இந்திய மேற்கு வங்கத்தில் நச்சு மதுப் பாவனையால் 143 பேர் உயிரிழப்பு

_


சி.எல்.சிசில் 16/12/2011

இந்திய மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களில் நச்சு மதுப் பாவனையால் ஆகக்குறைந்தது 143 பேர் உயிரிழந்துள்ளதாக அறிய வருகிறது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களில் மது அருந்தியதால் பலர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பொலிஸார் தமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என அஞ்சி வீடுகளில் பலர் மரணித்துள்ளனர்.

நச்சு மது மரணங்கள் இந்தியாவில் இப்போது ஒரு வழக்கமான நிகழ்வாக இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனை மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநில அரசு இறப்பு குறித்து குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

No comments: