1988ம் ஆண்டுமுதல் கடந்த 24 வருடங்களிற்கும்
மேலாக மெல்பேர்ன் வானலைகளில் வாராவாரம் வியாழன் மாலை 8மணி முதல் 9மணி வரை
92.3 FM அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் உங்கள் அபிமான மெல்பேர்ன். 3ZZZ தமிழோசை
நிகழ்ச்சியின், வருடாந்த RADIOTHON நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகள்,
எதிர்வரும் ஒக்டோபர் 18ம் திகதியும், எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதியும்
நடைபெறவுள்ளது. வரும் வியாழக்கிழமையில் 3ZZZ வானொலி நிலையத்தை 9415 1923
என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது தமிழோசையின் அறிவிப்பாளர்களை
தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவிகளை வழங்கி தொடர்ந்தும் மெல்பேர்ன் வாழ்
தமிழ் மக்களிற்கு அதன் தனித்துவமான சேவைகளை வழங்கிட உங்கள் ஆதரவை வேண்டி
நிற்கின்றனர். நீங்கள் வழங்குகின்ற நிதிப்பங்களிப்பு வரிவிலக்குதலுக்குரியது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
மறந்து விடாதீர்கள்! ஒக்டோபர் 18ம் திகதியும் ஒக்டோபர் 25ம் திகதியும் நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 9415 1923!
நன்றி
மறந்து விடாதீர்கள்! ஒக்டோபர் 18ம் திகதியும் ஒக்டோபர் 25ம் திகதியும் நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 9415 1923!
நன்றி
பங்களிப்புக்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி :- Radio 3ZZZ., P.O.Box 1106, Collingwood, Victoria - 3066
தற்போதுள்ள தமிழ் ஊடகங்களின் நிலவரம்
இன்றைய இந்த இக்கட்டான நிலையிலும் தாய் மண்ணின் நினைவு சுமந்து, தாய் மொழி மறவாது, தமிழன் என்ற கலாச்சாரம் அழியாது, பண்பாடு மறவாது வாழ்வோர் நம்மில் பலர் இருக்கிறோம். அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் எம் இனத்தின் அடையாளம் அழிந்துவிடாமல்,எம் தாய்மொழி தமிழின் அழகு அழியாமல் பண்பாடு செத்துப்போகாமல் காப்பதற்கு தமிழ் ஊடகங்களின் பங்கு மிக மிக அவசியம். அது வானொலியாகவோ, பத்திரிகையாகவோ, இணையமாக இல்லை, தொலைக்காட்சியாகவோ இருக்கலாம்.
ஆனால் இங்குள்ள எல்லா ஊடகத்தவரின் பணி பல தடைகளையும் பல சவால்களையும், கஷ்டங்களையும் சந்தித்து, அவற்றை துணிவோடு எதிர்கொண்டு, இந்த ஊடகங்கள் செய்யும் பணிக்கு
உங்கள் பாராட்டுதல்கள், வாழ்த்துக்களிற்கு மேலாக அதன் தனித்துவமான
உயிரோட்டத்திற்கு, உங்கள் எல்லோரினதும் மற்றும் குறிப்பாக எமது
சமுதாயப்பணிக்காக எமது ஊடகங்களை இலவசமாகப் பயன்படுத்தும் தமிழ்
அமைப்புக்களின் நிதி ஆதரவும் தேவை. அவ்வகையில் நாம் ஏற்கனவே "ஈழத்தமிழர்களின் ஊடகங்களையும்", கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபாட்டோடு, நம்மில் பலர் அதை செய்துகொண்டும் இருக்கிறோம். வெறுமனே வானொலியை கேட்கின்ற நேயராக மட்டும் இல்லாது வானொலியின் முன்னேற்றத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆத்மார்த்தமாக பங்களிப்பு செய்ய அனைவரும் முன்வரவேண்டும். இதை நாங்கள் சொல்லியோ இல்லை, மற்றவர் சொல்லியோ செய்யாமல், நாங்களாக உணர்ந்து செய்வது சாலச்சிறந்தது.
இந்த வானொலிகளிலும், ஊடகங்களிலும் தொண்டராக பணிபுரியும் எல்லா அறிவிப்பாளர்களின் தன்நலமற்ற சேவையும் பாராட்டுதற்குரியது. அவர்களின் அந்த பணியும், சேவையும் மனச்சஞ்சலம் இன்றி தொடர உங்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். வருடாவருடம் எங்கள் ஊடகங்களின் வளர்ச்சிக்கான நிதியுதவியை மனமார உணர்ந்து செய்யுங்கள். அதை இன்றே செய்யுங்கள். புலம் பெயர் தேசத்தில் எதிர்கால சந்ததிக்கு, தமிழின் அடையாளங்களையும், சொத்துக்களையும் பாதுகாத்துக்கொடுப்பதற்காகச் செய்யுங்கள்.
நன்றி
No comments:
Post a Comment