நல்லதோர் வீணை- சிறுகதை


நல்லதோர் வீணை
லதாமகன்

வீடு வந்து சேர்ந்த பிறகும் உடல் நடுங்கிக்கொண்டே இருந்ததுசெருப்பைஎறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டேன்.  அம்மா வழக்கம்போல எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்என்னவோ உடம்பெல்லாம் எரிவதுபோல் இருந்தது. துப்பட்டாவைக் கழற்றி மெத்தைமேல் வீசிவிட்டுபானையிலிருந்து ஒரு குவளை தண்ணீர்குடித்தேன்இப்போது கொஞ்சம் தெளிவானது போல் இருந்ததுஏன் அவனைச் செருப்பைக் கழற்றி அடிக்கவில்லை என என்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன்கண்ணீர் வந்ததுகொஞ்சம் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்நான் அழத் தேவையில்லை என்று தோன்றியது.கொஞ்சம் அழுதால் பாரம் குறையுமோ என்றும் தோன்றியதுகழிப்பறையில் புகுந்துகொண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன்.வெளியில் வந்தபோது அறையின் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததுதுப்பட்டா அப்படியே கிடந்தது,லேசாகத் துடித்தபடி
பொடி தாத்தாவை நினைவு தெரிந்த நாளிலிருந்து தெரியும்எங்களுக்கு பொடி தாத்தா என்றால் அத்தனை இஷ்டம்பள்ளிவிட்டு வரும்போது தெருவிற்குத் திரும்பும் கடைசித் திருப்பத்தில் முதல் வீடு பொடிதாத்தாவுடையது.கயிற்றுக்கட்டில் போட்டு எந்நேரமும் எதையாவது மென்று கொண்டிருப்பார்.பொடி தாத்தா என்பது காரணப்பெயர்மூக்குப்பொடி போடுவார்ஏ தோ நியமனம் தவறினால் தலையே துண்டாகிவிடும் என்பது போல் அத்தனை சரியாய் அத்தனை ஆர்வமாய் பொடி போடுவார்இடுப்பில் இருக்கும் பச்சை நிற பெல்ட்டிற்குள்தான் பொடி சிமிழ் தூங்கும்உருளை வடிவில் ஒரு அங்குல விட்டம் கொண்ட சில்வர் குழாயில் இரண்டங்குல நீளத்திற்கு கத்தரித்து இரண்டு பக்கமும் அடைக்கப்பட்டதுபோல் ஒரு வித்தியாசமான சிமிழ் அது.காபித் தூள் போல சிமிழ் எப்போதும் நிறைந்திருக்கும். சிமிழ் காலியாக ஏன் பாதியளவு நிரம்பிய நிலையில் நாங்கள் கூட யாரும் பார்த்தது கிடையாது எப்போதும் தொண்ணூற்று ஒன்பது சதம் நிறைந்திருக்கும்.
நாட்டியம் ஆடும் பாவனையில்  பச்சைபெல்ட்டின் ஜிப்பைத் திறந்து பொடி டப்பாவை எடுத்து மேலே ஒரு தட்டு கீழே ஒரு தட்டு விரலால் சுண்டுவார்.பிறகு மூடியைப் பிடித்து திருகிநடுவிரலையும் பெருவிரலையும் நுழைத்து ஒரு பிடி (அந்த அளவு பிடி என்றுதான் சொல்லுவார் தாத்தா). எடுத்து ஒரே தாள லயத்தில் மூக்கின் வலது துவாரத்திலும் இடது துவாரத்திலும் வைத்து துவாரத்திற்கு ஒரு உறிஞ்சுகொஞ்ச நேரம் கண்ணை மூடி இருந்து விட்டு மெதுவாக ஆனால் நீளமாக மூச்சு விடுவார்கொஞ்சம் தலைசாய்த்து
"
என்ன பாப்பா இந்த பக்கம்வராதவ வந்திருக்கமாப்பிள பாக்கணுமா?சொல்லு.. கிழவன் அதுக்குத் தானே உசுரப்பிடிச்சு கிடக்கேன்என்பார்.
இந்த லயம் ஒருபோதும் மாறுவதில்லைஎன்னிடம் முதல் முறை கேட்டபோது ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம் என்று நினைவு.விதவிதமான நேரங்களில் விதவிதமான மறுமொழிகளைக் கொடுத்திருக்கிறேன். "மாப்ளன்னா யாரு தாத்தா"விலிருந்து "போ தாத்தா,உனக்கு வேற வேலையில்லஎன்ற சிணுங்கல் வரை.
oசும்மா ஊரெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு பொடிதாத்தா வீட்டுத் திண்ணையில்தான் அடைவோம் எங்கள் வட்டம்பொடிதாத்தாவிற்கு பெண்குழந்தைகள் என்றால் அத்தனை செல்லம். ஆண்குழந்தைகள் என்றால் திட்டிக்கொண்டோ கிள்ளி வைத்துக்கொண்டோதான் இருப்பார்.தோழிகளுக்குள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம்.பெண்குழந்தையாய் இருந்தால் துட்டுமிட்டாய் கொடுப்பார்வெல்லப்பாகு கரைசலுக்குள் எதாவது நாணையத்தை வைத்து தயாரிக்கப்படும் போல.வாயில் போட்டதும் ஏதாவது காசு வரும் என எதிர்பார்ப்போம்சிலருக்குக் கிடைக்கும்பலருக்குக் கிடைக்காதுஒரு முறை முக்குவீட்டு காமாட்சி துட்டுமிட்டாய்க்குள் இருந்த நாலணா நாணயத்தை முழுங்கிவிட ஏக களேபரமாகி, அதற்குப் பிறகு எங்களுக்குக் கொடுக்கும் மிட்டாயிலெல்லாம் குண்டூசி குத்திப் பார்த்துவிட்டு எதும் காசு இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே கொடுக்க ஆரம்பித்தார்மிட்டாய்க்காக இல்லாவிட்டாலும் தத்தாவின் கதைவாளி விளையாட்டுக்காகத்தான் அவரைப் பார்க்கப்போவதுபாதத்தின் மேற்பகுதியில் ஏறி நிற்க வேண்டும்அவர் கைகளைப் பிடித்துக்கொள்வார்.கதைசொல்லிக்கொண்டே காலைத் தூக்கும்போது ஏதோ கயிற்றை கட்டித் தூக்குவது போல நம்மையும் தூக்குவார்கதை அடுத்த வரி போகும்போதுகால் கீழே வரும்நாமும்இப்படியே போய்க்கொண்டிருக்கும்இதில் நடுவில் சில வில்லத்தனங்களையும் சேர்த்துச் செய்வார்காலை வேகமாகத் தூக்கிப்போடுவதுஏதோ அந்தரத்தில் பறப்பது போல் இருக்கும்கீழே வரும்போது சரியாக அவர்காலில் இறங்கவேண்டும்இல்லையென்றால் விளையாட்டை முடித்து அடுத்த குழந்தையை ஏற்றிவிடுவார். காலைத் தூக்கும்போது கையை விட்டுவிடுவார்அந்தரத்திலேயே விட்ட கையை சரியாகப் பிடிக்க வேண்டும் அல்லது தாத்தா மீதுதான் விழவேண்டி வரும்.அவுட் எனச் சொல்லி இறக்கிவிட்டு விடுவார்.
பள்ளி முடித்து கல்லூரி போனதிலிருந்து தாத்தாவைப் பார்க்கவே இல்லை.யோசித்துப் பார்த்தால் தாத்தா என்றழைப்பத்தே கொஞ்சம் அதீதம் எனத் தோன்றியதுமிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னாளைக்கு அவர் வயது அறுபதிற்குள்தான் இருக்கும்திண்ணென்ற மிலிட்டரி உடம்புஒரு நிமிடம் ஜீன்ஸ் டீஷர்ட் போட்டுப் பார்த்தால் புதிதாக கல்லூரியில் இணைந்து முதல் நாள் வகுப்பெடுக்கவரும் பயிற்சி விரிவுரையாளர் போல்தான் இருப்பார்.தளர்ந்த நடையும் குறிப்பாக பொடிபோடும் பழக்கமும்சிறுவயதுஅறிமுகமும்தான் அவரைத் தாத்தா என்றழைக்கத் தோன்றியதன் காரணமாக இருக்கும்ஊருக்குப் போகும்போது அவரிடம் என்னைக் கட்டிக்கிறியா தாத்தா என்றால் என்ன சொல்வார்?
வாம்மா பொண்ணு எப்படி இருக்க’
நல்லா இருக்கேன் தாத்தா’
எதுக்குமா வார்த்தைக்கு வார்த்தை தாத்தாஉறவு முறையில உனக்கு நான் மாமந்தான்’
அது எப்படி தாத்தா’
அது உனக்கு சொன்னா புரியாது’
ஏன் தாத்தா’
குசும்புக்காரி.. வா இப்படி உக்காரு’.
இருக்கட்டும் தாத்தா’
இதுக்கு பேர் இங்க்லீஷ்ல என்னாம்மா?
தாத்தா
வீடு வந்து சேர்ந்த பிறகும் உடல் நடுங்கிக்கொண்டே இருந்ததுசெருப்பைஎறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டேன்.  அம்மாவழக்கம்போல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்என்னவோஉடம்பெல்லாம் எரிவதுபோல் இருந்ததுதுப்பட்டாவைக் கழற்றிமெத்தைமேல் வீசிவிட்டுப் பானையிலிருந்துஒரு குவளைத் தண்ணீர்குடித்தேன்இப்போது கொஞ்சம் தெளிவானது போல் இருந்ததுஏன் அவனைச்செருப்பைக் கழற்றி அடிக்கவில்லை என என்னையே ஒருமுறைகேட்டுக்கொண்டேன்கண்ணீர் வந்ததுகொஞ்சம் சிரமப்பட்டுஅடக்கிக்கொண்டேன்நான் அழத் தேவையில்லை என்று தோன்றியது.கொஞ்சம் அழுதால் பாரம் குறையுமோ என்றும் தோன்றியதுகழிப்பறையில்புகுந்துகொண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன்.வெளியில் வந்தபோதுஅறையின் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததுதுப்பட்டா அப்படியே கிடந்ததுலேசாகத் துடித்தபடி

No comments: