' தானே கள்வன் ' - கி.வா.ஜகந்நாதன்


.
சல சலவென்று ஓடும் நீர்அதன் கரையிலே அவனும் அவளும் காதல் பூண்டார்கள்அங்கே ஒருவரும் இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருந்தனர்ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பியிருந்தது போலத் தோன்றியதுஇன்றோஅவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும்தோழியரும் சூழ இருக்கின்றாள்ஆனால் அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது.

அவன் அவளைப் பிரிந்தான். 'சிலநாளே இந்தப் பிரிவுவிரைவில் வந்து உன்னை மணப்பேன்அதுவரையிலும் பொருத்திருஎன்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான்அவள் அவனை நம்பினாள்.உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடுகாத்திருந்தாள்.

காதலின்ப நினைவிலும் காதலனை எதிர்பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக்கழித்துக்கொண்டிருந்தாள்ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியதுபிரிவுத் துன்பத்தைப்பொறுத்திருந்தாள்அந்தத் துன்ப முடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற நினைவுஅதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது.

அவன் வரவில்லைஅவள் உள்ளத்தே சிறிது பயம் முளைக்கத் தொடங்கியதுஆனாலும் அன்புஅதை மறைத்ததுஅவளுடைய உயிர்த்தோழி அவளைத் தினமும் ஆயிரம் கேள்விகள்கேட்கிறாள்அவள் மேனியிலே வாட்டம் தோற்றுகின்றதுதோழி அது கண்டு, "ஏன் இப்படிவாடுகிறாய்?" என்று வினவு கிறாள்தன் உள்ளம்போலப் பழகும் அத்தோழிக்கு அந்தக் காதலிதனக்கு ஒரு காதலன் வாய்த்ததைச் சொல்லுகிறாள்.

அவன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும்இன்னுரை பேசித் தலையளி செய்ததும்அளவளாவியதும், 'பிரியேன்பிரிந்தால் உயிர் விடுவேன்என்று சொல்லியதும்பிரிந்துவருவேனென்று உறுதி மொழி கூறியதும் - எல்லாம் சொல்கிறாள்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு தோழி காதலிக்கு அச்சத்தை உண்டாக்குகிறாள்.

தோழிநீ காதல் புரிந்த கதை நன்றாயிருக்கிறதுஅவர் சூளுறவு கூறி உன்னையே மணப்பதாகச்சொன்னார் என்றாய்அதற்குச் சாட்சியாக யார் இருந்தார்கள்?

காதலி நினைத்துப் பார்க்கிறாள்இதற்கு முன்பு பழைய நினைவு வரும்போதெல்லாம் அந்தக்காதலனும் அவன் பேசிய பேச்சும் இன்பமும் வந்து மனத்தில் நிரம்பும்இப்பொழுது அவனைவிலக்கி அந்த இடத்தை நினைந்து பார்க்கிறாள்அவனைத் தவிர அங்கே யார் இருந்தார்கள்?தனிமைதான்அந்தத் தனிமை அன்று இனித்ததுஇன்றோ அதை நினைக்கையிலேயே உள்ளம்நடுங்குகிறதுதோழிக்கு விடை சொல்கிறாள்.

காதலியாரும் இல்லை.

தோழிஅப்படியாஒருவரும் இல்லையாநன்றாக யோசித்துப் பார்பலர் முன்னிலையில்நாயகனைக் கைப் பிடிப்பதல்லவா திருமணம்நீ காதல் மணம் செய்து கொண்ட அப்பொழுதுஒருவரும் இல்லையா?

காதலி சிந்தனாலோகத்திலே இருக்கிறாள்அங்கே தேடித் தேடிப் பார்க்கிறாள்ஒரு பூதரும் இல்லை.உண்மையில் இல்லையாஅவன் இருந்தான்அவன் ஒருவனே இருந்தான்.

காதலிதானே.

தோழிஅவர் ஒருவர்தாம் இருந்தாராயாரும் இல்லாத இடத்தில் உன் நலத்தை வெளவிய அவரைநம்பியா நீ உருகுகிறாய்ஒருவரும் காணாமல் ஒரு பொருளை வெளவுபவன் கள்வன் அல்லவா?

இந்த வார்த்தை காதலியின் உள்ளதே தைக்கிறதுஅவன் தன் உள்ளம் கவர் கள்வன் என்பதைஅவள் நன்றாக உணர்ந்திருக்கிறாள்தோழி சொல்வதிலும் உண்மை இருக்கிறதுபெருமூச்சுவிடுகிறாள்அந்த மூச்சோடு வருகிறது அந்த வார்த்தை.

காதலிகள்வன்!

தோழிமறைவிடத்திலே காதல் புரிந்த கள்வன் வார்த்தையிலே நம்பிக்கை வைக்கலாமாஅவர்அது கூறினார்இது கூறினாரென்று அவற்றை உண்மையாகக் கொள்ளலாமாஅவர் அந்தவார்த்தைகளைப் பொய்யாக்கி விட்டால் நீ என்ன செய்வாய்?

இந்தக் கேள்வியை இதுவரையில் காதலி எண் ணிப் பார்க்கவில்லைஅவர் பொய் கூறுவாரென்றுஎண்ணுமளவு அவள் மனம் மாசுபடவில்லைஇப் பொழுதோ தோழியின் வார்த்தைகள் அவள் நெஞ்சைக் கலக்குகின்றனஅவர் தாம் கூறிய வார்த்தை பொய்த்தால் அவள் என்ன செய்ய முடியும்?அவள் தன் நெஞ்சையே கேட்டுக் கொள்கிறாள்:

காதலிதான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ! (காதலர் அந்த உறுதி மொழியினின்றும்தப்பினால் நான் என்ன செய்வேன்!)

திருப்பித் திருப்பி இந்தக் கேள்வியை அவள் கேட்டுக் கொள்கிறாள்அவன் மொழி தவறான்கருத்திலே நின்றது அவள் வாழ்வின் இன்ப மாளிகைஅப்போது சிறிதும் சந்தேக எண்ணமேஇல்லாமல் வேதவாக்காக நம்பினவலது உள்ளத்தில் இப்போது ஐயவுணர்ச்சி புகுந்து நெகிழச்செய்கின்றது.

தோழிஐயோபைத்தியமேஒருவரும் இல்லாத தனிமையிலே யாரோ ஒருவர் கூறியவார்த்தைகளை உண்மையென்று நம்பிவிட்டாயேநன்றாக யோசித்துப் பார்அவர் உன்னோடுகாதல் புரிந்தபொழுது சாட்சி ஒருவரும் இல்லையா?

காதலி என்ன செய்வாள்எல்லாவற்றையும் மறந்து அவன் பேச்சிலே செயலிலே ஒன்றிப்போனஅக்காலத்தில் மற்றவற்றைப் பார்க்க அவளுக்குக் கண் ஏதுதோழிமேலும் மேலும் கேட்கும்கேள்விகளால் அந்தப் பேதைப் பெண் தன் உள்ளத்திலே பழைய காட்சியை நிறுத்திப் பார்க்கிறாள்.நிலைக்களமே இல்லாத சித்திரம்போல அவன் உருவம் ஒன்றே அவளுக்குத் தோன்றுகிறது.அவனை மறக்கப் பார்க்கிறாள்சாட்சியை உள்ளக் கண்ணால் தேடிப் பார்க்கிறாள்சோர்வுஉண்டாகின்றதேயன்றிப் பயன் இல்லை.

இதோமின்னல்போல ஒரு நினைவு வருகிறது. "ஒரு சாட்சி உண்டுஎன்று துள்ளுகிறாள்.

தோழியோசித்துச் சொல்.

அவள் கண்ணுக்குஅந்தத் தனிமையிலே அருவி யோரத்திலே நின்ற நாரை காட்சி அளிக்கிறது.

காதலிகுருகும் உண்டு தான் மணந்த ஞான்றே. (அவர் காதல்புரிந்த காலத்தில் ஒரு நாரை யும்இருந்ததுண்டு.)

தோழி சிரிக்கிறாள்நாரையைப் பெரிய சாட்சியாகச் சொல்ல வந்துவிட்டாளே என்ற நினைவு அவளுக்குதனிமை தவழ் மோனவுலகத்திலே அந்த நாரை ஒன்றாவது அகப்பட்டது எவ்வளவு பெரியகாரியமென்பது காதலியின் எண்ணம்.

தோழிநாரையாநன்றாக யோசித்துச் சொல்உண்மையிலே நாரை இருந்ததா?

அக்கினி ஓர் இடத்தைப் பற்றிக்கொண்டால் அதனை முற்றும் கவர்ந்துகொள்வது போல,சாட்சியைத் தேடித் திரிந்த காதலியின் உள்ளம் நாரையைப் பற்றிக்கொண்டதுஅதை விடாமல்பற்றிக்கொள் கிறாள்அவளது சிந்தனை யரங்கிலே இதுவரையில் காதலன் நின்றான்இப்பொழுதுநாரை வந்து நிற்கிறதுகாதலன் மறைகிறான்.

அந்த நாரையை அடிமுதல் முடிவரையில் பார்க்கிறாள்அது தன் ஒற்றைக் காலிலே நிற்கிறது.அந்தக் காலும் அதன் பாதமும் அவளுக்குத் தினையின் தாளை நினைப்பூட்டுகின்றனபூமிக்குமேலே புடைத்துத் தோன்றும் நான்கைந்து பச்சை வேரும் அவற்றின்மேலே நிற்கும் தினைப்பயிரின்தண்டும் நாரையின் ஒற்றைக்காலோடு சேர்ந்து நினைவுக்கு வருகின்றனமேலே உள்ள நாரையின்உடம்பைப் பார்க்காமல் அதன் காலை மாத்திரம் பார்த்தால் நிச்சய மாகத் தினைத்தாளென்றுநினைக்கும்படி நேரும்.

அவள் சிந்தனைநாரையைப் பாதாதிகேசமாக அளந்துகொண்டிருக்கையில் தோழி மறுபடியும்கேட்பது காதிற் படுகிறது.

தோழிஅது நாரைதானா?

'அதில் என்ன சந்தேகம்தினைத் தண்டுபோல இருக்கும் பசுங்காலையுடைய அதை நான்மறப்பேனாஎன்று எண்ணினாள் காதலிஅவள் சொல்லுகிறாள்:

காதலிதினைத்தாள் அன்ன சிறு பசுங்கால குருகு (தினையின் தண்டுபோன்ற சிறிய பசிய காலையுடைய நாரைதான்.)

தோழி விட்டபாடில்லை.

தோழிநாரையா சாட்சிமிகவும் வேடிக்கை தான்அது என்ன செய்துகொண்டிருந்தது?மறந்துபோனதை நினைவுக்குக் கொண்டுவருவது எவ்வளவு சிரமம்நினைவில் இருப்பதைமறப்பது பின்னும் எவ்வளவு கஷ்டம்காதலனை மறந்து நாரையை நினைத்தாள். 'அது எப்படிஇருந்ததுஎன்ன செய்தது?' என்றெல்லாம் கேள்வி கேட்டுத் திண்டு மிண்டாடச் செய்கிறாள் தோழி.அந்தப் பேதை நங்கை மறுபடியும் நாரைத் தியானத்திலே ஆழ்கிறாள்.

நாரை ஒற்றைக் காலிலே நின்றுகொண்டிருக் கிறதுதவம்புரியும் யோகியைப்போல ஒரே நோக்கத்தோடுஓடுகின்ற அருவியின் கரையிலே நிற்கிறதுஅது எதற்காக நிற்கிறது? 'அருவியிலே ஆரல்மீன் வருமா?' என்ற ஒரே நினைவிலே இந்த உலகத்தையே மறந்து நிற்கிறதுஅதன் உருவம்,இப்போது நன்றாகக் காட்சி அளிக்கிறது.

காதலிஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகு (ஓடு கின்ற நீரில் ஆரல் மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும்நாரை அது.)

நாரையின் காலையும் கண்ணையும் ஓர் இமைப்பிலே அவள் கண்டிருந்தாள்அது மனத்தில் ஏதோஒரு மூலையிலே பதுங்கிக்கிடந்ததுதூண்டித் துருவிக் கேட்கும் தோழியின் கேள்விகளால் அந்தநாரையை அகக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள்இனிதோழி என்ன சொல்வாளோ என்றுஎதிர்பார்க் கிறாள்அவளுக்கு இப்போது உலக முழுவதும் தோழியினிடம் அடங்கியிருக்கிறது.

தோழி சற்றும் இரக்கம் இல்லாதவள்அந்த நாரையைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக் கூடாதோஅவள்மறுபடியும் காதலியைத் தன் சிரிப்பினால் புண்படுத்துகிறாள்.

தோழிஅடி பேதையேஉலகமறியாத குழந்தையா நீமீனையே பார்த்துக் கொண்டு நிற்கும் நாரைஉங்களை எப்படிக் கவனிக்கப் போகிறதுஒற்றைக் காலில் நின்று ஒரே பார்வையாக ஆரல் மீன்வரவை நோக்கி நிற்கும் அதுவும் உன்னைப் போல் எல்லாவற்றையும் மறந்து நிற்பது தானேஅதுஒரு சாட்சியாகுமாஅது இருந்தும் இல்லாதது போன்றதேஅவர் கள்வனைப் போலச் சாட்சி யற்றதனியிடத்திலே காதல் புரிந்தார்அவருக்கு அவரே சாட்சி.

காதலியின் உள்ளத்தே வலியப் பிடித்து இழுத்து நிறுத்திய நாரை இப்போது மறைந்து விட்டது.மறுபடியும் காதலன் வந்து நிற்கிறான்அந்தத் தனிமையும் அவனும் அவள் உள்ளத்தேஇன்பத்தையும் துன்பத்தையும் கலந்த மயக்கத்தை உண்டாக்குகின்றனர்ஒருவரும் இல்லாததனிமைஅவன் மாத்திரம் இருக்கிறான்உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறான்.

"யாரும் இல்லைதானே கள்வன்என்று அவள் வாய் முணுமுணுக்கின்றதுஅந்தப் பல்லவியிலேஅவள் உள்ளம் கனிந்து இன்பம் காணுகிறது.

கள்வன் வரவைக் காதலி எதிர்பார்த்து நிற்கிறாள்.

*             *             *             *

இந்தக் காதற்காட்சியைச் சித்தரிப்பது பின் வரும் பாட்டு.

                தலைவி கூற்று
யாரும் இல்லைதானே கள்வன்;
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ!
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால,
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

                 - குறுந்தொகை - கபிலர் பாட்டு.

[பொய்ப்பின்-தப்பினால்எவன் செய்கோ-என்ன செய்யட்டும்தினைத்தாள்-தினையின் தண்டு.ஒழுகுநீர்-ஓடுகின்ற நீரிலே செல்லுகின்றஆரல்-ஆரலென்னும் மீன்குருகு-இங்கேநாரை.]

நன்றி - thoguppu 

No comments: