ஆசியாவில் யுத்த ஆபத்தை அதிகரிக்கும் ஒபாமா

.
கடந்த ஒரு வாரத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மாற்றம் குறித்த முக்கியத்துவம் வெளிப்படையாகியுள்ளது. இராஜதந்திர பொருளாதார மற்றும் இராணுவ என்று ஒவ்வொரு பிரிவிலும் ஒபாமா நிர்வாகம் ஆக்ரோஷத்துடன் சீனாவை எதிர்கொள்கிறது.இது அப்பிராந்தியத்திலும் அங்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் அழுத்தங்களைப் பெரிதாக உயர்த்தியுள்ளது.

வடக்கு அவுஸ்திரேலியாவில் அமெரிக்க மரைன்களுக்கு புதிய தளம் என்னும் ஒபாமாவின் ஏற்பாடுகள் மற்றும் இன்னும் கூடுதலான அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அணுகுவதற்கும் செய்துள்ள ஏற்பாடுகள் அமெரிக்க மேலாதிக்கத்தை இப்பிராந்தியத்திற்குள் தக்கவைத்துக் கொள்ளுதல் மற்றும் சீனாவின் பெருகும் செல்வாக்கைக் குறைத்தல் என்னும் பரந்த இராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதி ஆகும். ஒரு காலத்தில் அது கொண்டிருந்த பொருளாதாரச் செல்வாக்கை இன்னமும் செலுத்த முடியாத நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற முறையில் அதன் இராணுவ சக்தியை சீனாவுடன் மோதல் என்ற வகையில் முகங்கொடுக்கிறது. இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் லிபியப் போர்களை விட கூடுதலான பேரழிவு விளைவுகளை அளிக்கும் திறனைக் கொண்டது.

கடந்த வியாழனன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஒபாமாவின் அறிவிப்பானது ஆசிய பசுபிக்கில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மறுகுவிப்பு என்னும் உறுதியான மூலோபாய முடிவு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டுவரும் ஒரு வழிவகையைத் தான் பிரதிபலிக்கிறது. ஓராண்டிற்கு முன் ஹவாயில் பேசிய அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்டன் தன்னுடைய பணியைச் சுருக்கிக் கூறுகையில்; இராணுவச் சொற்றொடர்களைப் பயன்படுத்தினார். "அமெரிக்காவின் தலைமையை தக்க வைத்துக் கொள்ளவும் நீடிக்கவும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலையிலும் தலைநகரிலும் நம் இராஜதந்திரச் சொத்துகளை அனுப்புதல் என்பது நம் முன்னேற்றகர இராஜதந்திர நிலைப்பாடாக இருக்கும்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாலியில் நடைபெறும் கிழக்கு ஆசிய அரங்கு கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டார். இங்கு அவர் தென் சீனக் கடலில் அமெரிக்காவின் தேசிய நலன்களை தூண்டிவிடும் வகையில் தீவிரமாக்க விருப்பம் கொண்டுள்ளார். சுதந்திரமான கடல் நடமாட்டம் என்பதைப் பாதுகாக்கும் முறைபில் அமெரிக்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளை சீனாவிற்கு எதிரான முக்கிய மூலோபாய கடற்பாதைகளில் தங்கள் நலன்களை உறுதிகொள்ள வேண்டும் என்று ஊக்கம் கொடுக்கிறது. இதையொட்டி பிலிப்பைன்ஸின் கடற்படைத் திறன் விரிவாக்கத்திற்கு உதவி அளிக்கப்படுவதுடன் வியட்நாமுடன் கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவு கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகியவை தொடர்பு கொண்டிருந்த தொடர்ச்சியான கடற்படை சம்பவங்கள் ஆகும். இவை ஆபத்தான முறையில் பிராந்திய அழுத்தங்களை உயர்த்தியுள்ளன.

ஒபாமாவின் இராஜதந்திரத் தாக்குதலில் சிறிதும் கருணையான உணர்வு ஏதும் இல்லை. அமெரிக்க நட்பு நாடுகளை வலுப்படுத்தும் அவருடைய நிர்வாகத்தின் உந்துதலும் ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதும் புதிய உறவுகளைக் கட்டமைக்கும் தன்மையும் ஏற்கனவே அரசியல் முடிவுகளைக் கொடுத்துள்ளன. 2010 ஜூலையில் கெவின் ரூட்டை அகற்றி ஜூலியா கில்லர்டை அவுஸ்திரேலிய பிரதமராக நியமித்த தொழிற் கட்சியின் உள்விவகாரத்தின் முக்கிய காரணி அமெரிக்க சீன அழுத்தங்களைத் தளர்த்துவதற்கு நடுவராக இருக்க ரூட் முயற்சிகளை மேற்கொண்டதில் வாஷிங்டன் காட்டிய விரோதப் போக்காகும்.

தன்னை அமெரிக்க அவுஸ்திரேலிய உடன்பாட்டில் குன்று போன்ற உறுதியைக் கொண்டவர் என்று அறிவித்துக் கொண்ட ரூட் எவ்வகையிலும் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர் எனக் கூற முடியாது. அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியான சீனாவுடன் தன்னுடைய நீண்ட கால மூலோபாய நட்பு நாடான அமெரிக்காவுடனும் ஒரே நேரத்தில் இடர்நிறைந்த சமநிலைப்படுத்தும் செயலைச் சமாளித்து வந்த ரூட் ஒரு புதிய பிராந்திய அமைப்பை நிறுவும் திட்டத்தை முன்வைத்தார். அதாவது ஆசிய பசுபிக் சமூகம் என்பதை நிறுவி அந்த அரங்கம் ஒரு அமெரிக்க சீன மூலோபாயத் தவறான வழியை கிழக்கு ஆசியாவில் மேற்கொள்வதைத் தடுக்கவும் அதையொட்டி மோதல் அனைவருக்கும் பேரழிவு என்பதைத் தவிர்க்கவும் முடியும் என்றார்.

ஆனால், ஒபாமா கான்பெராவில் ஒரு விசுவாசமான அரசியல் பணியாளரை விரும்பினாரே ஒழிய ஒரு சுதந்திரமான மத்தியஸ்தரை அல்ல. ரூட்டின் இராஜதந்திர முன் முயற்சிகள் ஒபாமாவின் முயற்சிகளான சீன அழுத்தத்தைக் குறைக்காமல் தீவிரப்படுத்துதல் என்பவற்றிற்குக் குறுக்கே இருப்பதையொட்டி வாஷிங்டனில் எழுந்த பெருந்திகைப்பு

தொடர்ச்சியான விக்கீலீக்ஸ் தகவல் ஆவணச் சான்றுகளைக் கொண்டுள்ளது. ரூட் ஏற்கனவே பிராந்தியத்தின் நான்கு ஜனநாயகங்களான அமெரிக்கா, இந்தியா,ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகியவற்றிற்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நான்கு நாடுகள் திட்டத்தை புதைத்துவிட்டார். அத்திட்டம் ஒரு ஆசிய நேட்டோ தனக்கு எதிராக இயக்கப்படுகிறது என்று சீனா கண்டித்திருந்தது.

அவுஸ்திரேலிய ஏட்டின் வெளிநாட்டுப் பிரிவு ஆசிரியரான கிரெக் ஷெரிடன் கடந்த வார இறுதியில் ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கான வருகைகள் இரண்டை முன்னதாக இரத்து செய்திருந்தார் என்று குறிப்பிட்டு இரண்டாம் முறை இரத்து செய்யப்பட்டது. கெவின் ரூட்டின் பிரதம மந்திரிப் பதவியை இரத்து செய்யும் நிலைமையை உருவாக்கியது என்றும் கூறினார். ஒபாமாவின் பங்கு இத் தொடர்பில் அரசியல் கவனிப்புக்காட்டாது என்று அவர் கூறினாலும் ரூட்டிற்கு எதிரான ஆட்சி மாற்றம் ஷெரிடனுக்கு இதுபற்றி நன்கு தெரியும். வாஷிங்டனுக்கு மிக நெருக்கமான ஒரு சில தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க நபர்களால் செயற்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் ரூட் அகற்றப்படுவது பற்றி ஒபாமா விற்குத் தெரியும் அவர் உட்குறிப்பான ஒப்புதல் கொடுத்திருந்தார். ரூட் அகற்றப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு அவர் கான்பெராவில் வந்து இறங்கி இருக்க வேண்டிய திட்டமிட்ட பயணத்தை இரத்து செய்தார்.

கில்லார்ட் முகஸ்துதி கூறி தாழ்ந்து நிற்பது ஒபாமாவின் 24 மணிநேர அவுஸ்திரேலியப் பயணம் கடந்த வாரம் நடைபெற்றபோது முழுமையாகக் காணப்பட்டது. அதேபோல் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வெளியுறவு மந்திரியாக இருக்கும் ரூட்டுடன் தொடர்ந்துவரும் அழுத்தங்களும் தெரியவந்துள்ளன. ஒபாமா வருவதற்குச் சில நாட்கள் முன்னர்தான்.

அவுஸ்திரேலிய யுரேனியம் இந்தியாவிற்கு விற்கப்படக் கூடாது என்று ரூட் சுமத்தியிருந்த தடை ஒன்றை தான் அகற்றிவிடப் போவதாக கில்லார்ட் அறிவித்தார். இந்த நடவடிக்கைப் பற்றி இந்தியாவிற்குச் செல்லவிருந்த ரூட்டிடம் கில்லர்ட் முன் கூட்டித் தெரிவிக்கவில்லை.

ஒபாமாவின் வேண்டுகோளின் பேரில்தான் வந்திருக்கும் என்னும் இந்தியாவிற்கான யுரேனிய விற்பனையானது சுரங்க நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வரம் போன்றது என்பது மட்டுமன்றி இன்னும் நெருக்கமான அவுஸ்திரேலிய இந்திய இராணுவ உறவுகளில் தடை ஒன்றையும் அகற்றிவிட்டது.

இது நான்கு நாடுகள் கூட்டை ஏதெனும் ஒரு வகையில் புதுப்பிக்க முயலும் ஒபாமாவின் முயற்சிகளுக்கும் உதவும்.

மிக இரக்கமற்ற முறையில் ரூட் அகற்றப்பட்டது. சீனாவிற்கு எதிரான ஒபாமாவின் தாக்குதலில் பணயம் என்ன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இப் பிராந்தியம் முழுவதும் ஆளும் உயரடுக்குள் அவுஸ்திரேலிய ஆட்சியாளர்கள் போல் அதே சங்கடத்துடன் தான் தவிக்கின்றனர்.

எப்படி மலர்ந்து வரும் சீனாவுடனான பொருளாதார உறவுகளை உலகின் மேலாதிக்க இராணுவச் சக்தியுடன் சமச்சீர் செய்வது அமெரிக்காவுடன் ஒவ்வொரு பிரச்சினையிலும் எப்படி ஒரே புறத்தில் வணிகத்தில் இருந்து இராணுவத் தளம் மற்றும் மூலோபாயத் திட்டம் வரை என்பவற்றில் உலகப் பொருளாதார நெருக்கடி இன்னும் ஆழ்ந்து போகையில் வாஷிங்டன் மிகவும் குறைந்த சுயாதீன அணுகுமுறையைக் கூட அவுஸ்திரேலியா போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து பொறுத்துக் கொள்ளாது. ஏனெனில் அது அமெரிக்க இராணுவம் மற்றும் பொருளாதார ஆதிக்கமானது இந்திய பசுபிக் பிராந்தியம் முழுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தான் முயல்கிறது.

இந்தோனேசியாவின் வெளியுறவு மந்திரி மார்ட்டி நடலெகவா கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் ஏற்பாட்டாளர், அமெரிக்க மரைன்களை, இந்தோனேசிய தீபகற்பத்தின் சற்றே தென்புறத்தில் இருக்கும் டார்வினில் நிலைப்பாடு கொள்ளும் முடிவை அவர் குறை கூறியபோது ஜாகர்த்தாவில் இது குறித்த பயங்களைத்தான் வெளிப்படுத்தினார். சீனா இதை எதர்கொள்ளும் வகையில் தன் சொந்த இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் இது ஒரு அழுத்தம் மற்றும் பிராந்தியத்தில் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையற்ற தன்மை என்ற தீய வட்டத்திற்கு வழிவகுக்கும் நம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால் இது கட்டுப்பாட்டை மீறி விரிவடைந்துவிடக்கூடாது என்பது தான் என்று நடலெகவா எச்சரித்தார்.

அவுஸ்திரேலிய இராணுவத் தளங்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றை அமெரிக்கத் துருப்புகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றிற்குத் திறந்துவிடும் முறையில் கில்லார்ட் அரசாங்கம் அவுஸ்திரேலியாவையும் அவுஸ்திரேலியத் தொழிலாள வர்க்கத்தையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒருவேளை ஏற்படக்கூடிய போரின் முன்னணியில் இருத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதல்தரும் இராஜதந்திரப் பூசல்கள் இப்பிராந்தியத்தில் மோதல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதே உண்மையான ஆபத்து ஆகும். இதில் மிக ஆபத்தான பகுதிகள் கொரியத் தீபகற்பத்தில் இருந்து தைவான் மற்றும் இந்திய சீன எல்லைகள் என்ற பூசலுக்குட்பட்ட இடங்கள் உள்ளன. சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் இராணுவ வாதம், யுத்தம் என்னும் மாபெரும் தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில்.

ஏற்கனவே கடந்த நூற்றாண்டில் இரு உலக யுத்தங்கள் மூலம் பேரழிவைத் தோற்றுவித்த இலாப முறையையும், உலகைப் போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகள் என்ற அதன் பிரிவினைகளையும் ஒழிப்பதற்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டம் அவசியமாகிறது.

உலக சோசலிச இணையத் தளத்திலிருந்து
நன்றி தினக்குரல்


No comments: