வருடாந்த அகதிகள் உள்ளீர்ப்பை 20,000ஆக அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்; படகில் வருபவர்களுக்கு ஊக்குவிப்பில்லை


தனது வருடாந்த அகதிகள் உள்ளீர்ப்பு எண்ணக்கையை 20,000 ஆக அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

தற்போது 13,750 ஆகவுள்ள இந்த எண்ணிக்கையை நிபுணர்கள் குழுவொன்றின் சிபாரிசின்படி 20,000 அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த 45 சதவீதமான அதிகரிப்பு கடந்த 30 வருடகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

படகுமூலம் வருபவர்களை விசாரிப்பதற்கு நௌரு மற்றும் பப்வுவா நியூகினியா நாடுகளில் முகாம்களை அமைப்பதற்கும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அங்கீகாரமளித்தமை குறிப்பிடத்தக்கது.

புகலிடம் கோரி ஆபத்தான படகுப்பயணம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை தடுப்பதும் அகதி அந்தஸ்து கோருவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும்  இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறுகையில், அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை தெளிவான செய்தியை கூறுகிறது என்றார்.

"முதலாவது செய்தியானது நீங்கள் படகில் ஏறினால் நௌரு அல்லது பப்புவா  நியூகினியா நாடுகளுக்கு இடமாற்றப்படும் ஆபத்தை எதிர்கொள்கிறீர்கள் என்பதாகும். ஆனால் இரண்டாவது செய்தியானது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தால் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றத்திற்கான இடங்கள் அதிமாகும் என்பதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

 ' அதிகரிப்பானது அதிக தேவையுள்ளவர்களை, அதிக ஆபத்தை எதிர்கொள்பவர்களுக்கானது. படகில் ஏறுபவர்களுக்கானது அல்ல'  என அவர்கூறினார்.

படகில் வருபவர்கள் அனுகூலத்தை பெற மாட்டார்கள். உயிரை ஆபத்திற்குள்ளாக்குவதற்கு, செலவிடும் பணத்திற்கு அது பெறுமதியானதல்ல, ஏனெனில் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களின் படகில் வருபவர்களுக்கு எந்த பயனுமில்லை' எனவும் பிரதமர் கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

"அதிக ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் ஜோர்தான், துருக்கி, லெபானான் நாடுகளிலுள்ள அகதி முகாம்களுக்கு தப்பிச்செல்லும் சிரியர்கள் இந்த அதிகரிப்பு எண்ணிக்கை மூலம் உள்வாங்கப்படுவர்"  என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவென் கூறியுள்ளார்.

"ஆம், இலங்கை அகதிகள் தொடர்ந்தும் தொடர்தும் எமது திட்டங்களில் இடம்பெறுவர்கள். பர்மியர்கள், மலேஷியா, தாய்லாந்து, இந்திய நாட்டவர்கள்ளும் இடம்பெறுவர்" எனவும் அவர் கூறியுள்ளார்.  நன்றி தேனீ 

No comments: