இந்தோனேசிய கடலில் மூழ்கிய கப்பலில் சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்களை காணவில்லை

18/12/2011

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு பிராந்தியத்துக்கு ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று மாலை இந்தோனேசிய ஜாவா தீவுக்கு அப்பால் மூழ்கியதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படகில் சுமார் 400 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி, பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பயணித்ததாகக் கூறப்படும் இந்தப் படகில் 182 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைவதாகக் கூறப்படுகின்றது. அந்தப் படகில் பயணிக்கக் கூடிய பயணிகள் தொகையை விட இரு மடங்கிலும் அதிகமான பயணிகள் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணமென நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர். ___
நன்றி வீரகேசரி
No comments: