மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
40. சமயங்களின் தொடர்பு

எல்லாச் சமயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவே! அத்துடன் அவை போதிக்கும் கொள்கைகள், மற்றும் அவை கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் ஆகியவற்றிற்கு ஒன்று மற்றொன்றுக்குக் கடன்பட்டவை. ‘வேதமதம்’ என்பதுதான் காலத்தால் முந்தையது: 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ‘புத்தமதம்’ அதன் மகன் ஆகும்: கிறித்துவ மதம் கீழ்த்திசைக் கோட்பாடுகளினால் பெரிதும் தாக்கம் பெற்றது: அது பேரன் ஆகும்! ‘இசுலாம்’ என்பது இறைத்தூதர்களைப் பெற்றது: அதன் அடிப்படையில் கிறித்துவ மத இறைத் தூதர்களைக் கொண்டிருப்பது: அது கொள்ளுப்பேரன் ஆகும். இவை எல்லாமே தங்களின் அடிப்படை ஒழுக்கமாக ‘அன்பு’ என்பதையே கொண்டுள்ளன: மனத்தை நெறிப்படுத்தவும், இறைவனில் மனிதன் இரண்டறக் கலக்கவும், அன்பையே அடிப்படை ஒழுக்க நெறியாகக் கொண்டுள்ளன.


41. நான் யார்?
உண்மை (சத்தியம்) என்பதே நான் போதிப்பது: அறவழியே (தருமம்) நான் வாழுவது: அமைதியே (சாந்தி) என் ஆளுகையின் அடையாளம்! அன்பு (பிரேமை) என்பதே என் உண்மை இயல்பு!

42. ஆர்யா
‘ஆர்யா’ என்பதன் பொருள், ‘தான்’ (self) என்பது பற்றிய அறிவைத் தேடுபவர் என்பதாம்.

43. அன்பும் அகங்காரமும்

அன்பு என்பது:
கொடுத்துக் கொண்டே இருப்பது:
மன்னித்துக் கொண்டே இருப்பது:

தான் (அகங்காரம்) என்பது:
எடுத்துக் கொண்டே இருப்பது:
மறந்து கொண்டே இருப்பது!

44. சுவாமியின் கடிதம் (தன் 14ம் வயதில் தன் அண்ணாருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து ஒரு பகுதி)

எனக்கென்று ஒரு கடமைப்பொறுப்பு உண்டு! – ‘மனித சமூகம் அனைத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருப்பதுடன், அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் முழுநிறை ஆனந்தம் பெற்று வாழப் பாதுகாப்பாய் இருப்பது என்பதே அது!

எனக்கென்று ஒரு சூளுரை (சபதம்) உண்டு! – ‘யார் நேர்மையான பாதையை விட்டு விலகிக் சென்றார்களோ, அவர்களை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அவர்களுக்குத் தொண்டு (சேவை) புரிவது என்பதே அது!’

என்னை நான் இணைத்துக் கொண்டேன்!

நான் எதன்மேல் பேரன்பு கொண்டுள்ளேனோ அந்த வேலையுடன்! அதாவது, ஏழைகளின் துன்ப, துயரங்களை நீக்குவது, அவர்களிடம் எவை இல்லையோ அவற்றை அவர்களுக்குத் தந்து உதவுவது!

45. அறிவின் சாரம்
எல்லாவற்றிற்கும் மேலாக, நற்பண்புகளை வளர்ப்பதனையே முதலில் தொடங்குங்கள்: அதுதான் மிக முக்கியமானது! மேலும், வெறும் புத்தக் கல்வியை விட மிக்க பயன் தருவது: அதுதான் உண்மையான ஆனந்தத்தைத் தருவது: அதுதான் எல்லா அறிவுகளின் ‘சாரம்’ ஆகும்: எல்லாக் கல்விகளும் சேர்ந்து விளங்கும் உச்சமுகடாகிய, உயர் உச்சி நிலையும் அதுவே!No comments: