இந்திய சிதார் மேதை ரவிசங்கர் காலமானார்

.
.




சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் சாண்டியாகோ நகரில் காலமானார். அவருக்கு வயது 92.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிர்ப்ஸ் நினைவு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத்திணறல் கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில், இவர் செவ்வாய் மாலை அவர் காலமானார்.
இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர்.


கிழக்கத்திய மேற்கத்திய இசைகளுக்கு பாலமாக விளங்கியவர். இந்திய இசைக் கலையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் முக்கியமான பங்கை வகித்துள்ளார்.
தனது இறுதிக் காலம் வரை சுறுசுறுப்பான, அதே சமயம் தொய்வில்லாத இசையை வழங்கி வந்திருக்கிறார்.
1920ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசியில் பிறந்தவர் ரவி சங்கர். ரபீந்த்ரோ ஷங்கர் சௌதுரி என்ற பெயர் கொண்டவர். பின்னாளில் பண்டிட் என சிறப்புப் பட்டம் பெற்றார்.

1 comment:

Supa Ragavan said...


இந்தியாவிற்கு மேற்குலகிலும் பெருமை தேடித்தந்த ஒரு இசை மேதை மறைந்துவிட்டார் அவருக்கு எமது அஞ்சலி

சுப ராகவன்