சடங்கும் கலாசாரமும் - இந்திரா பார்த்தசாரதி

.

அண்மையில, அரசாங்கம், ஒரு சிற்றூர் கோயில் திருவிழா ஒட்டி நடக்க இருந்த எருதுச் சண்டையைத் தடை உத்தரவு போட்டு நிறுத்தி விட்டது. இதனால், மனம் தளராமல், அவ்விழா அன்று, ஆயிரம் கோழிகளை அக்கோயில் தெய்வமான முனியப்பனுக்குக் காணிக்கைக் கொடுக்கும் சடங்கை அந்தக் கிராமத்து மக்கள் நிகழ்த்தினார்கள் என்பது செய்தி.

எருதுச் சண்டை என்பதை சமயம் சார்ந்த ஒரு கலாசார வைபவமாக அவ்வூர் மக்கள் மக்களின் அடிமனத்தில் காலங்காலமாக நிழலாடிக் கொண்டிருக்கக் கூடும். அரசாங்கத் தடை அவர்களுடைய அக்கலாசார அடையாளத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக அக்கிராமத்து மக்கள் நினைத்திருக்கலாம். கோழியைக் கொல்வதை யாரும் தடுக்க முடியாது. ஹிந்து முன்னணியினர் பசுவைக் கொல்வதற்குத் தான் ஆட்சேபணை தெரிவிக்கக் கூடும். மதத்தின் பேரில் நிகழும் மனிதக் கொலைகளைக். கோட்பாட்டு யுத்தமாகத்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நினைக்கின்றன.கோழிக்கு ஆதரவாக இன்னும் எந்த அரசியல் கட்சியும் உருவாகவில்லை. அதனால்தான், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழியாக ஆயிரம் கோழிகளை முனியப்பனுக்குக் கடன் நேர்த்தியாகச் செலுத்தியிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
தொல்குடிமக்கள் அடிமனத்தில் சடங்கு என்பது அவரள் கலாசாரத்தின் இன்றியமையாத அம்சம்,அடையாளம்.  இந்தத் தொல்குடிக் கலாசாரமே பிறகு உருவான ,ஹிந்து சமயத்தின் பல்வேறு விழாக்களின் அடிவேராகவும் இருக்கின்றது. அழகர் ஆறு கடப்பதை நிகழ்த்தாமல், மீனாட்சிக் கல்யாணம் நடைபெறுமா? மீனாட்சிக் கல்யாணத்தை தடை உத்தரவு போட்டு நிறுத்தி விட முடியுமா?
ஒருவகையில், பார்க்கப்போனால், இந்நிகழ்வுகள் அல்லது சடங்குகள் அக்காலத்திய நாடகங்கள்.
ஆகவே தங்கள் கலாசாரத்துக்கு விடுக்கப்பட்ட எந்தச் சவாலையும் மக்கள் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
Nantri :indiraparthasarathy

No comments: