வேம்படி மகளிர் பாடசாலையின் நிகழ்ச்சி -கௌரி.
சிட்னியில் வாழும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் பாடசாலையின் பழைய மாணவிகள் வருடா வருடம் "Vembadi Night 2012" என்ற நிகழ்ச்சியை நடாத்தி வரும் நிதியை தமது பாடசாலைக்கு உதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு இவ்வருடமும் கடந்த சனிக்கிழமை 11.08.2012 அன்று Castle Grand Pioneer  Hall - Castle Hill Community Centre ல் Vembadi Night 2012 நடந்தேறியது.
வழமைபோல் சரியாக குறிக்கப்பட்ட நேரமாகிய மாலை 6.30 மணிக்கு எமது தாய்நாட்டில் நடந்த இனப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையும் மௌன அஞ்சலியும் செலுத்தியவுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முதலாவதாக பாடசாலை கீதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கீதமும் பாடப்பட்டது.


பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களின் நண்பர்கள், உற்றார் உறவினர்களென மண்டபம் நிறைந்து காணப்பட்டது. மஞ்சள் கறுப்பென மேசை அலங்காரங்கள் கண்ணைக் கவருவதாக இருந்தது. Souvenier's ன் அமைப்பும் அலங்காரத்துக்கும் நிகழ்ச்சிக்கும் மேலும் மெருகூட்டுவதாக இருந்தது.வேம்படி மகளிர் பாடசாலையின் பழைய ஆசிரியையாகிய திருமதி ஞானா குலேந்திரனின் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து சிட்னி கீத சாகரா இசைக்குழுவனர் ராஜஜோகன் தலைமையில் காதுக்கினிய பாடல்களை வழங்கினார்கள். பாடியவர்களில் திருமதி சுகந்தி நிமலன் வேம்படியின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள் மேலும் சில பாடல்களை வழங்கியமை மெச்சத்தக்கது.இதனைத் தொடர்ந்து Janani Beedle ன் Indian Dance School மாணவிகள் கண்ணுக்கினிய Bollywood, Hip hop நடன நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். பார்வையாளர்களின் கரகோஷத்திலிருந்து நடனங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறியக் கூடியதாக இருந்தது.நடன நிகழ்ச்சியில் யாவரும் வியக்கும் படியாக வேம்படி பழைய மாணவிகள் தாமே ஒரு Bollywood நடனத்தை வேம்படியின் பழைய மாணவியும் நடன ஆசிரியையுமாகிய Mrs Meena Beadleடம் பயின்று அவருடன் சேர்ந்து மிகத் திறமையாக ஆடி மண்டபம் நிறைந்த கரகோஷத்தை பெற்றனர்.  Mrs Meena Beadle அன்று காலை தனது தந்தையார் காலமாகியும் ஆரம்பித்த காரியத்தை முடித்து வைத்தமை அவர் தனது பாடசாலையின் மீது எவ்வளவு பற்றைக் கொண்டுள்ளார் என்பதை விளக்கியது.சுவையான உணவுகளுடன் இராப்போசனம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிட்னி பழைய மாணவிகளின் சங்கத் தலைவி திருமதி சாந்தா திருவருட்செல்வன் நன்றியுரை வழங்கினார். வேம்படியின் பழைய ஆசிரியைகளை Raffle பரிசுகளை அளிக்கவிட்டு கௌரவித்தமை பாராட்டத்தக்கது. 10 மணி தொடக்கம் திரு ஸ்ரீரஞ்சனின் DJ யிற்கு நடனமாடி மகிழ்ந்தார்கள்.


Vembadi Night 2012 நிகழ்ச்சியில் பழைய மாணவிகளையும், ஆசிரியர்களையும் நண்பர்களையும் கண்டு பேசி பழைய நினைவுகளை பகிர்ந்து நல்ல பல நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து, நாவுக்கினிய உணவுகளை உண்டு மனம் நிறைந்த திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
No comments: