வழிகாட்டி -சோனா பிரின்ஸ் .

.

வாழ்வது எப்படி என்று
வார்த்தையில் சொன்னார் பலர்
வையத்தில் நிலைத்தவர் அதை
வாழ்ந்து காட்டிச் சென்றார்

நானே வழியென்று இயேசு
நானிலத்தில் வாழ்ந்து காட்டினார்
நல்லதைக் காணுவாய் கீதையில்
நாளெல்லாம் படியென்றார் கண்ணன்

கூப்பும் கரங்களால் தொழுது
குர்ரான் சொல்லும் வழிகளில்
கொண்ட நாட்களில் வாழ
கொடுத்தார் முகம்மது நற்சிந்தனை

தேவைக்கு மனிதரைத் தேடாது
தேடுவோருக்கு உதவி செய்து
தேடாமலே வரும் இறைவனுடன்
தேர்ந்தெடு சொர்க்கத்தை என்றனர்உதவி மட்டும் வழிகாட்டியன்று
உண்மை அன்பு உள்ளத்தால்
உறவை வளர்த்துக் கொண்டால்
உயர்ந்த மனிதர் ஆகலாம்

அனைத்தும் பெறவல்ல வழிகாட்டி
அனைத்தும் வாழ்வில் என்றும்
அமைதியை மனிதர்க்கு தருவதில்லை
அமைதிக்கே வேண்டும் வழிகாட்டி

தேடினேன் உலகில் வழிகாட்டியை
தேடாமலே கடவுள் தந்தார்
தேனமுதான குழந்தை உள்ளத்தில்
தெரிந்தேன் வழிகாட்டியை அதனிடம்

கள்ளமற்ற உள்ளம் ஓங்க
கபடமற்ற சிரிப்பும் பொங்க
காலமெலாம் அன்புமனம் ஏங்க
கண்ணீருடன் தேடும் - குழந்தைNo comments: