மரணஅறிவித்தல்.

                இளைப்பாறிய ஆசிரியை 
திருமதி.தவமணி தியாகராஜா (ராசாத்தி)


                                       தோற்றம் :- 27.12.1933       மறைவு :- 25.08.2012

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொணடிருந்த இளைப்பாறிய ஆசிரியை திருமதி.தவமணி தியாகராஜா(ராசாத்தி) அவர்கள் கடந்த 25.08.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னார் காலஞ்சென்ற மலாயன் பென்சனியர் திரு,சு.நா.வேலுப்பிள்ளை, காலஞ் சென்ற திருமதி.தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்களின் மூத்த மகளும், காலஞ் சென்ற திரு.வீரகத்தி தம்பையா, திருமதி.சுபத்திரை தம்பிஐயா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற திரு.தம்பிஜயா தியாகராஜா இளைப்பாறிய ஆசிரியர் பொகவந்தலாவை அவர்களின் அருமை மனைவியும், சாம்பசிவம் Melbourne அவர்களின் பாசமிகு தாயாரும், திருமதி.nஐயரூபி சாம்பசிவம் Melbourneஅவர்களின் அன்பு மாமியாரும், சாஜித்தன் சாம்பசிவம் Melbourneஅவர்களின் பாசமிகு பாட்டியும், திருமதி.சுசீலா வைத்தியநாதன் (யாழ்ப்பாணம்), காலஞ் சென்ற திரு.அருளானந்தசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்ற திரு.வைத்தியநாதன், காலஞ் சென்ற திருமதி.சங்கவதி அம்மா சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர் வரும் திங்கட்கிழமை காலை 10மணிக்கு நடைபெற்று, பகல் 12 மணிக்கு கோம்பயன் மணல் மயானத்தில்  தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவைரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்- மகன் சாம்பசிவம் 03 - 9404 3525 அல்லது 0423 570 169

No comments: