உலகச் செய்திகள்

சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்பு

சிரிய வான்பரப்பில் துருக்கிய பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பு

திரிபோலி சிறையிலிருந்து 120 கைதிகள் தப்பினர்!

நடிகை ஸ்ரேயாவுடன் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி: என்ன உறவு?

சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்பு


 
 சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிடையேயான சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள் முன்னேறி வருவதையடுத்து, ஜப்பானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே சென்காகு தீவுகள் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அத்தீவு தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றன.


இந்நிலையில், சென்காகு தீவுகளை விலைக்கு வாங்கி விட்டதாக ஜப்பான் திடீரென அறிவித்தது. ஜப்பானின் இந்த அறிவிப்புக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதைத்தொடர்ந்து இரு நாட்டு போர்க்கப்பல்களும் சென்காகு தீவுகள் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் 7 போர்க்கப்பல்கள் சென்காகு தீவுகளை நோக்கி முன்னேறி வருவதால் ஜப்பானில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் அனைத்தும் பசுபிக் கடலில் போர்ப்பயிற்சியை முடித்துக்கொண்டு சீனா திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

எனினும் தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் இந்த முடிவு, ஜப்பானை கவலை கொள்ளச் செய்துள்ளது. இதையடுத்து சென்காகு தீவு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒகினவா மாகாணத்திலிருந்து 49 கி.மீ., தொலைவில் தற்போது இந்த கப்பல்கள் உள்ளன. போர்க்கப்பல்கள், ஏவுகணை அழிக்கும் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மீட்கும் கப்பல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

தற்போது சீன கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் பாதை பசிபிக் கடலில் இருந்து சீனாவுக்கு செல்லும் வழக்கமான பாதை என்ற போதிலும் தற்போதைய சூழலில் ஒருவித பதற்றத்தையே சீன கப்பல்கள் ஏற்படுத்தியுள்ளன. நன்றி வீரகேசரி சிரிய வான்பரப்பில் துருக்கிய பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பு
By General
2012-10-15
சிரியாவின் வான் பரப்பில் துருக்கிய பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் சிரியாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவிலிருந்து சிரியாவுக்கு பயணித்த சிரிய பயணிகள் விமானமொன்று துருக்கியில் பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விவகாரத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே மேற்படி நடவடிக்கையை சிரியா முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வருடாந்த ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் முகமாக பல்லாயிரக்கணக்கான துருக்கிய யாத்திரிகர்கள் துருக்கிய வான் பரப்பினூடாக சவூதி அரேபியாவுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கு சில வாரங்கள் உள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிரிய அரசாங்க ஜெட் விமானமொன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை உரிமை கோரியுள்ளனர்.
அலெப்போ நகரில் மேற்படி விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை வெளிப்படுத்தும் ‘வீடியோ’ காட்சி ‘யூரியூப்’ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவெங்கும் வியாழக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 71 பொதுமக்கள், 63 படைவீரர்கள், 47 கிளர்ச்சியாளர்கள் உட்பட 181 பேர் பலியாகியுள்ளனர்.     நன்றி வீரகேசரி 


 திரிபோலி சிறையிலிருந்து 120 கைதிகள் தப்பினர்!
By Kavinthan Shanmugarajah
2012-10-16

லிபியாவின் திரிபோலி நகரின் அல் ஜடையிதா சிறைச்சாலையிலிருந்து 120 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து சிரிய பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களைத் தேடும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த சிறைச்சாலைகள் தற்போது படிப்படியாக அந்நாட்டு அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.
அல் ஜடையிதா சிறைச்சாலையும் தற்போது அதிகாரிகளின் வசமே உள்ளதுடன் அண்மையிலேயே இதன் அதிகாரம் மாற்றப்பட்டது.
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அடிக்கடி  குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.
இதேவேளை லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு   ஒரு வருடம்   பூர்த்தியாகவுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரிநடிகை ஸ்ரேயாவுடன் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி: என்ன உறவு?
By General
2012-10-16
சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடந்த பட விழாவுக்கு நடிகை ஸ்ரேயாவுடன் வந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் என்றப் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொம்னியின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

இங்கிலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' நாவல் திரைப்படமாகிறது.


இந்தப் படம் லண்டனில் தொடங்கியுள்ள 56வது பி.எப்.ஐ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

இந்தப் பட விழாவுக்கு தன்னுடன் படத்தின் நாயகியான ஸ்ரேயாவையும் உடன் அழைத்து வந்திருந்தார் ருஷ்டி.

இதனால் பட விழாவுக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் ஸ்ரேயா மீதுதான் இந்த ஜோடி மீதே விழுந்தன.

சல்மான் ஏற்கனவே நான்கு தடவை திருமணம் ஆனவர்.

மேலும் பல பெண்களுடன் காதல் தொடர்பு வைத்திருந்தவர்.

தற்போது அவர் ஸ்ரேயாவுடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளமையானது அனைவரது புருவத்தினையும் உயர்த்தச் செய்துள்ளது.

இவர்களுக்கிடையில் என்ன உறவு என அனைவரும் தற்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

 நன்றி வீரகேசரி

No comments: