வானொலி மாமா மகேசனின் குறளில் குறும்பு 43- அடக்கிப் பார்



அப்பா:        சுந்தரி, காதல், காமம், எண்ட பேச்சை எடுத்தவுடனை எங்கடை வயதுவந்த பெம்பிளைப் பிள்ளையள் வெக்கித் தலை குனிஞ்சுகொண்டு ஏன் ஓடுதுகள்?

சுந்தரி:        அது வந்தப்பா, பெம்பிளையளுக்கு உள்ள ஒரு இயல்பு. அது எங்கடை தமிழ்ப்    பிள்ளையளிலை அதிகமாய் இருக்கு.

அப்பா:        ஏன் நீர் பாக்கேல்லையே. எகங்கடை இவள் பிள்ளை ஞானாவை. அண்டைக்கு கலியாணம், கச்சேரி எண்டு பேச்செடுத்தவுடனை, “பேங்கோப்பா, உங்களுக்கு என்னோடை பகிடிதான்” எண்டு சொல்லிக் கொண்டு ஓடிடனதை.

சுந்தரி:        இளம் பெம்பிளைப் பிள்ளையள் அப்பிடித்தான் அப்பா. நீங்களும் காமத்துப்பாலிலை உதாரணம் காட்டினால் வெக்கப் படுங்கள்தானே.

அப்பா: 
       என்ன வெக்கம் எண்டு கேக்கிறன் சுந்தரி. இந்தக் காலத்திலை ளநஒ நனரஉயவழை எண்டு சொல்லிப் பள்ளிக் கூடங்களிலை படிப்பிக்கினம். திருவள்ளுவர் காமத்துப் பாலை எவ்வளவு அழகாய் நாகாPகமாய் எழுதியிருக்கிறார்.

ஞானா:        அப்பா, அதெல்லாம் தலைவன், தலைவி, எண்டு திருமணமான ஆக்களக்கு உள்ள
        விஷயங்கள். என்னைப் போலை உள்ள ஆக்களுக்கு இல்லை.

அப்பா:        ஞானா, உங்கைதான் நீ பிழை விடுகிறாய். காதல், காமம் எண்டது ஒரு தனிப்பட்ட
        ஆளோடை உள்ள விஷயம் அல்ல. இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்.
        எதிர்ப்பாலிலை உள்ள ஆக்களுடைய சங்கதியளையும் அறிஞ்சிருக்க வேணும்.
        அப்பதான் திருமணமான பிறகு ஏற்படுகிற சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற மாதிரிச்
        சமாளிச்சு வாழலாம்.

சுந்தரி:        அப்பா சொல்லிறது உண்மைதான் ஞர்னா. அந்தக் காலத்திலை நாங்கள் சில
        விஷயங்களை முன்கூட்டியே தெரியாமல் விழுந்தெழும்பி அனுபவப்பட்டம்.
        இந்தக் காலத்திலை விஷயங்களை அறிஞ்சு, தெரிஞ்சு, இடையூறுகளை விலக்கி
        நடக்கிறதுதான் புத்தி.

அப்பா:        இப்ப பாரும் சுந்தரி, இவள் பிள்ளை அண்டைக்குத் திருக்குறளிலை தும்மல்
        இருக்கோ எண்டு கேட்டாள். விளையாட்டுக்குத்தான் கேட்டவள். ஆனால் தும்மலைப்
        பற்றிக் காமத்துப் பாலிலைதான் நிறைய இருக்கு. அப்ப நான் காமத்துப் பால்
        எண்டிட்டுப் பேசாமல் இருக்கிறதே?

ஞானா:        அப்பா, காமத்துப்பாலிலை வாற விஷயங்களைக் கேட்க, எனக்கு ஒரு வெக்கமும்
        இல்லை நீங்கள் தாராளமாய்ச் செல்லுங்கோ.

அப்பா:        ஞானா, திருக்குளிலை 126 அதிகாரம் நிறையழிதல். இந்த நிறையழிதல் எண்டது
        காமத்தை அடக்கும் குணம் இல்லாமல் போறது எண்டு கருந்து. நிறை எண்டால்
        பொண்களக்கு இயல்பாய் உள்ள காமத்தை அடக்குகிற குணம். இந்தக் குணம்
        சந்தர்ப்ப சு10ழ்நிலை, வயது இதுகள் வந்தால் தடுக்க முடியாமல் போகுமாம்.

சுந்தரி:        அதெப்பிடி அப்பா?

அப்பா:        தும்மல் வாறதை எப்பிடி எங்களாலை அடக்க முடியாமல் போகுதோ அது போலை
        காமத்தையும் அடக்க முடியாமல் போகுமாம். திருவள்ளுவரே குறளிலை
        சொல்லியிருக்கிறார்.    1253 ஆவது குறள்:

                “மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிபின்றித்
                 தும்மல்போற் தோன்றி விடும்”.

        அதாவது ஒரு பெண் சொல்கிறாள் “நானோ என் காம ஆசையை அடக்கிவைக்
        கத்தான் முயல்கிறேன். ஆனால் அது அடக்கிவைத்தாலும் தும்மல் வருவதுபோல்
        திடீர் என்று வந்து விடுகிறது.”  என்று. என்ன அழகாக, நாகாPகமாக வள்ளுவர்
        சொல்கிறார்.

சுந்தரி:        தும்மல் வருவதும் தெரியாது, வந்துவிட்டால் அடக்கவும் முடியாது. இது
        இயற்கையாக மனிதர்களுக்கு உள்ள இயல்பு. அதைப் போலத்தான் காதல்,
        காமம் என்டதும் எல்லா மனிதர்களக்கும் உள்ள இயல்பு. அதை அடக்கிறது
        கடினம் எண்டு வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்ன அப்பா?

அப்பா:        வேறை என்ன சுந்தரி.

ஞானா:        அது சரி அப்பா, தும்மலைப்பற்றி வேறை எந்தெந்தக் குறளிலை இருக்கு எண்டு
        சொல்லுங்கோவன்.

அப்பா:        எனக்குத் தெரிஞ்ச எல்லாக் குறள்களும் காமத்துப் பாலிலைதான் இருக்கு. குறள்
        இலக்கங்களைச் சொல்லிறன். நீயே புத்தகத்திலை பாத்து வாசிச்சு அறிஞ்சுகொள்.
        நீ வயது வந்தபிள்ளை இதுகளை வாசிச்சு அறியிறதுதான் நல்லது. இதுதான்
        அந்தக் குறள் இலக்கங்கள். 1312, 1317, 1318. இந்தக் குறள்களிலை தும்மலைப்
        பற்றி வராட்டில் நான் உன்னோடை திருக்கறளைப் பற்றிப் பேசிறத்தை விட்டிடுறன்.

சுந்தரி:        அப்பா எனக்கு ஒரு யோசினை தோன்றுது. இப்ப தும்மலைக் கேட்டதுபோலை
        வேறை விஷயங்களையும் குறளிலை இருக்கோ எண்டு நாங்கள் கேட்டால், நீங்கள்
        தேடிப்பாத்துப் பல குறள்களையும் எங்களுக்குச் சொல்லலாம்தானே. நீ என்ன
        நினைக்கிறாய் ஞானா?

ஞானா:        நல்ல யோசினைதான் அம்மா. ஆனால் அப்பா சம்மதிப்பாரோ எண்டதுதான்
        கேள்வி?

அப்பா:        நல்ல கேள்வியும், நல்ல மறுமொழியுந்தான். எனக்கும் பொழுது போகத்தானே
        வேணும். நானும் திருக்குறளைக் கூடுதலாய்ப் படிச்சதாய் முடியும். அதுக்கென்ன
        செய்வம். இப்ப நான் சொல்லிறதைச் செய்வியளோ?

ஞானா:        அம்மா! அப்பாவுக்கு இப்ப கோப்பி வேணும். வாருங்கோ முதல் அதைச் செய்வம்.

                            (இசை)



No comments: