வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு - 49 மனைத்தக்க மாண்பு


                       
ஞானா:        ….ம்…திருவள்ளுவர் வந்து எப்போதும் பெண்களிலைதான் அழுத்தம் போடிறது வழக்கம்.                இப்ப பாருங்கோ வாழ்க்கைத் துணைநலம் எண்ட 6 வது அதிகாரத்திலை முதலாவது                 குறளிலையே “மனைத்தக்க மாண்புடையளாகி எண்டு பெம்பிளையிலை தானே அழுத்தத்தைப்            போடிறார். அந்த அதிகாரம் முழுக்கப் பெண்ணிலைதான் preassure.

அப்பா:        (வந்து) என்ன மேனை ஞானா  ஆருக்குப் preassure? ஏன் ஆருக்கும்
blood pressure ஆமே.            அப்பிடி எண்டால் டாக்குத்தரிட்டைப் போக வேண்டியது தானே.

ஞானா:        Blood Pressuer இல்லை அப்பா. இது திருக்குறள் pressure.

அப்பா:        எனக்கு விளங்கேல்லையே ஞானா.

ஞானா:        திருக்குறள் வந்தப்பா பெண்களிலை கன அழுத்தங்களைப் போடுது எண்டு தான் சொல்ல                வாறன்.

அப்பா:        நீ மகளே பழையபடி திருக்குறளிலை பிறெஷர் போட வாறியே. எந்தக் குறள் உன்னிலை                அழுத்தத்தைப் போடுது?



ஞானா:        வாழ்க்கைத் துணைநலம் எண்ட அதிகாரத்திலை அப்பா…..
                மனைத்தக்க மாண்புடை யளாகித் தற்கொண்டான்                                                வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
        எண்ட குறள் இருக்குத்தானே. அதிலை மனைத்தக்க எண்ட சொல்லு ஆற்றை மனையைக்            குறிக்குது? பெண்ணின்ரை வீட்டையோ அல்லாட்டில் ஆணின்ரை வீட்டையோ? இல்லை எண்டால்            ஆணும் பெண்ணும் இல்லறம் ஆரப்பிச்சுத் தொடங்கிற வீட்டையோ?

அப்பா:        எனக்கு வந்து ஞானா உந்த வீட்டு விஷயங்யகள் அதிகம் தெரியாது உன்ரை அம்மாவுக்குத்            தான் நிறையத் தெரியும். அம்மாவைக் கூப்பிடு கேட்பம்……அம்மா….அம்மா……

சுந்தரி:        (வந்து) என்னப்பா….உங்கடை சண்டைக்கை என்னை ஏன் இழுக்கிறியள். என்ன குழப்பம்?

அப்பா:        சுந்தரி! சண்டையும் இல்லை,  குழப்பமும் இல்லை. இது குறும்பு, ஒரு பெம்பிளை கலியாணம்            முடிச்சால் மூண்டு வீடுகளுக்குத் தொடர்பு டையவளாகலாம் தானே. அதாவது,  பிறந்த வீடு,          புகுந்த வீடு,  மற்றது அவள் தனிக்குடித்தனம் போனால் அந்த வீடு.   இந்த வீடுகளிலை பெண்            எந்த வீட்டுக்குத் தக்க மாண்புடையவளாக இருக்க வேணும் எண்டு இவள் பிள்ளை ஞானா            கேக்கிறாள்.

சுந்தரி:        மனைத்தக்க மாண்புடைய ளாகி எண்ட குறளிலை நிக்கிறியள் எண்டு சொல்லுங்கோ.

ஞானா:        ஓம் அம்மா, எனக்கெண்டடால் எந்த வீட்டுக்குப் பெண் மாண்புடைவளாக இருக்க வேணும்                எண்டது விளங்கேல்லை அம்மா.

சுந்தரி:        என்னைக் கேட்டால் ஞானா எல்லா வீட்டுக்கும் மாண்புடையவளாகப் பெண் இருக்க வேணும்.            எண்டுதான் செல்லுவன்.

ஞானா:        அப்ப அம்மா மாப்பிளை மாண்புடையவராய் இருக்கத் தேவை இல்லையே.

சுந்தரி:        அதெனக்குத் தெரியாது. இஞ்சை நிக்கிறார் மாப்பிளை அவரைக் கேள்.

