையே இப்போது, 10வருடங்களாக இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளர்களாக செயலாற்றியிருந்த எரிக் செல்ஹேய்ம் குறிப்பிடும்போது சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது.
மேலும் இதிலுள்ள அவலம், நாடுகடந்த அரசின் பிரதமரான விஸ்வநாதன் ருத்திரகுமாரன் செல்ஹேய்மின் கூற்றுக்களை மறுதலித்திருப்பதாகும். உண்மையில் கே.பியால் வழங்கப்பட்ட 16பக்க அறிக்கை தொடர்பிலும், அன்றைய சூழலில் அதனை செய்வதற்கான சர்வதேச பின்னனி குறித்தும் ருத்திரகுமாரன் நன்கு அறிவார். அனைத்துக்கும்மேல் கே.பியால் பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட 16பக்க அறிக்கையை எழுதியவரே ருத்திரகுமார் என்பதுதான் இதிலுள்ள சுவாரஸ்சியமான தகவல். தான் எழுதிய 16பக்க அறிக்கைக்கு பிரபாகரன் அனுப்பிய மூன்றெழுத்து பதில் பற்றி, அப்போது அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் ருத்திரா தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் அதே ருத்திரகுமார் – இன்று தான் நன்கு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தையே மறுதலித்திருப்பதானது, தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் இழந்து போவதற்கே வழிவகுத்துள்ளது. மேலும் ருத்திரகுமாரன் தமிழர்களை பொய்யர்களாகவும் சர்வதேசத்தின் முன் காட்ட முற்பட்டிருக்கின்றார். அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ருத்திரகுமார் கூட, சர்வதேச விவகாரங்களை வெறும் உணர்ச்சிகர விடயமாகவே அணுகியிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் (LTTE’s Understanding Of International Affairs Was “Close To Zero) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிவு பூச்சியத்திற்கு நெருக்கமானதென்று ஏலவே, செல்ஹேய்ம் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில்தான் ருத்திரகுமாரன் இவ்வாறானதொரு மறுப்பை வெளியிட்டிருக்கின்றார்.
எரிக் செல்ஹேய்ம் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கான ஒரு ஏற்பாட்டாளர் என்னும் வகையில் அவர் மேற்குல நலன்களை அச்சொட்டாகப் பாதுகாக்க முயலும் ஒரு ராஐதந்திரி. இதற்கு மேல், செல்ஹேய்ம் பeric-7ிரபாகரன் புகழ்பாட வேண்டுமென்பதெல்லாம் சில தமிழர்களின் அறியாமையே தவிர, அது அவரது பிரச்சனையல்ல. செல்ஹெய்மைப் பொறுத்தவரையில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கான பங்களிப்பு என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு  (Assignment)பணி அவ்வளவுதான். இது மேற்குலக ஆசியுடன் மேற்கொள்ளப்பட்ட ((Oslo Assignment)  ஒஸ்லோ பணி. இந்த பணியில் அவர் தோற்கவுமில்லை வெல்லவுமில்லை. ஒப்பீட்டளவில் விடுதலைப்புலிகள் மீது செல்கேய்முக்கு அனுதாபமிருந்திருக்கலாம். அதற்கு செல்ஹெய்முக்கும் விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கத்திற்கும் இடையில் நிலவிய நட்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சமாதான முன்னெடுப்புக்களில் நோர்வேயின் வகிபாகம் தொடர்பான (Pawns of peace)  மதிப்பீட்டறிக்கை ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட போது, அங்கு செல்ஹெய்ம் தெரிவித்திருந்த ஒரு விடயம் எனது ஊகத்திற்கு வலுச் சேர்க்கின்றது – பிரபாகரனுக்கு ஐனநாயக அனுகுமுறைகள் விளங்காது, அவரால் சர்வதேசத்தை விளங்கிக்கொள்ள முடியாது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு யுத்தப் பிரபு. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சீன யுத்தப் பிரபுக்கள் போன்றவர், தயவு செய்து அவரை விளங்கிக் கொள்ளுங்கள் – இப்படி பாலசிங்கம் தன்னிடம் பகிடியாகச் சொல்வதாக செல்ஹெய்ம் அப்போது குறிப்பிட்டிருந்தார். இந்த பின்னனியில் பார்த்தால், பாலசிங்கத்துடனான நட்பின் ஊடாக பிரபாகரன் மீது செல்ஹெய்முக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த அனுதாபம் என்பது, பிரபாகரன் ஐனநாயக வழிக்கு வரவிரும்பின், அதற்கானதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்னும் அளவிலானது மட்டுமே ஆகும்.
செல்கெய்மை பொறுத்தவரையில், சர்வாதிகாரிகள் ஆபத்தான மனிதர்கள் மேலும் பின்லேடன் போன்றவர்களுடன் கூட பேச வேண்டும், அவ்வாறானவர்களுக்கும் கூட நாம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென்னும் கருத்தை கொண்டிருப்பவர். விடுதலைப்புலிகளின் தலைமை ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் 2009 யூன் மாதம் அவர் பி.பி.சியிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், மேற்படி கருத்தை பதிவு செய்திருந்தார். உலகத்தால் மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்ட, குறிப்பாக மனிதர்களை வெடிகுண்டாக பயன்படுத்தி சாதாரண மக்களின் கொலைகளுக்கு காரணமாகவிருந்த பிரபாகரனுடன் பேச வேண்டுமென்று நீங்கள் எவ்வாறு முடிவு செய்தீர்கள்  – என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, செல்ஹேய்ம் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இன்று செல்ஹேய்ம் போன்ற சமாதான ஏற்பாட்டாளர்கள் கூட பிரபாகரனின் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருப்பதில் இருந்து, தமிழர் தரப்பு எதனை விளங்கிக் கொள்ளப் போகிறது என்பதுதான் இந்த கட்டுரை முன்னிறுத்த விரும்பும் கேள்வி.
இன்று தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு அவசியம் என்பதில் கரிசனை கொள்ளும் தமிழ் தலைமைகள், உண்மையிலேயே அவர்களுக்கு தமிழ் மக்களது நலனில் அக்கறையிருப்பின், அவர்கள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் – பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் உலகளவில் எந்தவிதமான அனுதாபமோ மரியாதையோ இல்லை என்பதுதான் அந்த விடயம். இது பிரபாகரனை கடவுள் ஸ்தானத்துக்கு உயர்த்திப் பார்ப்போருக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம். இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் தம்மை ஒரு (De-Tiger politics)  புலிநீக்க அரசியலுக்கு உட்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்..

இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் பங்குகொண்ட நோர்வே என்பது வெளித்தோற்றத்தில் ஒரு நாடு போன்று காட்சியளித்திருந்தாலும், அடிப்படையில் அது மேற்குலகின் ஒரு நெகிழ்வான முகம். செல்ஹெய்ம் என்பவர் அந்த நெகிழ்வு முகத்தின் குரல் மட்டுமே. எனவே இன்று செல்ஹெய்ம் வெளிப்படுத்தியிருக்கும்  கருத்துக்கள் எவையும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல.  எனவே செல்ஹெய்மின் கருத்துக்களை உணர்ச்சி வசப்படாமல் பார்ப்போர், அதற்குள் ஒரு செய்தி பொதிந்திருப்பதை காணலாம்.eric-8
பிரபாகரனின் அரசியலை கைவிடுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. ஏனெனில் நோர்வேயின் வடிவில் மேற்குலகு இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் பங்குகொண்டமையானது, பிரபாகரனின் (அவர்களது புரிதலில்) பயங்கரவாத வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளியிடுவதற்கேயன்றி பிரபாகரனை, பிரபாகரனிசத்துடன் காப்பாற்றுவதற்காக அல்ல. இங்கு முற்றுப்புள்ளியிடல் என்பது, ஒன்றில் வழிக்கு கொண்டுவருவது அல்லது இல்லாமலாக்குவது என்னும் பொருள் கொண்டதாகும். 2001ம் ஆண்டு RAND  -தேசிய பாதுகாப்பு ஆய்வு நிலையம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்று அமெரிக்கா விடுதலைப்புலிகள் குறித்து எவ்வாறானதொரு பார்வையைக் கொண்டிருந்தது என்பதை கோடிகாட்டியதுடன், விடுதலைப் புலிகள்; ஒரு வலுவான ஆயுத அமைப்பாக இயங்குவதை அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதிக்கப் போவதில்லை என்னும் செய்தியையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையை கூர்ந்து வாசிக்கும் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பூண்டோடு அழிக்கப்படுவதற்கான புறச் சூழலை அவதானிக்கலாம் – இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பும் லெபணானில் ஹிஸ்புல்லா அமைப்பும் (bloodies practitioner of terrorism) இரத்தக்களரியான பயங்கரவாதத்தை பயிற்சி செய்பவர்களாக இருக்கலாம் மேலும், இவ்விரு அமைப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டிய Insurgent) அரசகவிழப்பு அமைப்புக்கள் என்பதை அவதானிப்பதும் இந்த அறிக்கையின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி அறிக்கையானது – (Trends in Outside support for Insurgent Movements – National Security Research Davison – RAND)  விடுதலைப்புலிகள் அமைப்பு எவ்வாறு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறுகிறது, எவ்வாறு தங்களுக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது, சர்வதேச சமூகத்தின் அதரவை திரட்டும் வகையில் எவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது போன்ற விடயங்கள் அனைத்தையும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் மீதான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆய்வு நிலையம் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்திற்கான ஒரு (Role model)  முன்மாதிரியாகவே நோக்கப்பட்டிருக்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில்தான் மேற்கு நோர்வேயின் ஊடாக இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு உதவியது. ஏலவே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகால் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கின்ற புறச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டுவர முடியுமென்பதே மேற்கின் கணிப்பாக இருந்தது. எனினும் தனது இக்கட்டு நிலையை துல்லியமாக மதிப்பிட்டுக் கொண்ட பிரபாகரனோ மக்கள் பெருமளவில் இறக்கும் போது, அது சர்வதேசத்திற்கு ஒரு நெருக்கடியை கொடுக்கலாம், அதன் மூலம் தான் காப்பாற்றப்படலாம் என்று கணித்திருக்கிறார். விடுதலைப்புலிகள் மக்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டதை கருத்தில் கொண்டு சிந்தித்தால், இவ்வறானதொரு ஊகத்திற்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனாலும் அது கைகூடவில்லை.  விளைவு விடுதலைப் புலிகளும் அழிந்து கூடவே மக்களும் இறக்க நேர்ந்தது.
4இதில் ஆவேசப்பட ஒன்றுமில்லை ஏனெனில் இதுதான் உலக ஒழுங்கு. இதனை பிறிதொரு வகையில் குறிப்பிடுவதானால் – பிரபாகரனை மிகவும் ஆபத்தான, மூர்க்கமான பயங்கரவாதி என்று வர்ணித்த அமெரிக்க தலைமையிலான மேற்குலகு, பிரபாகரனுக்கு ஒரு இறுதி சந்தர்ப்பத்தை வழக்கிப்பார்த்தது. சுருங்கச் சொல்வதானால், மேற்குலகம் பிரபாரனுக்கு ஐனநாயகம் தொடர்பில் ஒரு பரிட்சை வைத்துப் பார்த்தது. பரிட்சையில் பிரபாகரன் சித்தியடையவில்லை. தவிர பிரபாகரன் பரிட்சையில் தோல்வியடைவதற்கான அறிகுறிகள் தெரிந்த போது, அதனையும் மேற்கு நோர்வேயின் ஊடாக சுட்டிக்காட்டத் தவறவில்லை. லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே பிரபாகரனை எச்சரிக்கும் வகையில் கடிதமொன்றை அனுப்பியிருந்தது. நோர்வேயின் வெளிவகார அமைச்சர் ஐன் பெட்டர்சனின் கையெழுத்துடன் பாலசிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதம், மேற்குலகின் தெளிவானதொரு செய்தியை வெளிப்படுத்தியிருந்தது. சமாதான உடன்பாடு சிக்கலானதொரு கட்டத்துக்குள் சென்றிருப்பதை சுட்டிக்காட்டிய மேற்படி கடிதம், தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை (If the LTTE does not take a positive step forward at this critical juncture, the international reaction could be severe - (17th August 2005) விடுதலைப்புலிகள் சாதாமாக பரிசீலித்து, முன்னோக்கி செல்வற்கான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால், சர்வதேசத்தின் பதில் நடவடிக்ககைள் பாரதூரமாக அமையும் – எனவே சர்வதேச சமூகம் தமிழர்களை கைவிட்டுவிட்டதே என்று கூறுவதில் உண்மையில்லை. அன்றைய சூழலில் தமிழர்களின் தலைவிதி பிரபாகரனின் நெகிழ்வான முடிவில் தங்கியிருந்தது. ஆனால் பிரபாகரனோ மேற்கின் நெகிழ்வான போக்கிற்கு இணங்கிப் போகவில்லை மாறாக, கடுமையான முடிவையே வரவழைத்தார்.
அன்றைய சூழலில், பிரபாகரன் இந்த பரிட்சையில் சித்தியடைவதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன – ஒன்று, சர்வதேசத்துடன் (அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப) ஒத்துப் போவது மற்றையது, ஒத்துப் போக மனமில்லாவிட்டால், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதன் மூலம் யுத்தத்தை நிறுத்துவது. அவர் இந்த இரண்டில் எதனைச் செய்திருந்தாலும் தமிழ் மக்கள் நிட்சயம் நன்மையடைந்திருப்பர். ஏனெனில் இந்த யுத்தம் இந்தளவு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதே பிரபாகரனை அழிப்பதற்காகத்தானே ஒழிய விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக அல்ல. மேற்படி மேற்குலக பரிட்சையின் போது, ஒரு மேற்பார்வையாளராக இருந்தவரே எரிக் செல்ஹெய்ம் ஆவார். அந்த மேற்பார்வையாளர் தனது அனுபவங்களை இப்போது சொல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இவ்வளவுதான் விடயம். எனவே சர்வேதேச சமூகம் விடுதலைப்புலிகளுக்கு நற்சான்றிதழ் வழங்குவதற்காக வரவில்லை என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு இந்தக் கட்டுரை முன்னிறுத்தியிருக்கும் விடயங்கள் எவையுமே ஆச்சரியமானதாக இருக்காது. இலங்கைப் பணியை நிறைவு செய்து கொண்ட நோர்வே தனது அடுத்த பணியை கொலம்பியாவில் ஆரம்பித்துள்ளது. ஒரு வேளை கொலம்பியாவில் நோர்வேயின் இணக்க முயற்சிக்கு எதிர்பார்த்திருக்கும் வெற்றி கிட்டக் கூடும். ஆனால் வெற்றிகிட்டாவிட்டாலும் நிட்சயம் நோர்வே தோற்கப் போவதில்லை. சில வேளை அழிந்துபோன அமைப்புக்களின் பட்டியலில் கொலம்பிய விடுதலை இராணுவமும் சேரக் கூடும்.
பிரத்தியேக தொடர்புகளுக்கு : jathindra76@yahoo.com
நன்றி: எதுவரை








யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது


By Nirshan Ramanujam
2012-11-28 13:22:18

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
 
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் நேற்று பதற்றம் நிலவியது.
இதனைக் கண்டித்து இராணுவத்தினருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அதனையடுத்து பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி மேற்கொண்டுள்ளனர். அதன்பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
தற்போது நிலைமை சீரடைந்துள்ள போதிலும் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
 
பல்கலைக்கழக மண்டபத்துக்குள் மாணவர்கள் அனைவரும் இருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(பிந்திக் கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் எதிர்பாருங்கள்)

நன்றி வீரகேசரி 

பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்


By Priyarasa
2012-11-28 14:43:12


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்..
 

 

நன்றி வீரகேசரி 





கடந்த காலத்தை நோக்கி அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா?
- யாழ் பல்கலைக்கழக  மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மனோ கணேசன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கண்டன ஊர்வலம் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல், ஊடகவியாளர் தேவநாயகம் பிரேம்நாத்  மீதான தாக்குதல், பிரதேச சபை தலைவரின் வீடு எரிக்கப்பட்டமை ஆகிய தொடர்ச்சியான வன்முறைகள், வட மாகாணத்தில் 1980ம் வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவூட்டி, இன்று வடக்கில்  இலங்கை இராணுவத்தின் ஆட்சி நடப்பதை படம் பிடித்து காட்டுகின்றன.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம் மீண்டும், கடந்த காலத்துக்கு செல்வதற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா? அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ரோகன விஜேவீர 1989ம் வருடம் இராணுவத்தால் கொல்லப்பட்ட நவம்பர் 13ஐ ஒவ்வொரு வருடமும் தமது போராளிகளின் நினைவு தினமாக அனுசரிப்பதற்கு ஜேவிபியினருக்கு தென்னிலங்கையில் இருக்கின்ற உரிமை ஏன் தமிழ் இளைஞர்களுக்கு வடக்கில் இல்லை? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள்  தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,கடந்த காலத்தை நோக்கி  தமிழ் இளைஞர்களை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு அழைத்து செல்கிறதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மனங்களில் இன்று எழுந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மன்றத்தில் பிணை வழங்கி காப்பாற்றி வரும்  இந்தியா, அமெரிக்கா அரசாங்கங்களும், ஐக்கிய நாடுகள் சபையும், இவற்றுக்கு  உரிய பதில்களை  பெற்று தர வேண்டும்.
இராணுவம் மாணவர் விடுதிகளுக்கு உள்ளே சென்றதும்,  அதையடுத்து மாணவர்களின் எதிர்ப்பு  ஊர்வலத்தின்மீது தாக்குதல் நடத்தியதும் அத்துமீறிய செயல்களாகும். அதேபோல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் தாக்கப்பட்டமை அடாவடித்தனமானது.
தென் இலங்கையில், போராளிகளை நினைவு கூறுவதற்கும், ஜனநாயக ரீதியாக  எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அனுமதிகள் வாங்கவேண்டியதுகூட இல்லை. வீதிகளைமூடி, கடைகளை மூடி, விளக்குகளை கொளுத்தி, பெரும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், இன்று கொழும்பிலும், தென் இலங்கையிலும் தினசரி நடக்கின்றன. இவை ஏன் வடக்கில் நடைபெற முடியாது? இந்த நாட்டில் தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு என இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா?     
வட மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை மீண்டும் தனித்து போராட்ட களத்துக்கு அனுப்பி அழிக்க நினைக்கும் முயற்சிகளை தமிழ் மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும். கடந்தகாலங்களை விட இன்று உலகம் இலங்கை தமிழர் இன்னல்களை அறிந்துள்ளது. இன்று உலகின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாக ஐநா சபை வரை நமது பிரச்சினை நீண்டுள்ளது.   எனவே, இனியும் நமது இளைஞர்களும், மாணவர்களும் மாத்திரம் தனித்து நின்று போராட வேண்டியதில்லை.
இளைஞர்களை போராட தூண்டிவிட்டு அழிக்கும் அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் எந்த வித தீர்வுகளையும் கண்ணில் காட்டாதது மாத்திரம் அல்ல, இருப்பதையும் பறித்து கொள்ளும் அரசாங்கத்தின் கபட நோக்கங்களுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ் இனமும் ஜனநாயகரீதியாக போராடவேண்டும். மாணவர்களையும், இளைஞர்களையும் மாத்திரம் போராட அனுப்பிவிட்டு, காத்திருக்காமல் தலைவர்களுடன் கரம் கோர்த்து அனைத்து தரப்பு தமிழ் மக்களும் சாத்வீகரீதியாக அணிதிரள்வதன் மூலமாகவே ஒரு இனமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும். அதற்கான வேளை  இன்று வந்துவிட்டது.
நன்றி தேனீ 





யாழ். பல்கலை விவகாரம்; அமெரிக்கா கரிசனை
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும். இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும்  நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்". நன்றி தேனீ

No comments: