சாய்பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்

.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்யசாய்பாபா (85).

இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் சாய்பாபாவுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தினார்கள்.அதன் பிறகு அவரால் நன்றாக சுவாசிக்க முடிந்தது. இடையில் டாக்டர்கள் 2 தடவை சுவாச கருவியை அகற்றிப்பார்த்தனர். அப்போது சாய்பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீசத்யசாய் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபையா நிருபர்களிடம் கூறும் போது, சாய்பாபாவின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உடல் உறுப்புகள் சீராகவும், திருப்திகரமாகவும் செயல்படுகிறது.

சாய்பாபாவின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவரது சிறுநீரகமும் செயல்பட தொடங்கியுள்ளது. அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. இதயமும், நுரையீரலும் ஓரளவு நல்ல முறையில் இயங்கத் தொடங்கி உள்ளது.

அவரது உடல்நிலை சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி உள்ளது. இதனால் அவரது உடல் நிலையில் நல்ல முன்றேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்.

ஆனால் அவரால் சரிவர சுவாசிக்க இயலவில்லை. தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வருகிறோம். அவரைப் பார்க்க முக்கிய பிரமுகர்கள் பலர் வந்தனர். ஆனால் கிருமித் தொற்றால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் யாரையும் அனுமதிக்கவில்லை என்றார்.

சாய்பாபா உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாவதால் அவரது பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புட்டபர்த்தி செல்லும் வழிகள் அனைத்திலும் ஏராளமான சோதனை சாவடிகளை போலீசார் அமைத்துள்ளனர். ஆசிரமத்தை சுற்றிய பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் தங்கி பாதுகாப்பு பணிகளை பார்வையிடும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சாய்பாபாவின் உடல்நிலை பற்றி அடிக்கடி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இதனால் பக்தர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்குதான் புட்டபர்த்தியில் போலீஸ் படைகளை குவித்துள்ளோம். மேலும் இங்கு பாதுகாப்புக்கு அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்படுகிறார்கள்.

புட்டபர்த்திக்கு தற்போது முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார். ஸ்ரீசத்யசாய் ஆஸ்பத்திரியில் அடிக்கடி பக்தர்கள் முற்றுகையிட்டதால் அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு போலீஸ் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. பாதுகாப்பு கருதி புட்டபர்த்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை ஓரளவு பதட்டம் குறைந்ததால் தடை உத்தரவை நீக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன.

1963 ஜூலை 06 குருபூர்ணிமா தினத்தில் சாயிபாபா தனது ஆன்மீகக் கண்டுபிடிப்பின் பின்னணியிலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிவன்சக்தி கோட்பாட்டின் முப்பரிமாண ஜனனமாக சாயி அவதாரத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சீரடி சாயிபாபா, சிவா, பார்வதி ஆகியவையே ஸ்ரீசத்யசாயி பாபா எனவும் சக்திக் கோட்பாடானது கர்நாடக மாநிலத்திலுள்ள மண்டியா மாவட்டத்தின் பிரேமசாயாக அவதரித்திருப்பதாகவும் கருதப்பட்டது.


தனது சிறுபராயத்திலும் புனிதர் சீரடி பற்றி சாயிபாபா குறிப்பிட்டிருந்தார். தான் எழுதிய பாடல்களில் இதனைப் பற்றி அவர் எழுதியுள்ளார். சீரடி சாயிபாபா 1918 இல் தான் மரணமடைவதற்கு முன்னர் தனது மரணத்தைப் பற்றி அறிவித்திருந்தார். எட்டு வருடங்களில் சென்னை மாகாணத்தில் மீளத் தோன்றுவாரென அவர் அறிவித்திருந்தார். சத்யசாயி பாபா 1926 இல் பிறந்தார். பின்னர் தான் சீரடி பாபாவாக இருந்ததாக அவர் அறிவித்திருந்தார்.

தன்னைப் பற்றி அவர் பேசும்போதெல்லாம் தனது முன்னைய உடல் சீரடி பாபாவாக இருந்ததாக சத்யசாயி பாபா கூறியுள்ளார். ஆனால், மண்டியா மாவட்டத்தில் பிரேமசாயின் மற்றொரு அவதாரத்தை தான் எடுப்பாரென சாயிபாபா அறிவித்திருந்தும் இதுவரை அவரின் அந்த வாரிசு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

அவருடைய உடல்நிலையை அறிவதற்கு பின்வரும் இணையத்தளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.

http://www.radiosai.org/


4 comments:

kirrukan said...

[quote]இடையில் டாக்டர்கள் 2 தடவை சுவாச கருவியை அகற்றிப்பார்த்தனர். அப்போது சாய்பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.[/quote]

அட ஆண்டவனுக்கே ஆஸ்பத்திரியா?
வைத்தியருக்கே வைத்தியமா?

Anonymous said...

Mr.Kirukkan enna sai raamudan vilayadukireerkal nallathalla.

Anpudan
Mani

Om Sai said...

He can cure other people . What happen to him ....... Dr. Kovur can help from heaven

சாய் said...

ஆஸ்பத்திரியில் சாய்பாபா இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ???????????