அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று: உஷா அன்பரசு

.

தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-

ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “ நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.


ஒரு விஷயத்திற்கு வருவோம்  நிறைய பேர் கிட்ட திறமை இருக்கும், ஆனா சில பேர் உயரத்துக்கு போறாங்க… சில பேர் நின்ன இடத்துலயே இருப்பாங்க. இதுல யாரை யார் இடம் மாற வைக்குதுன்னு பார்த்தாக்கா “ உழைப்புதான்..!”  தோல்வியே வந்தாலும், மனசு உடையாத உழைப்பு இருக்க வேண்டும். உலகத்தில சிறந்த நறுமணம் வியர்வையின் வாசம் னு சொல்வாங்க. கஷ்டபட்டு உயரத்துக்கு போனவங்களை பார்த்தா அவங்க அனுபவங்கள்  பிரமிப்பா இருக்கும். ஏன்னா அந்த வலிகள் நமக்கு தெரியாதது. ஒரு வேளை உணவிற்கு கூட தவித்து, வானமே கூரையாக வாழ்ந்து வானத்தை எட்டி பிடிக்கும்    அளவு  உயர்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்படி   ஒரு அனுபங்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று கூட ஏக்கப்பட்டிருக்கிறேன். கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர்கள் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.   பேராசைக்கும், வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெற்றி நாம் ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதற்காக உழைத்ததால் கிடைத்த பரிசு! பேராசை குறுகிய காலத்தில் தகுதி இல்லாமலே  தேடிக் கொள்ளும் பொருள்.

nantri : tamil mayil 


No comments: