எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய
இலங்கை எல்லைக் கிராமமான தனுஷ்கோடி மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக
கையாளுகிறது இத்திரைப்படம்.மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன்
அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது.
பல மாத கால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும்
இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A ' சான்றிதழை யூலை 20ம் திகதி
பெற்றது.பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின்
வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் பெற்ற வெற்றி.
அதன் பின்னர், 32வது டர்பன் (தென் ஆஃபிரிக்கா) சர்வதேச
திரைப்பட விழாவிலும், 35ஆவது மாண்ட்ரியல் (கனடா) உலகத் திரைப்பட விழாவிலும்,
13 வது சர்வதேச மும்பை திரைப்பட விழாவிலும் சர்வதேசப் போட்டிப் பிரிவில் தெரிவு
பெற்று பங்கேற்றது.
டோக்கியோவில், சிறந்த ஆசியப் பெண் திரைப்படமாக
NAWFF 2011 விருது பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தென் கொரியா, தாய்வான், இஸ்ரேல்,
பீஜிங் திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது.2011 ம் ஆண்டிற்கான இந்தியன் பனோரமாவிற்கு,
செங்கடல் திரைப்படம் ஒரே தகுதி பெற்ற தமிழ்ப்படமாகத் தெரிவானது.
கோவா, கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பெரும்
வரவேற்பை பெற்றது. பிரஞ்சு, மாண்டரின், கொரிய, ஜப்பானிய மொழிகளிலும் மொழியாக்கம்
செய்யப்பட்ட ஒரே தமிழ் சினிமா செங்கடல்.
jfty; jkpo;tpd; ,izak;
|
No comments:
Post a Comment