அப்பா:        இந்த மா….பிழைக்காது….சொல்லிறன் கேளுங்கோ. இந்த வாழ்ககைத் துணைநலம் எண்ட ஆதிகாரத்திலை ஒரு ஆணுக்கு வாழ்க்கைத் துணையாயகப் போற பெண்ணுடைய நலன்கள்            என்ன என்ன, எண்டதைபற்றி மட்டுந்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆணுக்கு மாண்பு            இருக்கக் கூடாதோ? ஆணுக்குக் கற்பு இருக்கக் கூடாதோ? எண்ட கேள்வியளுக்கு இதிலை            இடமில்லை. ஆணுக்கு உரிய கட்டுபாடுகளும் மாண்புகளும் வள்ளுவர் ஆங்காக்கே சொல்லி            யிருக்கிறார். இவள் பிள்ளை ஞானா கேக்கிற பெண்ணின் மனைத்தக்க மாண்பு எந்த வீட்டைக்            குறிக்கும் எண்டதுக்குத்தான் பதில் சொல்ல வேனும்.

சுந்தரி:        நான் செல்லிறன் பெண்ணோடை தொடர்புடைய மூண்டு வீட்டையும் குறிக்கும் எண்டதுதான் சரி.

அப்பா:        சுந்தரி! நீர் சொல்லிறது சரி. ஆனால் இந்த மாண்பு எண்டதை இவள் பிள்ளைக்குக் கொஞ்சம்            விளங்கப்படுத்திச் சொல்லுமன் பாப்பம.

சுந்தரி:        அதாவது வந்து ஞானா….எல்லா வீட்டு நிலமையளும் ஒரோ மாதிரி இருக்காது. பிறந்த வீட்டிலை            நல்ல செல்வமும் அறிவும் இருக்கலாம்,  புகுந்த வீட்டிலை அவ்வளவு செல்வமும் படிப்பும் இல்லா            மல் இருக்கலால்,  புதிசாய் தனிக் குடித்தனம் போனால் இநத் இரண்டு வீடுகளிலையும் இருக்கிற             வசதிகள் ஒண்டுமே இல்லாமல் இருக்கலாம்;. இப்பபிடியான ஒரு சூழ்நிலை பெண்ணுக்கு வந்தால்            அவள் எந்த வீட்டிலை குடித்தனம் நடத்தினாலும் அந்நதந்த வீட்டு நிலைமைகளை அனுசரிச்சு            சுமுகமான வாழ்க்கை வாழப் பழகிக் கொள்ளிறதுதான் மனைத்தக்க மாண்பு எண்டு வள்ளுவர்             கருதியிருக்கிறார் எண்டு நான் நினைக்கிறன்.

அப்பா:        சரியாய்ச் சொன்னீர் சுந்தரி;;. இப்ப ஒரு உதாரணத்துக்குச் சொன்னால் நான் உமமைக்                 கலியாணம் கட்டி உங்க வீட்டை வரயிக்கை உங்கடை குடும்பம் நல்ல வசதியாய் வாழ்ந்தது.            என்னுடைய குடும்பம் அவ்வளவு வசதி உள்ளதாய் இருக்கேல்லை. ஆனால் நீர் ஏற்றத் தாழ்வு            பாராமல் எல்லாத்தையும் சமாளிச்சு எல்லாரோடும் அன்பாய்ப் பழகிக் குடும்பம் நடத்தினீர். அப்ப            எனக்குச் சம்பளமும் குறைவு. அங்கை கூட்டிக்கொண்டு போ….இஞ்சை கூட்டிக்கொண்டு போ…            பட்டுச் சீலை வாங்கித்தா எண்டு கரைச்சல் குடுக்கேல்லை. ஆனால் எங்கடை இல்லறம்                 நல்லறமாயத்தான் நடந்தது. அதுதான் மனைகத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்                வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. எண்டு வள்ளுவர் சொன்னது.

ஞானா:        கேக்க நல்லாய்த்தான் இருக்குது என் அருமைப் பெற்றோரே. ஆனால் உதெல்லாத்தையும்                என்னட்டை எதிர் பாக்கிறியள். முடியுமோ எண்டதுதான் சந்தேகம்.

சுந்தரி:        ஞானா… எல்லாம் முடியும். இளம் பிள்ளையள் உப்பிடித்தான் சந்தேகப் படுகிறது வழக்கம்.            நானும் கலியாணம் முடிக்க முந்தி உப்பிடித்தான் சந்தேகப் பட்டனான். ஆனால் இப்ப குடித்தனம்            நடத்தி, உன்னையும் பெத்து,  வளத்துச் சந்தோசமாய்த்தானே இருக்கிறம். நீ பயப்பிடிடாதை.

அப்பா:        அம்மாவின்ரை மனைத்தக்க மாண்பைப் பாத்தியே பிள்ளை ஞானா.
                                    (இசை)

No comments: