ஆஸி. விக்ரோரியா மாநிலத்தில் விருதுபெற்ற முருகபூபதி


.                                                                                                
                                                                                                         அருண்.விஜயராணி


அவுஸ்திரேலியாவில் கடந்த 25 வருடகாலமாக வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதி இவ்வாண்டுக்கான அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில பல்லின  கலாசார ஆணையத்தின் மகத்தான சமூகப்பணியாளருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.
குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி புதன் கிழமை விக்ரோரியா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விக்ரோரியா மாநிலத்தில் சமூகம், கல்வி, கலை, கலாசாரம் உட்பட பல துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான விருதுகள் வருடந்தோறும் பல்லின கலாசார ஆணையத்தினால் வழங்கப்படுகிறது.
தமிழ், சிங்கள, இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்லின அமைப்புகளும் குறிப்பிட்ட விருதுக்காக பல சமூகப்பணியாளர்களை முன்மொழிந்து இறுதிக்கட்ட தெரிவுகளை பல்லின கலாசார ஆணையம் அறிவிக்கும்.
இதன்பிரகாரம் அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அதன் ஸ்தாபகர் திரு. லெ. முருகப+பதியை முன்மொழிந்தது.குறிப்பிட்ட விருதை விக்ரோரியா மாநில முதல்வர் திரு. டெட் பெயிலியூ அவர்களிடம் முருகபூபதி பெற்றுக்கொண்டார்.
முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  மற்றும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஆகியனவற்றை ஸ்தாபித்தவர் என்பதும் 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தின்போது டெரபின் மாநகர சிறந்த பிரஜைக்கான விருதினைப்பெற்றுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.1 comment:

திருநந்தகுமார் said...

திரு முருகபூபதி அவர்களை
விக்ரோறிய அரசின் பல்லினக் கலாசார ஆணையம் கௌரவித்தமை பொருத்தமானதே.
தங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்.