உலகச் செய்திகள்

பங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி

சிரிய வன்முறைகளில் சிக்கி இதுவரை 8000 பேர் பலி: ஐ.நா.அதிகாரி தகவல்

சுவிஸில் அகோர பஸ் விபத்து : 22 பெல்ஜிய மாணவர்கள் பலி(பட இணைப்பு)

பங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி

13/3/2012

பங்களாதேஷில் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழந்ததில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் பலரைக் காணவில்லை.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பங்களாதேஷில் ஷரியத்பூர் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு 200 பயணிகளுடன் எம்வி ஷரியத்பூர்- 1 என்ற படகு புறப்பட்டது.


இன்று காலை மேக்னா ஆற்றில் சென்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் சரக்கு படகுடன் மோதி கவிழந்தது. இதில் 30 பேர் பலியாகியுள்ளனர், பலரைக் காணவில்லை. இதுவரை 35 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆற்றில் மூழ்கிய படகை வெளியே எடுத்தால் அதில் மேலும் பலர் இறந்துகிடக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவி்ததனர். மீட்பு பணி துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

நன்றி வீரகேசரி 





சிரிய வன்முறைகளில் சிக்கி இதுவரை 8000 பேர் பலி: ஐ.நா.அதிகாரி தகவல்

சி.எல்.சிசில் 13/3/2012

சிரியாவில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் அரசாங்க எதிர்ப்பு வெடித்ததிலிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ஓர் ஐ.நா. அதிகாரி தெரிவித்துள்ளார்.


ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் நஸீர் அப்துல் அசீஸ், பாதிக்கப்பட்டவர்களில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மற்றும் அரபு லீக் தூதர், கொபி அனான், சிரிய எதிர்க்கட்சியினர் ஆகியோர் சந்திக்கவிருந்த நிலையில் அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

கொபி அனான் சிரிய அதிபர் பஸார் அல் அசாத்துடன் டமாஸ்கஸில் பேச்சு நடத்திய பின் போர் நிறுத்த சாத்தியம் குறித்து ஒரு நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான அணுகல் மற்றும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

ஆனால் திங்களன்று துருக்கிப் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் உடனான பேச்சுக்குப் பின் அனான் சிரிய நிலைமை மிகவும் சிக்கலானது என விவரித்து இராஜதந்திரச் செயற்பாட்டுக்கு நேரமாகும் என்பதை ஒப்புக்கொண்டார்.

ஹோம்ஸ் நகரில் இராணுவத் தாக்குதலில் வன்முறையாளர்கள் சுமார் 47 பேர்; கொல்லப்பட்டனர் என்ற அறிக்கை மூலம் சிரியா முழுவதும் வன்முறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி





சுவிஸில் அகோர பஸ் விபத்து : 22 பெல்ஜிய மாணவர்கள் பலி(பட இணைப்பு)

சி.எல்.சிசில் 14/3/2012

சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த பஸ் ஒன்று செவ்வாயன்று இத்தாலியின் எல்லைப் பகுதியிலுள்ள வளைவுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தவர்கள் 52 பேர் பயணம் செய்த குறித்த பஸ் விபத்தில் 24 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சாரதியர் இருவரும் பலியாகியுள்ளனர்.

பெல்ஜியத்தின் கிராமங்களிலிருந்து சுவிட்ஸர்லாந்து அல்ப்ஸ் மலைப்பகுதிக்கு விடுமுறையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உலங்கு வானூர்தி மூலம் சுவிஸ் நாட்டின் பெர்ன், லாஸோன் போன்ற நகர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக் குறித்து கருத்துத் தெரிவித்த பெல்ஜியப் பிரதமர்,"அனைத்து பெல்ஜியத்தவர்களுக்கும் இந்த நாள் ஒரு துன்பகரமான நாளாகும்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.










நன்றி வீரகேசரி




























No comments: