தென்னிந்திய இசைக்கு நிகரான இலங்கை கலைஞர்களின் புதிய பாடல்.



.நம்நாட்டுக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள காந்தல் பூக்கும் தீவிலே என்ற பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வரிகளுக்கு வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்துள்ளார்.



இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனுடன் இணைந்து ஜெயபிரதா இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.


கந்தப்பு ஜெயந்தனும் பாடலாசிரியர் அஸ்மினும் இணைந்து உருவாக்கிய 'எங்கோ பிறந்தவளே' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட பாடலாக மாறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழ் இசைத்துறை வேகமாக வளர்ந்து வருகின்றது.இலங்கையிலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர்.

இதனை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் இலங்கை கலைஞர்களின் திறமை எந்தளவுக்கு உலகத்தரத்திற்கு வளர்ந்து வருகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையை சேர்ந்த இந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தென்னிந்திய இசைக்கு நிகரான புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.

இலங்கையின் தமிழ் இசைத்துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. இலங்கையிலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சாட்சியாகும். பாடலாசிரியர் அஸ்மின் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசராக தெரிவு செய்யப்பட்டவராவார்.

வசதிகள் குறைந்த இடத்தில் இருந்துகொண்டு இப்படி பல இசை தொகுப்புக்களை வெளியிட்டு வரும் இவர்களை தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.


No comments: