3வது ஆண்டில் காலடி வைக்கின்றது தமிழ்முரசு


அன்பான வாசகர்களே இவ்வாரம் 3வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது  உங்கள் தமிழ்முரசு. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் எங்களை சோர்வின்றி இயங்கவைக்கின்றது என்பதே உண்மை. படையுங்கள் பகிருங்கள். இது உங்களுக்காக மலரும் வாராந்த இதழ்.
அன்புடன்
ஆசிரியர் குழு

5 comments:

Anonymous said...

அதற்கிடையில் மூன்று வருடங்கள் ஆகி விட்டதா?

ஒரு வாராந்த மின் சஞ்சிகையை நடத்துவதென்பதே ஒரு சவாலான விடயம்.அதற்கு அர்ப்பணிப்பும் ஆர்வமும் சமூக உணர்வும் இருந்தால் மட்டுமே அதனைச் சாத்தியப் படுத்த முடியும்.

அந்தச் சாதனையைச் செய்திருக்கிறீர்கள்!!

சிறப்பான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் முரசு அவுஸ்திரேலியாவுக்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

உங்கள் சஞ்சிகையின் பின்னால் தமிழ் சமூகம் ஒன்றிருக்கிறது!தகவல்களைப் பார்த்துப் பயன் பெறுகிறது. நம்புங்கள், தொடரட்டும் உங்கள் சேவை!!

சக்தி.

kirrukan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அடேயப்பா இரண்டு வயசு முடிஞ்சு 3 தொடங்குது.சிட்னி மேடைகளையும் சிட்னி கோயில்களையும் வண்ணப்படத்தில் தரும் டமிழ்முரசுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

Ramesh said...

வாழ்த்துக்கள் இரண்டு வருடங்கள் நன்றாக செய்துள்ளீர்கள் சோர்ந்து விடாமல் தொடருங்கள். இலக்கியம், செய்தி என்பனவற்றிற்கு பல இணையத்தளங்கள் இருக்கின்றன. ஆனால் உள்ளுர் விடயங்களை உடனுக்குடன் தருவது உண்மையிலேயே நல்லவிடயம். நீங்கள் நல்ல இலக்கியம் நல்ல கவிதைகள் குறிப்பாக நல்ல சிறுகதைகள் என்பதை தேடி எடுத்து போடுகின்றீர்கள் மீண்டும் என் வாழ்த்துக்கள். சக்தி குறிப்பிட்டுள்ளதுபோல் சமூகசேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாலுபேருக்கு நன்றி.

Anonymous said...

தமிழ் முரசே தமிழ் போல நீ நீடு வாழ்க

வாரம் தவறாத உன் வளமான சேவைக்கு

பாராட்டுக்கள் பல்லாண்டு தொடர வாழ்த்துகின்றேன்

தர்மா

Senthil said...

வாரத்தில் திங்கட்கிழமை வருகிறதோ இல்லையோ காலை 8.30 மணிக்கு வேலைத்தலத்துக்கு தழிழ்முரசு வந்துவிடும். முதலில் மேலோட்டமாக மேய்ந்துவிட்டுத்தான் வேலைதொடங்குவது. அர்ப்பணிப்போடு செய்யும் ஆசிரியர்களுக்கு நன்றி. பல்லாண்டு தொடர வாழ்த்துகிறேன்