அழிக்கப்பட முடியா தேசம் - -தமயந்தி -

.

சிறுவயதுக் கரையோரம்
கட்டிய மணல் வீட்டை அலை
வந்து வந்து அழித்துப் போனது.
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு
பின், 
என்சிறு கிராமக்கோடியில்
வியர்வையாலுங் குருதியாலும்
கட்டிய என்சிறு குடிலை
சிதைக்க முடிந்தது உங்களால்
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு

இப்போ
நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும்
கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை
எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும்
அழித்துவிட முடியாது என்பதை
அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால்.
ஏனெனெல்,
ஓர் அகதியின் கனவுகளாலனவை
எனது தேசம்.

Nantri:piraththiyaal.com

3 comments:

Ramesh said...

அகதியாய் தமிழன் இன்று அலைகிறான் உலகமெல்லாம்
இந்நிலை மாறும் நாளை என்று நாம் அமைதி கொள்வோம்

கவி ரமேஸ் கி..கி...கி....

அருமையான கவிதை தமயந்தி இன்னம் இன்னும் எழுதுங்கள்.
நாங்கள் படிப்பம் ஆனால் பராட்டுமட்டும் எழுத மாட்டம். யு நோ எங்களுக்கு தமிழ் அடிக்க தெரியாது.

umai said...

கிறுக்கன் நீங்கள் எப்போது கவி(ஞனாக) மாறினீங்கள்.

மிக நல்ல கவிதை தேர்ந்து தந்ததற்கு நன்றிகள் பற்பல

உமை

Ramesh said...

யாராரோ என்னென்னெல்லாமோ சம்பந்தமில்லாமல் செய்கின்ற போது கிறுக்கன் இரண்டுவரி கிறுக்கினால் மட்டும் என்ன குடீ முழுகி கோய்விடும்
கிறுக்கல் அவருக்கு மட்டும் சொந்தமல்ல முடிந்தால் நீங்களும் கிறுக்கிப்பாருங்கள்.
தப்பா நினைக்காதீங்கள் ராத்திரித்தான் சிவாஜியின்ர நாடகம் பாத்தனான் சோக்கிரட்டீஸ்

ரமேஸ்