ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்தின் கலைவிழா 2011




.


ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்தின் கலைவிழா 09.04.2011 சனிக்கிழமை பகாய் சென்ரர் சில்வவோட்டரில் கல்வி நிலையத் தலைவர் திரு.வி.ஏ.மனோகரன் தலைமையில் இடம் பெற்றது.மாலை 5 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் சிறு குழந்தைகள் முதல் உயர்தர வகுப்பு மாணவர்கள் வரை பங்கு பற்றி சிறப்பித்தார்கள். நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழ்க்கல்வி நிலையத்தின் முன்னை நாள் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் ஸ்ரத்பீல்ட் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Charles Casuscelli MP  அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிகழ்வில் தமிழ்க்கல்வி நிலையத்தின் அதிபர் திரு.ச.தேவராஜா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். HSC தமிழ்ப்பாடத்தில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு ஸ்தாபகர் பரிசில்களை திரு திருமதி பாலேந்திரா, திரு .சுந்தர் ஈஸ்வரன் திருமதி சத்தியா கருணாகரன் ஆகியோர் வழங்கினார்கள். 


HSC தமிழ்ப்பாடத்தில் அதிக புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்ற மாணவன் அஸ்வின் சண்முகலிங்கத்திற்கு Dr .இளங்கோ ஞாபகார்த்த சுழல் கேடயம் திருமதி கலா இளங்கோ அவர்களால் வழங்கப்பட்டது. 2010 ம் ஆண்டிற்கான தமிழ்க்கல்வி நிலையத்தின்சிறந்த மாணவர்களுக்கான விருதை 12 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 1ம் இடத்தை செல்வி அபிராமி ரவீந்திரனும் 2ம் இடத்தை செல்வி சரண்யா தியாகராஜாவும் 12 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் 1ம் இடத்தை செல்வி கேசவி விக்னராஜாவம் 2ம் இடத்தை செல்வி மயூரி இந்திரகுமாரும் பெற்றுக்கொண்டனர். இறுதியாக பாடசாலை மாணவர்களின் மகாபாரதம் நாடகத்துடன் நிகழ்சிகள் 11 மணிக்கு நிறைவடைந்தது. 





5 comments:

kirrukan said...

கீதைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?யாராவது கல்விமான்கள் எடுத்து சொன்னால் நல்லம்.....
களத்தில சிங்களவர் ஆயுதம்மூலம் தமிழை அழிக்க
புலத்தில் நாம் ஆத்மீகம் மூலம் தமிழை அழிக்க முயற்சி செய்கிறோம் போல இருக்கு

Anonymous said...

Bharathaththiyum raamaayanaththaiyum pandaravanniyanayum viddal ivarkalukku veru onrumee theriyatha?

Anpudan Mani

Anonymous said...

Unmaiyile kirukkan pola irukku.

kirrukan said...

[quote]Anonymous said...
Unmaiyile kirukkan pola irukku.[/quote]
கிறுக்கன் என எழுதிய பின்பும் உங்கள் சந்தேகம் இவ்வளவு காலமும் தீரவில்லை என்றால் நான் என்ன செய்ய.....கி...கி.....

kalai said...

தமிழில் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குபவர்கள் முதலில் தமிழர்களாக இருக்கவேண்டும். அதாவது அவர்களின் வீட்டில் பிள்ளைகளுடன் தமிழில் கதைக்க வேண்டும்.