மாவீரனின் தாயொருத்தி -ஆவூரான் மெல்பேர்ண்


.
வீரமாய் பிள்ளை எழுந்தவன்
விடுதலை கேட்டே நடந்தவன்
உடலை வில்லாய் வளைத்தவன்
உயிரினை அம்பாய் தொடுத்தவன்

தாய் நாட்டினை காக்க விளைந்தவன்
தலைவனின் பார்வையில் வளர்ந்தவன்
எதிரின் பாசறை தன்னை எரித்தவன்
எத்தடைகள் யாவையும் தகர்த்தவன்நஞ்சினைக் களுத்தினில் ஏந்தியே
நற்தமிழீழத்தை காணவே
குண்டுகள் பொழியும் நிலத்திலே
குற்றுயிராகியும் போர் புரிந்தவன்

எத்தனை படை வந்து போரிட்டது
எம் புலிவீரரை யார் வென்றது
எட்டப்பர் எம்மிலே உதித்ததினால்
எல்லாமே சுடுகாடாய் போய் நின்றது

மாவீரர் கனவென்றும் அழியாதையா
மண் மீட்கும் பணி என்றும் ஓயாதையா
கல்லறை மீதினில் பாடிடுவோம்
காவிய நாயகர் மேல் ஆணையிடுவோம்

No comments: