தகவம் பரிசளிப்பு விழா நிகழ்வுகளும் புகைப்படங்களும்

.

தகவம் பரிசளிப்பு விழா சென்ற 09.12.2012 ஞாயிறு மாலை கொழு்ம்பு தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.


எமது தமிழ் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றுதலுடன் ஆரம்பித்தது. தகவத்தின் தலைவர் திரு.மாத்தளை கார்த்திகேசு மற்றும் பிரமுகர்கள் மங்கல விளக்கேற்றினர்.



திரு.ஆ.விஜயகுமார், இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், திரு.மாத்தளை கார்த்திகேசு ஆகியோரைக் காணலாம் 



மங்கல விளக்கேற்றும்போது எழில்வேந்தன், எஸ்.எல்.எம்.ஹனீபா, எம்.கே.முருகானந்தன் உட்பட சபையினர் எழுந்து நிற்பதைக் காணலாம்.


மேடையில் அமரிந்திருக்கும் தலைவர் திரு.மாத்தளை கார்த்திகேசு அவர்களைஎஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் வாழ்த்துகிறார்கள்


சுமார் 5 மணியளவில் நிகழ்வு ஆரம்பமாகியது.


மேடையில் தலைவருடன் ஏனையோர்

சங்கீத ஆசிரியையான திருமதி.நிலானி கோபிசங்கர் அவர்கள் தமிழ் வாழ்த்து பாடுகிறார்


திரு.மாத்தளை கார்த்திகேசு அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமையுரையை ஆற்றுகிறார்.


மேடையில் தகவம் தலைவர் திரு.மாத்தளை கார்த்திகேசு அவர்களுடன் ஏனைய பேச்சாளர்கள்.

மூத்த எழுத்தாளராக கௌரவம் பெறும் "மக்கத்துச் சால்வை' புகழ் எஸ்.எல்.எம்.ஹனீபாஅவர்களுக்குதிரு.ஆ.விஜயகுமார் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார்



வைத்தியகலாநிதி எம்.கே. முருகானந்தன், கெளரவம் பெறும் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரையை ஆற்றுகிறார்.


எஸ்.எல்.எம்.ஹனீபாஅவர்கள் கிழக்கு இலங்கையின் தேன் மொழியான பேச்சுத் தமிழில் தனது உரையை நகைச்சுவை ததும்ப ஆற்றினார்.




மேடையில்

எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் தன்னை மூத்த எழுத்தாளராக கெளரவித்தமைக்கான ஏற்புரையை ஆற்றுகிறார்


அமரர் சோ. சிவபாதசுந்தரம் அவர்களது நூற்றாண்டு ஆண்டு நிறைவை ஒட்டி அவர் பற்றிய நினைவுரையை திரு.தெ.மதுசூதனன் ஆற்றுகிறார்.


 மதுசூதனன் உரையைத் தொடர்ந்து ஆற்றுகிறார்.


மேடையில் தலைவர் ஏனையோர்..


திரு.முருகேசு தயாபரன் நிகழ்வுகளை நெறிப்படுத்துகிறார்.


கூட்டதில் கலந்து கொண்ட பெண்மணிகளில் சிலர்.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், மூத்த எழுத்தாளராக இரு வருடங்களுக்கு முன்னர் கெளரவிக்கப்பட்ட திரு.தெளிவத்தை ஜேஸப் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் திரு. சிறிதரசிங் ஆகியோரும் காணப்படுகின்றனர்.


திரு.ஆ.விஜயகுமார் அவர்கள்


திருமதி வசந்தி தயாபரன் சிறுகதை மதிப்பீட்டில் தேர்வானவர்களது விபரங்களை அறிவிக்கின்றார்




முதலாம் காலாண்டிற்கான முதலாம் இடத்தைப் பெற்ற திரு.  வி.ஜீவகுமாரன்    அவர்களுக்கான விருதை அவர் சார்பில் திருமதி ஞானம் ஞானசேகரன் அவர்கள் பெறுகிறார்.  ஞானம் சஞ்சிகையில் வந்த 'நாணயம்  ' என்ற சிறுகதையே முதலாம் இடம்' பெற்றது.



முதலாம் காலாண்டிற்கான இரண்டாம் இடம்-    பா.தனபாலன்    அப்பாவேணும்    ஜீவநதி

முதலாம் காலாண்டிற்கான மூன்றாம் இடம்-    மு.அநாதரட்சகன்    திருப்பம்    மல்லிகை

இரண்டாம் காலாண்டு முதலாம் இடம்-    தாட்சாயணி    அவர்களின் 'பொய்மையும் வாய்மையிடத்து' எனும்    ஜீவநதியில் வெளிவந்த சிறுகதைக்காகும். அவர் சார்பாக திருமதி பவானி சிவகுமாரன் பரிசைப் பெறுகிறர். பரிசை வழங்குகிறார் தலைவர் திரு.மாத்தளை கார்த்திகேசு




இரண்டாம் காலாண்டிற்கான இரண்டாம் இடம்-    சூசை எட்வேட்    பக்தர்கள் செய்த பாவம்    தினக்குரல்

இரண்டாம் காலாண்டிற்கான மூன்றாம் இடம்-    சுதர்ம மகாராஜன்    'அவன் என் நண்பனாக இருந்தான்' என்ற    ஞானம் சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதை


மேடையில் திரு.ஆ.விஜயகுமார், எம்.கே.முருகானந்தன், எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர்

மூன்றாம் காலாண்டிற்கான முதலாம் இடம்-    வழங்கப்படவில்லை

சிறப்புப் பாராட்டு -   எம்.எஸ்.அமானுல்லா    அவர்களின் 'ஒரு பெண்ணின் கதை'    ஜீவநதியில் வெளியானது. அவர் சார்பாக  சார்பில் எஸ்.எல்.எம்.ஹனீபா பரிசைப் பெற்றுக் கொண்டார்.


மூன்றாம் காலாண்டிற்கான இரண்டாம் இடம்-    களுவாஞ்சிக்குடி யோகன்    அவர்களின் 'மன்னிப்பீர்களா அம்மா' என்ற    தினக்குரலில் வந்த சிறுகதைக்கு பரிசு கிடைத்தது.

மூன்றாம் காலாண்டிற்கான மூன்றாம் இடம் பெற்ற   தேவமுகுந்தன்    அவர்களுக்கு கிடைத்தது. எம்.கே.முருகானந்தன் பரிசை வழங்கினார்.

'கலைமுகம்' சஞ்சிகையில் வெளியான 'இவன்' என்ற சிறுகதையே பரிசைப் பெற்றது.
 

நான்காம் காலாண்டிற்கான முதலாம் இடம்-    வி.ஜீவகுமாரன்   ' மாங்கல்யம் தந்துதானே'    ஞானம் சஞ்சிகையில் வெளியானது.




நான்காம் காலாண்டிற்கான இரண்டாம் இடம்-    எஸ்.முத்துமீரான்   அவர்கள் எழுதிய  'முதியான் கண்டுத் தயிரு'    என்ற ஞானம் ஞானம் சஞ்சிகையில் வெளியான சிறுகதைக்கு ஆகும்.


நான்காம் காலாண்டிற்கான மூன்றாம் இடம் -   யோகேஸ்வரி சிவப்பிரகாசம்    'மயான காண்டம்' என்ற    ஞானம் சஞ்சிகையில் வெளியான சிறுகதை பெற்றுக் கொண்டது.

விழாவிற்கு மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா தனது உடல் நிலையையும் கருதாது கலந்து கொண்டமை அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.


Nantri:suvaithacinema.blogspot

No comments: