விம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 -செ.பாஸ்கரன்

.


17.03.2012 சனிக்கிழமை சிட்னியில் இடம் பெற்ற விம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 நிகழ்வு பகாய் சென்ரரில் இடம் பெற்றது. 6 மணிக்கு ஆரம்பமாகும் என்ற நிகழ்வு 6.20 மணிக்கு திரு திருமதி விஸ்வநாதன் மங்கல விளக்கேற்ற, ஜதுகிரி லோகதாசன் தமிழ்வாழ்த்து பாட , நிவேதா விமல் அவுஸ்திரேலிய வாழ்த்துப்பாட நிகழ்வு ஆரம்பமானது.
விஷ்வா இசைக்குழுவினர் இசை வழங்க பவித்திரா இறைவன் வருவான் என்ற பாடலை மிக அருமையாக பாடினார். இந்திய பாடகிகளின் குரல் போன்று மிக அருமையான பாடலாக அமைந்தது முதற்பாடல். தொடர்ந்து சிட்னியில் பிரபலமான பாடகரான சுந்தர் ஆராவமுதன் ஆயகலைகள் என்ற பாடலை பாடியது மிக நன்றாக இருந்தது. முதற் சில பாடல்கள் பாடும்போது ஒலி கட்டுக்குள் இல்லாமல் மிக குளப்பமாக இருந்தது இதனால் அருமையாக வழங்கப்பட்ட இசையைக்கூட ரசிக்கமுடியாது இருந்தது.


அடுத்து நேத்தன்ராஜ் என்ற பாடகரோடு புதியபாடகியாக அறிமுகம் செய்யப்பட்டார் சத்தியா என்ற பெண்பாடகி அறிமுகப்பாடலாக கண்களிரண்டால் என்ற பாடல் பாடப்பட்டது சத்தியா தூள்கிளப்பிட்டார் நல்ல பாடகிஒருவர் வருகை தந்திருக்கிறார். தொடர்ந்து பவிதாவின் மொழி காற்றின் மொழியாகி காதில் பாய்ந்தது அற்புதமாக பாடினார். தொடர்ந்து சுந்தார் சோகத்தில் ஆழ்த்துவதற்கு வாசமில்லா மலரிது என்ற பாடலை பாடினார் அருமையாக இசை தந்தார்கள் அதிலும் குறிப்பாக கிற்ரார் இசையும் ட்ரம் இசையும் அபாரம் கிற்ரார் இசைத்தவர் கானா என்று அழைக்கப்படும் இளைஞர்.விஷ்வா இசைக்குழுவினர் மிக நன்றாக செய்கின்றார்கள். லாவண்யாவின் புல்லாங்குழல் இசை நெஞ்சை தொட்டுச் சென்றது. சிவக்குமார் என்று நினைக்கிறேன் தபேலா மிருதங்கம் ட்ரம் என்று மாறிமாறி வாசித்து தள்ளுகின்றார் பாராட்டுக்கள். எல்லோருக்கும் பின்னால் அமைதியாக நின்று இவர்களையெல்லாம் நெறிப்படுத்திக்கொண்டிரக்கிறார் பாண்ட் மனேஜர் வாகீசன் குருபரன்.தொடர்ந்து பாடல்கள் நன்றாக செய்தார்கள் பின் மீண்டும் ஒரு புதிய அறிமுகம் செய்யப்பட்டாள் ஒரு சிறுமி வேறுயாருமல்ல விம்ரெக் விமலின் மகளான நிவேதா விமல்தான் மண்ணுக்கு மரம் பாரமா என்ற பழைய பாடலோடு வந்து சென்றார் தபேலா கலைஞர் வெளுத்து வாங்கிவிட்டார் இந்த பாடலுக்கு.
தொடர்ந்து   கண்ணாமூச்சி ஏனடா என்கண்ணா என்ற பாடலுக்கு சிந்தியா லக்சுமி என்ற இரு சிறுமிகள் நடனமாடினார்கள். ஜந்து சிறுவர்கள் ஆலால கண்டா என்றபாடலுக்கு ஆடிய நடனம் அரங்கத்தை அதிர வைத்தது அவ்வளவு நன்றாக ஆடினார்கள் அதிலும் அந்தக் குட்டிப்பையன் பாராட்டும்படியாக ஆடியிருந்தான்.தொடர்ந்து நான்கு பெண்பிள்ளைகள் ஆடிய நடனம் எல்லோரையும் ஆடவைத்தது என்றால் அது மிகையாகாது.நிகழ்ச்சியில் சேகரிக்கப்பட்ட பணம் கரித்தாஸ் அமைப்பின் மார்க் என்பவரிடம் விம்ரெக் அதிபர் விமல் அவர்களால் கையளிக்கப்பட்டது. எழுத்தாளர் மாத்தளை சோமு விசேட உரை நிகழ்தினார் தொடர்ந்து திருமதி நளினி விமல் நன்றியுரை வழங்கினார். பாடல்கள் தொடர்ந்தது.
நிகழ்ச்சியில் உச்சம்போன்று பவிதா பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் என்ற சங்கீதப் பாடல் கொள்ளை கொண்டது. சபையினரின் கரகோசம் மண்டபத்தையே அதிரவைத்தது. இதற்கு போட்டிபோல் சுந்தரும் சங்கீதப்பாடலான அவளொரு மேனகை என்ற பாடலை உச்சஸ்தானியில் பாடி முடிக்க மீண்டும் மண்டபம் அதிர்ந்தது.
மீண்டும் சில பாடல்களுக்குபின் கடைசிப்பாடலாக இளமை இதோ இதோ என்றபாடலை சாம் பாடினார் மிகவும் நன்றாக இருந்தது.சபையிலிருந்தவரக்ள் பலர் எழுந்து நின்று நடனமாடினார்கள். அதைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிக்கப்ட்டார்கள் அதிக நேரம் எடுத்துவிட்டது கௌரவிப்பு ;நிகழ்வு சரியாக ஒழுங்கு செய்யப்படாமை போல் தோன்றியது. எல்லோரும் கௌரவிக்கப்பட்டார்கள் இசைக்குழுவினருக்கு எதுவும் செய்யப்படவில்லை மிக அருமையான இசைக்குழுவினர் ஏன் தவறவிடப்பட்டது என்பது புரியவில்லை மனதுக்கு சற்று வருத்தமாக இருந்தது. விஸ்வா இசைக்குழுவினர் தொடர்ந்து மேடைக்கு வரவேண்டும் அதிலும் கிற்ரார் கானாவும் தபேலா சக்கரவர்த்தியும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்கள் என்பதில் எந்த ஜயமும் இல்லை.

சுந்தர் மிக அருமையாக பாடுகின்றீர்கள் நீங்கள் அறிவிப்பாளராகவும் பங்காற்றினீர்கள். உங்களைப்போன்ற பாடகரை பெறுவது கடினம் உங்களைவிட நல்ல அறிவிப்பாளரை எடுப்பதில் அதிக கஸ்டம் இருக்காது என்று நம்புகின்றேன் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் நன்றாக பாடுங்கள் பாராட்டுக்கள்.
பாராட்டுக்கள் விம்ரெக் ஸ்தாபனத்தாருக்கு.


2 comments:

Rajakopal said...

நிகழ்ச்சி overall நன்றாக இருந்தது என்றே சொல்லலாம். அதிலும் சுந்தர், பபிதா , சந்தியா ஆகியோர் பாடியது மிகவும் நன்றாக இருந்தது. சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆடிய நடனமும் பாராட்டுக்கு உரியவை.
பரசளிப்பு மற்றும் இடைவேளை ஆகியவை நீண்ட நேரம் எடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு பதிலாக பாடல்கள் சிலவற்றை பாடியிருக்கலாம். விமலின் சேவை பாராட்டுக்கு உரியது.
இடைவேளையின் போது விற்கப்பட்ட உணவுகள் குறிப்பாக பிரயாணி சிறப்பாக இல்லை. முழுக்க ரைஸ் ஆகவே இருந்தது.
இந்திய சகோதரர்களின் ரசிப்பு தன்மையும், ஆடலும், comments உம் மற்றவர்களால் ரசிக்க கூடியதாக இருந்தது . இலங்கை தமிழர்கள் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ அல்லது நினைத்து விடுவார்களோ என்ற பயத்திலேயே சுருண்டு இருந்து விடுகிறார்கள்.

எல்லாவற்றேயும் கூட்டிகழிச்சு பார்த்தால் அந்த டிக்கெட் விலைக்கு 60 மார்க்ஸ் கொடுக்கலாம்

Ramesh said...

என்ன செ.பாஸ்கரன் இரவில் தூங்குவீங்களா இல்லையா சனி ஞாயிறு இரண்டுநாள் நிகழ்ச்சியையும் எழுதியுள்ளீர்கள்.
நான் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை இதைப்படித்தபின்பு போகாததையிட்டு கவலை கொண்டேன். எங்கட ஆக்கள் பாடினமெண்டவுடன சூடு கண்ட பூனை போல சுருண்டு படுத்திற்றன். ஞாயிறு புத்தக வெளியீட்டிற்கு வரும்படி அழைத்திருந்ததால் ஒரு நாளை தவிர்த்துக் கொண்டேன் . விஸ்வா இசைக்குழுவையும் பாடகர்களையும் பற்றி வாசித்தபின் போயிருக்கலாம் என்று எண்ணினேன் .என்ன கம்பன் கழகத்தோடு சரியில்லையோ அந்த நிகழ்வுபற்றி வரும் எண்டு பாத்தேன் காணவில்லை.