இந்திய அணியின் மாஸ்டர் பெட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் நீண்டநாள் கனவு இன்று நனவானது. இது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் ஆகும்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சதத்தை கடந்து இன்று சாதனை படைத்தார். சச்சின் 12.03.2011 ஆம் ஆண்டு தென்னாபிரிகாவிற்கு எதிரான போட்டியில், சதமடித்தார். இதனையடுத்து சத சாதனையை நிகழ்த்துவதற்கான அவரின் போராட்டம், ஒரு ஆண்டை கடந்தது. மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களில், சத சாதனை நிகழ்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றத்தையே அவர் அளித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரில் இன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலேயே சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1989ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வரலாற்றை ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது முதல் சர்வதேச சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது. ___நன்றி வீரகேசரி |
No comments:
Post a Comment