உலகச் செய்திகள்

உலக அழகியாக சீனப் பெண் தெரிவு

விமான விபத்தில் 31 பேர் பலி: அதிர்ச்சியில் உறைந்தது சூடான்

அமெரிக்காவில் நகரசபைத் தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி

லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் நிர்வாண புகைப்படங்கள்

சிரியாவில் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலி

உலக அழகியாக சீனப் பெண் தெரிவு



இந்த ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சீனாவின், பீஜிங் நகரில், உலக அழகிப் போட்டி நடந்தது. 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  இதில் பங்கேற்றனர்.இந்தியாவின் சார்பில் வன்யாமிஸ்ரா  கலந்து கொண்டார். ஆனால், இறுதி சுற்று வரை வந்த அவர் தேர்வாகவில்லை.


சீனாவின் வென் சியா யூ, உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடம் பிரிட்டனைச் சேர்ந்த வேல்ஸ் அழகி ஷோபிக்கும், மூன்றாம் இடம் அவுஸ்திரேலிய அழகி ஜெசிகாவுக்கும் கிடைத்தது. உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட வென் சியா, இசை ஆசிரியையாக விரும்புவதாக தெரிவித்தார்.


நன்றி வீரகேசரி




விமான விபத்தில் 31 பேர் பலி: அதிர்ச்சியில் உறைந்தது சூடான்
 20/08/2012
சூடான் நாட்டில் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு அமைச்சர் உட்பட 31 பேர் பலியாயினர்.

சூடான் நாட்டின் கர்தூம் நகர விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், கார்டோபேன், என்ற நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

தலோடி நகரத்தருகே, நூபா என்ற மலை மீது மோதி, இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், சூடான் அமைச்சர் கலீல் அப்துல்லா உள்ளிட்ட அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி வீரகேசரி


அமெரிக்காவில் நகரசபைத் தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி

இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்றார். இவர் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் வெற்றி ஈட்டி இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆ கும்.

www.ilankainet.com நன்றி யாழ்



 
லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் நிர்வாண புகைப்படங்கள்
By Nirshan Ramanujam
2012-08-23
Hari
இளவரசர் ஹரி இளம் பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் படங்களை இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளமை லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு இவ்விடயம் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் பல கருத்து வெளியிட்டுள்ளன.

தனது விடுமுறையை கழிப்பதற்காக ஹரி தனது நண்பர்களுடன் அமெரிக்காவின் லஸ் வேகாஸ் நகரிலுள்ள விடுதியொன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நிர்வாணமாகக் கழித்த பொழுதுகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.

ஹரியின் நிர்வாண புகைப்படங்கள் தொடர்பான செய்தி லண்டன் முழுவதும் தீவிரமாகப் பரவியது. இதனால் இங்கிலாந்து அரச குடும்பம் அதிர்ச்சிக்குள்ளானது.

இதனையடுத்து இணையத்தளங்களில் வெளியாகிய புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு ஊடகங்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நன்றி வீரகேசரி



  சிரியாவில் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலி

 18/08/2012
சிரியாவெங்கும் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலியானதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது சிரியாவிலான தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

சிரியாவிலான ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு பதிலாக சிரியாவில் அரசியல் தொடர்புகளைப் பேணும் முகமாக சிறிய சிவில் அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்படவுள் ளது.

ஐக்கிய நாடுகள் தூதுவர் கொபி அனானின் 6 அம்ச சமாதான திட்டத்தின் ஓர் அங்கமாகவே சிரியாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிரியாவில் வன்முறைகள் தொடர்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்களது பணி சிரமத்தை ௭திர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் கண்காணிப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஹோட்டலொன்றுக்கு அருகில் கடந்த புதன்கிழமை குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிரியாவின்  கண்காணிப்பாளர்களது ரோந்து நடவடிக்கைகள் அவர்களது உயிருக்கு பாதுகாப்பான சூழ்நிலை அந்நாட்டில் நிலவாததால் கடந்த ஜூன் மாத மத்தியில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
Syria
இந்நிலையில் சிரியாவிலான ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான பிரான்ஸ் தூதுவரும் அச்சபையின் தற்போதைய தலைவருமான ஜெராட் அரோட் தெரிவித்தார்.

சிரியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழுவை முன் கூட்டியே வாபஸ் பெறுவது அப்பிராந்தியத்தில் பாரிய ௭திர்மறை விளைவை ஏற்படுத்தும் ௭ன ரஷ்யா ௭ச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியாவிலான மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற வேண்டுமென ரஷ்யா விரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கின் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சிரியா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை ரஷ்யா தனது மறுப்பாணை அதிகாரத்தை பயன்படுத்தி மூன்று தடவைகள் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 101 இராணுவ கண்காணிப்பாளர்களும் ௭திர்வரும் 7 நாட்களில் சிரியாவிலிருந்து வெளியேறவுள்ளனர்.

அதேசமயம் அரசியல் தொடர்பு களைப் பேணுவதற்கான சிவில் அலுவலகத்தில் 20 முதல் 30 வரையான ஐக்கிய நாடுகள் பணியாளர்கள் சேவையாற்றுவார்கள் ௭ன ௭திர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள பிரதான இராணுவ விமான நிலையத்துக்கு அருகில் சிரிய இராணுவத்தினரும் கிளர்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை உக்கிர மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் அலெப்போ நகரில் கடும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் நாள் வியாழக்கிழமை சிரியாவெங்கும் இடம்பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே இந்த மோதல்களும் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் டமஸ்கஸின் வட மேற்கேயுள்ள கடானா நகரில் அடையாளம் காணப்படாத 65 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.
 நன்றி வீரகேசரி

No comments: