முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வு -தெணியான்


.
                              இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நு}ல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நு}லுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.
 கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத்தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நு}ல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நு}ல் வித்தியாசமான ஒரு நு}லாக இருக்க வேண்டுமென எனக்குள்ளேதீர்மானித்துக் கொண்டேன்.
 நு}லைத்திறந்து உள்ளே நோக்குகையில் நு}லின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நு}ல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

 அதேவேளை சில வினாக்கள் இயல்பாகவே எனது உள்ளத்தில் மேலெழுந்து வந்தன. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -2011 ஜனவரி 06,07,08,09 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்து முடிந்தது. இந்த நு}ல் மாநாடு நடந்து முடிந்து ஆறாவது மாதம் ஜூன் 2011இல் வெளிவந்திருக்கின்றது. இவ்வளவு விரைவாக ‘சுடச்சுட’ இந்த நு}லை வெளியிட்டு வைக்கவேண்டிய அவசரமும் அவசியமும் பூபதிக்கு ஏன் வந்து நேர்ந்தது?
 ஒரு  நிகழ்வினை திட்டமிட்டுச் செயற்படுத்த முடிந்தபின்னர், அந்த நிகழ்வு எவ்வாறு நடந்தேறியது என்பது பற்றி ஒரு பதிவு, நு}லாக வெளிவரவேண்டுமா? என்பது இன்னொரு வினா.
 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றியும் இந்த மாநாட்டுக்கு முன்னர் நடந்த ‘சில குழப்பங்கள்’ பற்றியும் ஏற்கனவே சில தகவல்களைப் பலரும் அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு அறிந்தவைகள் யாவும் ‘புறமாகவுள்ள’ சில தகவல்கள் மாத்திரந்தான். பூபதியின் இந்த நு}லைப் படித்து முடித்தபின்னர் புறத்தை முழுமையாகக் கண்டு கொண்டதுடன், வெளியில் இருந்தவர் அறியாத, அறிந்துகொள்ளமுடியாத அகத்தை (உள்ளும்) முறையாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
 இலங்கையில் இதுவரைகாலமும் நடந்து முடிந்த இலக்கிய மாநாடுகளுக்குள் இந்த மாநாடு மிகுந்த பிரபல்யப்படுத்தப்பட்டதுக்கும், சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது இந்த மாநாட்டுக்கு எதிராகச் செய்யப்பட்ட எதிர்ப்பிரசாரம்தான் என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம். இந்த வகையில் நோக்கும் பொழுது மாநாட்டை எதிர்த்து நின்று பிரசாரம் செய்தவர்களுக்கு பூபதியும் மாநாட்டுக் குழுவினரும் நன்றி தெரிவிக்க வேண்டுமெனத் தோன்றுகின்றது.
 முருகபூபதி மிக விரைவாக எழுதத் தகுந்த ஆற்றல் உள்ளவராக இருந்தபோதிலும், மொத்தம் இருபத்தேழு தலைப்புக்களில் உருவாக்கி இருக்கும் இந்தப் பெரிய நு}லில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்அனைத்தும் குறுகிய கால அவகாசத்தில் எழுதப் பெற்றவைகளல்ல. மாநாடு நடைபெறுவதற்கு முன்னரே ‘வக்கிரம் கக்கிய விஷம்’ தணிய பூபதி கொடுத்த ஒளடதம்,
 ‘அவது}றுகளுக்குப் பதில்’, பத்திரிகைகள், சஞ்சிகைகளில், வானொலிகளில் செவ்விகள், வினாக்களுக்கு விடைகள், அறிக்கைகள் என்பன யாவும் உள்ளும் புறமும் விளங்கிக் கொள்ளத் தகுந்த வண்ணம் ஒவ்வொரு தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன. இவைகள் இந்த நு}லின் நடுப்பகுதியில் இடம்பெற, முற்பகுதிக் கட்டுரைகள் அத்தகைய இலக்கிய மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான எண்ணக் கருவின் உருவாக்கம், முன்னரே பல மாநாடுகளை நடத்தி முடித்த பூபதியின் அனுபவங்கள் பற்றிப்பேசுகின்றன. அத்துடன் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்கள் மாநாட்டு செயற்பாட்டுக்குழுவின் தெரிவு, நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று எடுத்த நடவடிக்கைகள் என்பன பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  நு}லின்இறுதிக்கட்டுரைகள், மாநாட்டு நிகழ்வுகள், அதன் பிரதான அம்சங்கள் ‘ஒன்றுகூடலின்மனநிறைவு’ என்பவற்றை எடுத்துக் கூறுகின்றன. குமரன் பதிப்பகத்தில் தரமாக உருவாகியிருக்கும் இந்த நு}ல் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளது.
 “முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்களித்த அனைவருக்கும் இந்நு}ல்சமர்ப்பணம்’ என நு}லாசிரியர் பூபதி சமர்ப்பித்துள்ளார். யார்யாருக்கு நன்றி தெரிவிக்கவேண்டுமோ, விசேடமாக அவர்கள் பெயர்களை எல்லாம் நு}லில் பதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த நூலின் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தினை மாநாட்டுச் செலவினை ஈடுசெய்வதற்குவழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பற்றி இலக்கிய உலகில் பொதுவாக மிக உயர்ந்த ஒரு கருத்துண்டு. அவர் யாரோடும் முரண்பட்டுப் பகைத்துக் கொள்ளாத மென்மையான பண்புள்ளவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் விளங்கிக் கொண்டு அதேசமயம் தான் விலை போகாது இணங்கிப்போகின்ற ஒருவர். இலக்கியவாதிகள் பலர் அவருடைய இந்த நல்ல பண்பினை அவரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்
 பூபதியின் இத்தகைய சிறப்பினை உணர்ந்து, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை அவர் முன்னின்று நடத்த வேண்டுமென அவரை உந்தித் தள்ளிக் கொண்டு வந்தார்கள். இலக்கியகர்த்தாக்களுடன் சர்வதேச மட்டத்தில் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் பூபதி, மாநாட்டினை நடத்தி முடிப்பதற்கான செயற்பாட்டில் இறங்கியவேளையில்தான், பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது.
 தீர்க்கமாகச் சிந்தித்து, திடமாக எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கி ஓடும் பாதையில் பூபதி கடந்த காலத்தில் வளர்ந்துவரவில்லை. துணிச்சலுடன் நின்று மாநாட்டினை நடத்தி முடித்திருக்கின்றார். பூபதி ஒருவர் மாத்திரம் எடுத்து முடித்துள்ள இலக்கிய மாநாடு அல்ல இது. ஆனால் இந்த இலக்கிய மாநாட்டின் மூலமூர்த்தி முருகபூபதி என்பதனை எவரும் மறுத்துரைக்க இயலாது. நடந்து முடிந்த இந்த மாநாடு முதலாவது மாநாடு என நு}லில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது, மூன்றாவது மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுமென்னும் ஊகத்தை இது கொடுக்கின்றது. ஆனால் இந்த நு}லில் பூபதி பதிவுசெய்யாத, மாநாடு சம்பந்தப்பட்ட சில காரியங்களும் பின்னர் நடந்தேறி இருக்கின்றன.
 அவைகளைநோக்கும் பொழுது பூபதி தமது இலக்கிய வாழ்வில் நம்பிக்கைக்குரியவர்களாக யார்யாரைக்கருதி, மதித்து நடந்து வந்தாரோ, அவர்களினால் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கின்றார் என்பதனை அறிய முடிகின்றது. இத்தகைய ஒரு நிலைமை நல்ல தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் வந்து சித்தித்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்ந்து நடைபெறுமோ, என்னவோ!
 ஆனால் இந்த இலக்கிய மாநாடு போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு வழிவகுப்பதாக முதல்மாநாடு அமையும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. அதன்வெளிப்பாட்டையும் அண்மையில் கண்டுகொள்ள முடிந்ததை எண்ணிப் பூபதி பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
‘உள்ளும் புறமும்’ நு}லை வாங்கிப் படித்துப் பாருங்கள். மேலும் பல விபரங்களைஅறிந்து கொள்ளலாம்.

    பிரதிகளுக்கு: கொழும்பில் - பூபாலசிங்கம் புத்தகசாலை,   குமரன் பதிப்பகம்.
               யாழ்ப்பாணத்தில் - பரணி புத்தகக்கூடம் , நெல்லியடி
   அவுஸ்திரேலியாவில்: International Tamil Writers Forum
                                                   P.O.Box- 350, Craigieburn, Vic-3064


No comments: