.
சென்றவாரம் உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தது. இதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து நியூசவுத்வேல் மானிலத்தில் முதன்மை மாணவியாக அதிகபுள்ளிகளை பெற்றிருக்கிறார் யதுசியா மகேந்திரராஜா ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலையத்தில் கல்விபயின்ற இவரை தமிழ்முரசு வாழ்த்துகின்றது. 28 மாணவர்கள் இக்கல்வி நிலையத்தில் இருந்து தமிழை ஒரு பாடமாக எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையம் சாதனை!
தர்சனா சிறிசந்திரபோஸ்
இந்த வருடம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு உயர்பாடசாலைச் சான்றிதழ் (HSC 2011) பரீட்சையில் தமிழ்மொழிப் பாடத்தில் ஹோம்புஸ் பாடசாலையில் இருந்து தோற்றிய 28 மாணவர்களுள் 14 மாணவர்கள் 90 புள்ளிகளும் அதற்கு மேலும் பெற்று BAND 6 சாதனை படைத்துள்ளனர். இது மொத்த மாணவரில் ஐம்பது வீதமாகும். கடந்த 2009ஆம் ஆண்டு சுமார் 40 வீதமானவர்கள் BAND 6 இல் சிந்தியடைந்திருந்தனர்.
இதனை விட மொத்த மாணவரில் 24 பேர் 80 புள்ளிகளும் அதற்கு மேலும் பெற்றிருக்கின்றனர். இது மாணவர் மொத்தத் தொகையில் சுமார் 86 வீதமாகும். இவர்களில் யதுசியா மகேந்திரராசா அதி கூடியதாக 94 புள்ளிகள் பெற்று அமைச்சர் விருதைப் பெற்றுக்கொண்டார். இவர்களில் பெரும்பான்மையானோர் புலம்பெயர் நாடொன்றில் பிறந்தவர்கள் அல்லது ஆரம்பக் கல்வியைத் தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற சனிக்கிழமை 17/12/11 மாலை ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இம்மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் திருநந்தகுமார், திருமதி கிருஸ்ணா நடராசா, திரு தணிகைவாசன் ஆகியோரும், HSC இணைப்பாளர் திரு லிங்கநாதன், மற்றும் அதிபர் திரு தேவராசா ஆகியோரும் மேடையில் அவர்களுடனிருந்தனர். ஆசிரியரும் முன்னாள் அதிபருமான திரு திருநந்தகுமார் அவர்கள் மாணவர்களின் சாதனைகளைப் தனித்தனியாகப் பட்டியலிட்டுப் பாராட்டிப் பேசினார். அங்கு குழுமியிருந்த பெற்றோரும் ஆசிரியர்களும் பலத்த கரகோசம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நி.ச.வே மாநிலத்தில் பரீசைகளுக்குப் பொறுப்பான கல்வி அதிகார சபையினுடனான (Board of Studies) மாணவர்களின் தொடர்புகள் அனைத்தும் மாணவர்கள் கல்வி பயிலும் பிரதான பாடசாலையூடாகவே இடம்பெறும் என்பதும் மாணவர்களின் தமிழ் மொழிப் பாடத்தேர்ச்சி மற்றும் புள்ளிகள் என்பன போன்ற தகவல்கள் மாணவர்களுக்கே நேரடியாக கல்வி அதிகார சபையினால் வழங்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும் கல்வி அதிகார சபையின் வலைத்தளத்தில் 90 புள்ளிளும் அதற்கு மேலும் பெற்ற மாணவர்களின் பட்டியல் தனியாகவும் பாட ரீதியாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
90 புள்ளுகளும் அதற்கு மேலும் பெற்ற மாணவர்கள் பட்டியல்
யதுசியா மகேந்திரராசா ஜினோதாலோகேந்திரன்
விதுரன் ஜெகதீஸ்வரன்
பரதகுலசிங்கம் விஜயகுலசிங்கம்
பார்கவி மோகனசுந்தரம்
பிரணவி ராஜசிங்கம்
தனுசன் திருநாவுக்கரசு
கீர்த்தனா பார்த்திபன்
கஸ்தூரி முருகவேல்
ஆதித்தன் திருநந்தகுமார்
தேவிகிருஸ்ணா தேவேந்திரன்
தேவகி சிவசுப்பிரமணியம்
தக்க்ஷிணா இராசேந்திரன்
லக்சாயினி நடேசு
4 comments:
Wow! What a great results and achivement. Congrats to the School and Teachers.
This may be the outcome of a consistant and continued approach to the teaching of Tamil in our Tamil Schools. Let's all encourage our students to offer Tamil as a subject at the HSC.
Weldone Tamil School.
பாராட்டுக்கள்...
பல்வேறுபட்ட முன்னுரிமைகளுடன் போராடிக்கொண்டு, சனிக்கிழமைகளில் மூன்று மணிநேரம் மட்டும் தமிழ் படிக்கும் குழந்தைகள் பாராட்டுக்குரியவர்கள். பெரும்பாலான குழந்தைகள் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுடன் தமிழ்க் கல்வியை நிறுத்திக்கொள்கின்றனர். ஆர்வமுள்ள மாணவரும், பெற்றோர உற்சாகப்படுத்தும் மாணவரும் மட்டுமே எழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முன்வருகின்றனர்.
இத்துணை இடர் தாண்டி பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் படித்து அதிக புள்ளிகள் எடுத்த மாணவர்களின் திறன் வியக்கவைக்கிறது. மாணவருக்கு வாழ்த்துகளும் பெற்றோருக்குப் பாராட்டுகளும் உரித்தாகுக.
congratulations yathusiya and all other students. you are all awesome. luv you
Post a Comment