உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரும்பிராய் மக்களின் ஒன்றுகூடல்

.


உரும்பிராய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரும்பிராய் மக்களின் ஒன்றுகூடல்

இவ்வருடம் ஏப்ரல் மாதம் உரும்பிராய் இந்துக்கல்லூரி தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை சிட்னிவாழ் உரும்பிராய் மக்களும் உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களும் சிட்னியில் ஒன்றுகூடி பகிர்ந்துகொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஏப்பிரல் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து இரவு 10:00 மணிவரை Number 4  Corner of , Kerrs Rd and Joseph ST, Lidcombe   இல் அமைந்துள்ள Community  hall  இல் இடம்பெற உள்ளது.

இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள விரும்பும் சிட்னிவாழ் உரும்பிராய் மக்கள் அல்லது உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

திருமதி வாசுகி ஈஸ்வரலிங்கம் 9899 5402

திருமதி சாந்தி பாஸ்கரன் 9649 4756

சிவகுருநாதன் சிவகுமார் 0410 426 608.
தகவல்: விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

         Our Principal: Mr.A.Eswaranathan
        நூற்றாண்டு விழா மாபெரும் கல்விக்கண்காட்சி
          காலம் : 3/4/2011 முதல் 5/4/2011 வரை
         இடம் : உரும்பிராய் இந்துக்கல்லூரி


கல்லூரிக் கீதம்

மலர்கலை உரும்பிராய் இந்துக்கல்லூரி
வான்புகழ் ஓங்கியே வாழ்க!
மெய்ஞ்ஞான மன்றில் விளைஞானத் திருவை
விஞ்ஞானம் நல்கிட வாழ்க!
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
உண்மையை மாணவர்க் குணர்த்து
மெய் மகா வாக்கியமாக
மெய்ப்பொருள் காணுவதறிவு
விளங்க நிரந்தரம் வாழ்க!
மணிக்கொடி உரும்பிராய் மாநகர் எடுத்தே
வான்புகழ் ஓங்கியே வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!
இந்துக்கல்லூரி வாழ்க!
எங்கள் கல்லூரி வாழ்க!!
 

No comments: