ஒலியை விட வேகமாக விண்வெளியிலிருந்து குதித்து பீலிக்ஸ் சாதனை

.

ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஆகாச சாகசக்காரரான  பீலிக்ஸ் போம்கார்ட்னர் பூமியிலிருந்து 24 மைல்கள் (128,100 அடி)  மேலே இருந்து குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஈலியம் நிரப்பப்பட்ட பலூன் மூலம் பூமியிலிருந்து சுமார் 24 மைல்கள் தொலைவுக்கு சென்ற பீலிக்ஸ் அதனுடன் பொருத்தப்பட்ட கெப்சூலில் இருந்து கீழே குதித்தார்.

பீலிக்ஸ் கெப்சூலிருந்து குதித்து பின்னர் பரசூட்டின் உதவியுடன் பூமியில் பத்திரமாகத் தரையிறங்கினார்.
இவர் தரையிறங்கிய பிரதேசம் அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ மாநிலமாகும்.
விண்வெளியிலிருந்து அவர் ஒலியினை விட அதிகமான வேகத்தில் கீழே குதித்ததுடன் ஒரு கட்டத்தில் வேகம் மணித்தியாலத்துக்கு 833 மீற்றரை எட்டியது.
குறித்த வேகமானது சுப்பர்சொனிக் ஜெட் மற்றும் விண்வெளி ஓடங்களால் மட்டுமே எட்டப்படக் கூடியன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காகப் பல நாட்களாக பயிற்சியை மேற்கொண்டிருந்த பீலிக்ஸ் ஒருவாறு இச்சாதனையைப் புரிந்துள்ளார்.
மிகவும் அபாயகரமான இம்முயற்சியில் சிறிய கோளாறு ஏற்பட்டிருப்பினும் இரத்தம் கொதிப்படைந்திருப்பதுடன் அவரது மூளையும் வெடித்திருக்கும்.
இம் முயற்சியை அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மேற்கொள்ளத் திட்டமிருந்த போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக அம்முயற்சி இருதடவைகள் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவர் தனது முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அவரின் இச்சாதனையைப் பலர் இணையத்தில் நேரடியாகக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் தரையிறங்கியவுடன் அவருக்குப் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.
 
நன்றி வீரகேசரி 

No comments: