சிட்னியில் இலக்கிய சந்திப்பு

.













3 comments:

kirrukan said...

சிட்னியில் பல நிகழ்ச்சிகள் தாயக மக்களுக்கு என்று நடத்தினம் அவையள் இப்படியான மக்களை கவனிப்பதில்லையோ.....


இலக்கிய ஆர்வாளர்கள் இதற்கு என்ன செய்கிறார்கள் ,கதைக்கு கரு கிடைத்துள்ளது என்று எண்ணுகிறார்களா?


நாயன்மாருக்கு சிலை வைக்கிறோம்
மாவீரர்களையும் வணங்குகிறோம்

ஆனால் உயிருடன் வாழும் போராளிகளை கவனிக்க தயங்குகிறோம்.ஒரு விதத்தில் பார்த்தால் நாய‌ன்மாரும் தீவிரவாதிகள்தான்....

Anonymous said...

முதலில் வாசிக்கக் கடினமாக இருக்கும் PDF format இல் இருக்கும் இந்த ஆக்கத்தை வாசித்து பின்னூட்டம் இட்டமைக்கு என் மரியாதை கலந்த நன்றிகள் கிறுக்கன்.

//இலக்கிய ஆர்வாளர்கள் இதற்கு என்ன செய்கிறார்கள் ,கதைக்கு கரு கிடைத்துள்ளது என்று எண்ணுகிறார்களா? //

இல்லை நண்பரே! பெண் என்ற வகையில் அவளின் அவலவலியின் ஓலத்தை அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் நம்மால் உணரமுடியும் . அதனால் தான் அன்றய இலக்கிய சந்திப்பை இந்த உரத்த சிந்தனையை சமூகத்தின் முன் வைத்து நிறுத்தினோம்.

உண்மையில் கலையாகட்டும் இலக்கியமாகட்டும் ஊடகமாகட்டும் அது எதுவாயினும் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். சமூகத்தின் பால் கரிசனை கொண்டு மனிதம் சார்ந்த சமூக சிந்தையோடு அது சார்ந்த கலையூடாக அதை வெளிப்படுத்த வேண்டும். அது ஒரு ஆவணம். அழகியல் சார்ந்த ஆவணம் அவ்வளவு தான்.

ஆனால் அது கூட நடைபெறவில்லை என்பது இப்போதைக்கு ஒரு புறமாக இருக்கட்டும்.

ஆனால் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் - நான் நீங்கள் உட்பட -அந்தச் சமூகம் சார்ந்து ஒரு கடமை உண்டு. நாம் என்ன செய்தோம் அதற்கு? அல்லது நாம் என்ன செய்யப் போகிறோம் அதற்கு? இது நம் ஒவ்வொருவருக்குமான கேள்வி!

அதனைத்தான் கடந்த மாத சிந்தனையாக இலக்கியச் சந்திப்பு சமூகத்தின் முன் வைத்தது.

(இவ்வாறு ஒன்று நடைபெறவே இல்லை. அவை விரும்பித்தான் இதை செய்யினம். - இதற்கு வேறுவிதமான அரசியல் சாயம் பூசும் தன்மைகள் – இவை எல்லாம் நமக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என்றால் நம்புவீர்களா?
முதலில் நாம் நம்முடய சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது கிறுக்கன். அது அதிர்ச்சியான பல குணாதிசயங்களைத் தன்னோடு கொண்டிருக்கிறது)

இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர். யசோதா.ப.

Anonymous said...

இந்த ஆக்கத்தைப் பிரசுரித்த தமிழ்முரசுவுக்கும் என் அன்பார்ந்த நன்றி

யசோதா.ப.